இஸ்லாம் கூறும் தூய்மை

 


 

மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை  நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானுடன் இணைத்து சொல்லி இருகின்றார்கள். அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலகீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும்.

எனவே அப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதிலும்வளர்ப்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் கவனம் செலுத்துவது கடமையாகும். இந்த வகையில் அமைந்த ஒன்று தான் மனிதன் பேணவேண்டிய சுத்தம் சுகாதாரமாகும். நமது தேசம்76 ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களை சந்தித்த பிறகு தான் தூய்மை இந்தியா திட்டத்தை முன் வைத்திருக்கின்றது. ஆனாலும் இந்த திட்டம் மக்களை வெல்லுமாஅல்லது மக்கள் கூட்டம் இதை தள்ளுமாஎன்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை 1400 ஆண்டுகளுக்கு முன்பே தூய்மையை திட்டமாகவும்சட்டமாகவும் ஆக்கியது.

உலக முஸ்லிம்களும் காலம்காலமாய் இந்த சுத்தத்தை பாதுகாத்து உலகத்தின் எல்லா சமுதாயத்தவர்களுக்கும் மிகச் சிறந்த முன் மாதிரியாக வாழ்ந்து வருகின்றார்கள்.

 

ü ஈமானும் சுத்தமும்.

والطهور نصف الإيمان

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்சுத்தம் ஈமானின் பாதியாகும்’ என்றார்கள்.

                                                                     நூல். திர்மிதீ

ü பரிசுத்தமும் பாவமன்னிப்பும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஒரு முஸ்லிம் ஒளு செய்தால் முகத்தை கழுகினால் அந்த தண்ணீரோடு அல்லது அதன் கடைசி சொட்டோடு கண்களால் பார்த்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியேறிவிடும் அவன் கைகளை கழுகினால் அவனுடைய கைகளை விட்டும் தன் கைகளால் பற்றி கொண்ட எல்லா பாவங்களும் அந்த தண்ணீருடன் வெளியேறிவிடும். அவன் தனது கால்களை கழுகினால் அந்த கால்கள் எந்த பாவத்தின் பக்கம்  நடந்தனவோ அந்த பாவங்கள் தண்ணீருடன் வெளியேறிவிடு கின்றது ஒளுவின் இறுதியில் அவன் பாவங்களை விட்டு பரிசுத்தமாக்கப் பட்டவனாக வெளியேறுகிறான் என்றார்கள்.

   

நூல் : முவத்தா இமாம் மாலிக்.

 

ü இஸ்லாமும் சுத்தமும்

இஸ்லாம் சுகாதாரம் குறித்து விரிவாக பேசுகிறது எனவே சுத்தத்தை 3 வகையாக பிரிகின்றது.                                                           இடம் சுத்தம்உடல் சுத்தம்உடை சுத்தம்

1.   இடம் சுத்தம்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் சபிக்கப்படும் இரு விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் (அந்த இரு செயல்களையும்) செய்பவர்கள் மக்களால் சபிக்க்ப்படுவார்கள்) அவர்கள் யாரென்றால் மக்களின் நடைபாதையில் மலம்ஜலம் கழித்து அசுத்தம் செய்பவன். அல்லது மக்கள் நிழல் தேடும் மரங்களில் நஜீஸ் கழிப்பவன் என்று கூறினார்கள் அந்த நபிமொழி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்கள் சபிக்கப்பட தகுந்தவர்கள் என்று சொல்வதுடன் அப்படி காரியங்கள் செய்யக்கூடாது என்று வலியுருத்துகிறது. நூல் : முஸ்லிம்

 

             நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஒரு மனிதர் ஒரு பாதையில் நடந்து சென்றால் அப்பாதையில் முள்ளு மரத்தின் ஒரு கிளையை பெற்றுக் கொண்டார். அதை எடுத்து பாதையை விட்டும் அகற்றினார் இதனால் அவருக்கு நன்றி செலுத்தினான். அல்லாஹ் மன்னித்தான் இன்னொரு அறிவிப்பில் அந்த நபர் சுவர்க்கத்தில் உலா வருவதை நான் கண்டேன் என்றார்கள். நூல் : புகாரி.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

உங்களில் ஒருவர் எச்சி துப்பினால் வலது புறமோ தன்னுடைய முன் புறமோ துப்ப வேண்டாம் இடது புறம் அல்லது கால் பாதத்திற்கு கீழ் துப்பட்டும் நூல் : அஹ்மத்

2.உடை சுத்தம்

ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரமும் ஆடை சுத்தத்தை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தை அடைவதற்கு  ஆடை சுத்தமும் கட்டாயமாகும்.

وَثِيَابَكَ فَطَهِّرْ

இந்த சுத்தத்தை வலியிருந்தும் நோக்கத்தில் அல்லாஹ் வஹியின் துவக்கத்தில் உடை சுத்தம் குறித்து நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னான் நபியே உங்களின் ஆடையை   சுத்தம் செய்து கொள்ளுங்கள்(அல் குர்ஆன்74;4 )

ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்த போது ஒரு மனிதரை கண்டார்கள் அவரின் தலை முடி சீர் செய்யப்படாமல் பரட்டையாக இருந்தது நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் இவர் முடியை சரி செய்வதற்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்ளவில்லையாஇன்னொரு மனிதரை அவரின் அழுக்கான நிலையின் கண்டு அவரிடம் ஆடையை கழுவதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளவில்லையாஎன்று கேட்டார்கள்நூல் : அபூ தாவூத்

3.உடல் சுத்தம்

இஸ்லாம் தினமும் ஐந்துவேளை தொழுகையை கடமையாக்குகிறது இதன் மூலம் முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு 5 தடவை தங்களின் உடல் உறுப்புக்களின் ஆளுக்கு படிவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை சுத்தம்  செய்கின்ற   சூழ்நிலையை பெற்றுக் கொள்கின்றனர்

குளிப்பும் அதை தாமதப்படுத்துவதின் குற்றமும்

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.எந்த வீட்டில் உருவப் படங்களோநாய்களோகுளிப்பு கடமையாகியும் குளிக்காததன்  வீடுகளின் ரஹ்மத்தின் மலக்குகள் நுழையமாட்டார்கள்

நூல். மிஸ்காத்.

