தடை செய்யப்பட்ட திருமண உறவுகள்

 

 


 

 

حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். 4:23. 

 

 

 

உலகம் இன்று ஆண் பெண் கலப்பினூடே அனாச்சாரங்களில் மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாமல் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருகிறது.

இந்த ஆண் பெண் கலப்பு என்பது அனாச்சாரத்தின் ஊற்று வாயாக இருக்கிறது.

இந்த ஆண் பெண் கலப்பு அனாச்சாரங்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்ற நிலையையும் தாண்டி மன உளைச்சல், தற்கொலை என்று சிகரம் தொட்டு நிற்கிறது.

இந்த அனாச்சாரங்களினால் தோன்றிய சமூக சீர் கேடுகளில் இருந்து மனித சமூகத்தை மீட்டெடுக்க பல பில்லியன்களை உலகம் செலவு செய்தும் விடிவின்றி தவிக்கிறது.

இந்த முஸ்லிம் சமூகமும் இன்று ஆண் பெண் கலப்பு அனாச்சாரத்தின் ஆழத்தில் சுழியோடி விடிவைத் தேடிக் கொண்டிருக்கிறது.

இந்த அனாச்சாரங்கள் எங்கிருந்து தோற்றம் பெறுகின்றதோ! அந்த வாயிலிலேயே அதற்குறிய அரணையும் இஸ்லாம் மார்க்கம் அமைத்திருக்கிறது.

 

Ø இப்னு அப்பாஸ்  رضي الله عنه அறிவித்தார்; இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’… (புஹாரி, முஸ்லிம்)

 

இந்த மஹ்ரம் எனும்பாதுகாப்பு அரணை எப்படி தெரியாமல் இருக்கமுடியும்; முஸ்லிம் சமூகம் 1400 வருடங்களாக இந்த குர்ஆனை ஓதி வருகிறது.  

 

இந்த பித்னாவின்-அனாச்சாரத்தின் விளிம்பிலிருந்து உலகம் மீள வேண்டும் என்றால்; அது அல்-குர்ஆனினதும் அஸ்-ஸுனாவினதும் போதனையின் பால் மீள வேண்டும்.

 

இந்த இஸ்லாமிய கல்வியின் பால் பொடுபோக்காகவுள்ள முஸ்லிம் சமூகம் அதன் பால் திரும்பி அதனை நடைமுறைப்படுத்தி அனாச்சாரத்தின் வாயிலில் பதுகாப்பு அரணிட்டாலே அன்றி மீட்சி பெற முடியாது.

 

இந்த பித்னா-அனாச்சாரத்திலிருந்து மீண்டெழுந்திட அல்-குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் என்ன பேசுகின்றது? என்பதை கற்றுக் கொள்வது முஸ்லிமான ஆண் மற்றும் பெண் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

 

இந்த ஆண் பெண் கலப்பு அனாச்சாரத்திலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும், தனது சமூகத்தையும் கீழ்வரும் கேள்விகளுக்கான பதிலினூடே இன்-ஷா-அல்லாஹ் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! 

 

Ø இந்த மார்க்கத்தில் மஹ்ரமின் முக்கியத்துவம் என்ன?

மஹ்ரம் என்றால் யார்?

மஹ்ரமின்  வரைவிலக்கணம் என்ன?

இரத்த உறவு (வம்சாவளி) மூலம் ஏற்படும் (மஹ்ரம்கள்) யார்?

பால்குடி உறவு மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

திருமண உறவின் மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

 

ü மஹ்ராம் என்றால் என்ன...???

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)

இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே

Ø நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

 

Ø சித்தி மகளை மணமுடிக்கலாமா?

தாய், தகப்பன் என்றால் அவர்கள் நம்மைப் பெற்றெடுத்திருக்க வேண்டும். மகன், மகள் என்றால் அவர்கள் நாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக இருக்க வேண்டும். சகோதரன், சகோதரி என்றால் அவர்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சித்தப்பா, மாமி என்றால் தந்தையுடன் பிறந்திருக்க வேண்டும். சித்தி, தாய் மாமன் என்றால் தாயுடன் பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளே இறைவனின் படைப்பில் உண்மையான உறவுகள்.

