நோன்பின் சிறப்புகள்
1- நோன்பு எனக்குரியது : நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ‘ நோன்பு எனக்குரியது . நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன் . நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றார் ’ என்று அல்லாஹ் கூறுகின்றான் . ( அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் , புஹாரி 7492). அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மகனுடைய ( மனிதனுடைய ) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன ; அல்லாஹ் கூறுகின்றான் : நோன்பைத் தவிர . ஏனெனில் , நோன்பு எனக்கு உரியதாகும் . அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன் . அவன் எனக்காகவே தனது உண...