எந்த மனிதன் குளிப்பு அவசியமான நிலையில் அவனுடைய பர்லு தொழுகை பாதிக்கும் அளவிற்கு குளிப்பை தாமதப் படுத்துகின்றானோ அவனை தான் இந்த நபிமொழி கண்டிக்கிறது.

சுத்தத்தை காப்பதில் சஹாபாக்களின் பேணுதல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் கடமையான குளிப்பின் போது எந்த மனிதன் ஒரு முடியின் அளவிற்கு இடத்தை கழுவாமல் விட்டு விட்டானோ அதற்காக அவன் நரகில் வேதனை செய்யப்படுவான் என்றார்கள் அலி (ரலி) அவர்கள் சொன்னார்கள் நான் இதற்கு பயந்து என் தலை முடியை முழுமையாக சிரைத்து விட்டேன் என்று கூறினார்கள்  

 நூல் : அபூ தாவூத்

ü சுகாதார சீர்கேடும் கபருடைய வேதனையும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்

என்னிடத்தில் ஒரு யூத பெண்மணி வந்தாள் அவள் என்னிடம் சிறு நீர் சரியா சுத்தம் செய்யா விட்டால் அதனால் கப்ரில் வேதனை செய்யப்படும் என்று கூறினால் அவளின் கூற்றை நான் மறுத்தேன் ஆனாலும் அவள் மீண்டும் தான் சொல்வது சரி என்றும் அதனால் யூதர்களான நாங்கள் சிறு நீர் பட்ட இடத்தின் தொலையும் ஆடையும் துண்டித்து விடுகிறோம் என்று சொன்னால் அப்போது தொழுகைக்காக சென்றிருந்த நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள் அந்நேரம் எங்களிடம் சப்தம் கூடி விட்டது நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் நடந்ததை விசாரித்தார்கள் அப்போது நான் அப்பெண் சொன்னதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன் அதக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அந்த பெண் உண்மையை தான் சொன்னார்கள் என்றார்கள் இந்த சம்பவத்திற்கு பின் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்பு தேட ஆரம்பித்தார்கள்    நூல் : நஸாயீ

 

ü சுத்தமும் மலக்குகளின் தொடர்பும்

நாள் முழுவதும் பல்வேறு பணிகளுக்கு பல இடங்களுக்கு மனிதன் செல்வதால் இஸ்லாம் மனிதர்களை இரவில் உறங்க செல்லும் போது உடல் உறுப்புகளை கழுகி சுத்தம் (ஒலு) செய்து கொள்ள ஏவுகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒரு மனிதன் ஒலு செய்து விட்டு சுத்தமான நிலையில் இரவில் தூங்கச் சென்றால் அந்த மனிதனுடைய ஆடையுடன் சேர்த்து  ஒரு மலக்கும் தூங்குபவர் அவன் எப்போது கண் விழித்தாலும் அந்த மலக் அல்லாஹ்விடம் யா அல்லாஹ் இந்த அடியானை மன்னிப்பாயாக என்று துஆ செய்கிறார் என்று கூறினார்கள்.

     நூல் : பைஹகீ

 

 

ü தொழுகையை சீர் குலைக்கும் சுகாதார சீர் கேடு.

ஒரு நபித்  தோழர் சொன்னார்கள்

ஒருநாள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு பஜ்ரு தொழுகையை தொழவைத்தார்கள் அப்போது சூரத்தூர் ரூமை ஓதினார்கள் அந்த சமயத்தில் அவர்களுக்கு கிரா அத்தில் கொஞ்சம் சந்தேகம் ஏற்ப்பட்டது பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறப்பான முறையில் தொழுகையை நிறைவு செய்தார்கள் தொழுகைக்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் சஹாபிகளிடம் கேட்டார்கள் நம்முடன் தொழுகிற சிலருக்கு என்ன கேடு ஏற்ப்பட்டது சுத்தத்தில் பேணுதல் இல்லாத நிலையில் நம்முடன் தொழுகின்றார்கள் யார் நம்முடன் தொழுகின்றாரோ அவர்  ஒலுவை சரியாக அமைத்து கொள்ளட்டும் நமக்கு தொழுகையில் கிரா ஆத்தில் ஏற்ப்பட்ட குழப்பத்திற்கு அவர்கள் தான்  காரணம் என்றார்கள். நூல் : நஸாயீ

 

அந்த சுகாராத்தை பேணுவதில் பன்னெடுங்காலமாக சிறந்த முன் மாதிரியாக விளங்கும் முஸ்லிம்கள் தூய்மை இந்தியா திட்டத்தில் இந்த நாட்டு மக்களுடன் இணைந்து பணியாற்ற என்றும் தயாராகவே இருக்கின்றார்கள் ஏனெனில் இந்த நாடு யாருடைய வீட்டு சொத்தும் அல்ல நாட்டில் வாழ்கிற எல்லா தரப்பு மக்களில் சொத்தாகும்   

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001