இரத்த சம்பந்தப்பட்ட உறவில், உடன் பிறந்த சகோதரி திருமணம் செய்து கொள்ள விலக்கப்பட்டவராவார். இதே தகுதியில் உடன் பிறவாத, ஒரே தாயிடம் பால் குடித்திருக்காத, வேறொரு பெண்ணைச் சகோதரி என்று சொல்லுவதால் அந்தப் பெண் மணமுடிக்க விலக்கப்பட்டவராக ஆகி விடுவதில்லை. சகோதரி என்று குறிப்பிட்டதால் மணமுடிக்க ஆகாதவர் என்று எண்ணுவது இறைவன் அனுமதித்ததை மறுப்பதாகும் என்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கை பெற வேண்டும்.

தாயின்  சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் தாயின் சகோதரியுடைய மகளை இறைவன் குறிப்பிடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைத் தடை செய்யவில்லை. எனவே தாயின் சகோதரியுடைய மகளை மணந்து கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய தாயின் சகோதரியின் மகள் ஆகுமானவர் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُؤْمِنَةً إِنْ وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம்.(33:50)

Ø வளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியுமா?

இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளில் இன்னாருக்கு இன்னார் வாரிசு என இறைவன் படைத்திருக்க, உண்மையான தந்தை, மகன், மகள் உறவை மாற்றுவது இறைவனின் அதிகாரத்தில் கைவைப்பதாகும். இறைவனுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தில் மனிதன் தலையிட்டு இங்குப் படைப்பின் வம்சா வழியைப் பொய்ப்பிக்கிறான் என்று இச்செயலுக்குப் பொருள் ஆகும். காட்டாக, ஹஸன் என்பவருக்குப் பிறந்த உஸ்மான் என்ற குழந்தையை அப்துல் காதர் என்பவர் தத்தெடுக்கிறார் எனக் கொள்வோம். ஹஸனின் மகன் உஸ்மான் என்று இறைவன் படைத்திருக்க, அப்துல் காதரின் மகன் உஸ்மான் என்று மனிதர்கள் மாற்றுவதை இஸ்லாம் கண்டிக்கிறது.

"யார் தம் தந்தை அல்லாத ஒருவரை - அவர் தம் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று கூறுவாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6766, முஸ்லிம் 115)

மேற்காணும் நபிமொழி, மரியாதையின் நிமித்தம் பெரியோர்களை அப்பா என்று வெறும் வார்த்தையாக அழைப்பதைத் தடுக்கவில்லை. மாறாக, இரத்த சம்பந்தமான உறவு ஏற்பட்டு விட்டது போல் தந்தை அல்லாத ஒருவரை, அவர் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே தந்தை என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தடை செய்கிறது.

இந்நபிமொழியின் அடைப்படையில் தனக்குப் பிறக்காத மகனை, அவர் தன் மகன் இல்லை என்று தெரிந்து கொண்டே மகன் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது.

ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியர்க்கு அவர்கள் பெற்றெடுத்த ஒரு பெண் குழந்தை இருக்குமெனில் இந்த இருவரிடையே அண்ணன் தங்கை என இரத்த சம்பந்தப்பட்ட உறவு இல்லை. இவர்கள் பருவமடையும்போது இருவரும் மணம் புரிந்து கொள்ள நாடினால், இஸ்லாமிய அடிப்படையில் அது ஆகுமானதாகும் என்பதை மறுக்கக்கூடாது, இருவரும் ஒரே தாயிடம் பால் குடித்திருந்தாலே தவிர. அவ்வாறு மறுப்பவர்கள் இறைவன் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

, தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியரின் குடும்பத்தாரோடு வளர்ப்புப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் இரத்த உறவு இல்லை. அதனால் சித்தி, தாய்மாமன், மாமி, சித்தப்பா போன்ற மேலே குறிப்பிட்டுள்ள இரத்த உறவுகள் ஏற்படா. அதாவது இங்கு மஹரம் ஒரு போதும் ஏற்படாது. குழந்தை பிறந்த குடும்பத்தில் தான் இரத்த உறவுகளும், மஹரமும் ஏற்படும்.

இவ்வளவு விஷயங்களையும் உள்ளடக்கியே, "உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை" என்ற வசனம் அமைந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து,

"இது உங்கள் வாய்களால் கூறும் (வெறும்) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்" என தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் என்று சொல்வது (வெறும்) வார்த்தைதானே தவிர நீங்கள் அவ்வாறு சொல்வதில் எந்த உண்மையும் இல்லையென இவ்வசனம் நிறைவடைகிறது.

அடுத்த வசனம்:

"அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்" (அல்குர்ஆன் 033:005)

மேலதிக விரிவுரை தேவையில்லை எனும் அளவுக்கு இந்த வசனம் தெளிவாக அமைந்திருக்கிறது. கேள்வி கேட்ட சகோதரர், "தந்தை யாரென அறியப்படாத நிலையில் எங்கள் குழந்தையாக நாங்கள் கொள்ளலாமா? என்ற ஐயத்திற்கு நேரடி விளக்கமாக ''அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரராவர்'' என்று இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

இந்த இறைவசனத்தின் பின்னணியைச் சற்று நோக்குவோம்:

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன் தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை விடுதலை செய்து, பின்னர் அவரை வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். "எனக்கு ஸைது வாரிசாவார், ஸைதுக்கு நான் வாரிசாவேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருந்தார்கள். நபித்துவ வாழ்விற்கு முன்பு நடந்தது இச்சம்பவம். நபித்துவம் பெற்று மதீனா வந்த இரண்டாம் ஆண்டில் மேற்கண்ட வசனங்கள் அருளப்படும் வரை, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாகக் கருதி, வளர்ப்புத் தந்தையின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாக வருவதும் நடைமுறையில் இருந்தது. 033:005வது வசனம் அருளப்பட்ட பின்னர் இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டது.

"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (033:005) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மது (முஹம்மதின் மகன் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்"(புகாரி, 4782)

வளர்ப்புப் பிள்ளை வாரிசாக்கப்பட்டும், வளர்ப்புத் தந்தையின் பெயரைச் சேர்த்தே வளர்ப்பு மகன் அழைக்கப்பட்டும் வந்த அறியாமைக் கால வழக்கத்தைத் தடை செய்து, தத்தெடுக்கும் சுவீகாரப் புத்திரர்களை வளர்ப்புப் பிள்ளை என்ற எண்ணத்தில் மகன் என அழைத்துக் கொள்ள இறைவன் அனுமதிக்கிறான். இதற்கு மாறாக,வளர்ப்புப் பிள்ளையை சொந்த மகனாகவோ, மகளாகவோ உள்ளத்தால் தீர்மானிப்பதைக் குற்றமென இறைவசனம் கூறுவதால் அதிலிருந்து விலகி விடுவதே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும்.

 

 

 

 

 

 

 

 

 

இஸ்லாத்தில் அஜ்னபி மஹ்ரம் உறவுகளை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
• பிறப்பாலும், திருமண உறவாலும் நமக்கு உறவு முறைகள் ஏற்படுகின்றன!
• திருமணத்தின் மூலம் இணைந்த தம்பதியர் தலாக் மூலம் பிரிந்து விட்டாலும் தம்பதியருக்குப் பிறந்த பிள்ளைகள் தந்தைவழி, தாய்வழி என இரு குடும்பங்களின் இரத்த உறவு ஏற்படுகிறது!
• தந்தையின் மூலம் பாட்டன், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை/மாமி என உறவுகள் ஏற்படுகிறது!
• தாயின் மூலம் பாட்டன், பாட்டி, பெரியம்மா, சின்னம்மா, தாய் மாமன் என உறவுகள் ஏற்படுகிறது!
• திருமணம் உறவு முறிந்து விட்டாலும் திருமண உறவால் உருவான உறவுகள் முறிக்க முடியாத நிலையான உறவுகளாக மாறிவிடுகிறன்றன!
• ஒரு ஆணோ பெண்ணோ யாரைத் திருமணம் செய்ய தடுக்கப்பட்டு உள்ளார்களோ அவர்கள் மஹ்ரமான உறவுகள் ஆவர்கள்! அவர்களுடன் நாம் தனிமையில் இருக்கலாம் பழகலாம் பயணம் செய்யலாம்!
• மஹரமான உறவுகளை தவிர மற்றவர்கள் மஹ்ரம் இல்லாத உறவினர்கள் ஆவர்கள்! மஹ்ரம் இல்லாத உறவினர்கள் உடன் தனிமையில் இருக்க கூடாது ஆடை ஒழுக்கம் பேச்சு ஒழுக்கம் பேன வேண்டும்!
• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று நம்முடைய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அஜ்னபி மஹ்ரம் பேனாமல் அலட்சியமாக விட்டு விடுவதனால் சுமுகத்தில் எவ்வளவு சீர் கேடுகள் எவ்வளவு பாவங்கள் இதனால் ஏற்படுகிறது! நவதுபில்லாஹ்!
• அஜ்னபி மஹ்ரம் என்றால் என்ன ஆண் அல்லது பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் யாரை திருமணம் செய்ய கூடாது என்பதை பற்றி பார்ப்போம்!
💟
 அஜ்னபி மஹ்ரம் பேணுதல் :
மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது!(அல்குர்ஆன் : 17:32)

• விபச்சாரத்தின் பக்கம் நெருக்காதீர்கள் என்பது அந்த பாவத்தை தூண்டும் செயலின் பக்கம் கூட செல்ல கூடாது என்று அல்லாஹ் கூறி உள்ளான்!
• விபச்சாரத்தின் பக்கம் செல்ல கூடாது என்பதற்க்கு அல்லாஹ் கூறும் வழி 1) பார்வையை தாழ்த்தி கொள்ளுவது! 2) அஜ்னபி மஹ்ரம் பேணுதல் ஆகும்!
• நாம் மேலே அல்லாஹ் கூறிய இரண்டையோ அல்லது ஒன்றையோ விட்டு விடுவதனால் நாம் ஜினா (விபச்சாரத்தின்) பக்கம் எளிதாக சென்று விடுகிறோம்!
• அல்லாஹ்வே நேரடியாக அல் குர்ஆனில் அஜ்னபி மஹ்ரம் சட்டம் பற்றி விரிவாக ஒவ்வொரு உறவையும் குறிப்பிட்டு கூறி உள்ளான்! ஆனால் நம்மில் பலர் அதில் அலட்சியமாக உள்ளோம்!
💟
 ஆண்களுக்கு மஹ்ரமான உறவுகள் :
1) பெற்றெடுத்த தாய் அல்லது தந்தையின் மனைவி (தாய்கள்)
2) பெண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரிகள்
• உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி!
• தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள் (மாமி / அத்தை)
5) தாயின் உடன் பிறந்த சகோதரிகள் (பெரியம்மா / சின்னம்மா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் பெண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்கள்
😎
 பால்குடிச் சகோதரிகள்
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்!(நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது!(நூல் : புகாரி : 2640)
9) மனைவியின் தாய் (மாமியார்)
10) மகன்களின் மனைவியர்கள் (மருமகள்கள்)
11) இரண்டாவதாக திருமணம் செய்த மனைவியின் பெண் பிள்ளைகள்
• இரண்டாவது மனைவியுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளாமல் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது மனைவியின் பெண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்!(அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு ஆணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய பெண்களே!


💟
 பெண்களுக்கு மஹ்ரமான உறவுகள் :
1) பெற்றெடுத்த தந்தை அல்லது தாயின் இரண்டாவது கணவன்!
2) ஆண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரர்கள்
• தாய் இன்னொரு ஆணை திருமணம் செய்து அந்த ஆணின் மூலம் பிறந்த ஆண் பிள்ளைகள்! இவர்களும் நமக்கு சகோதரர்கள் ஆவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரர்கள் (மாமா / சித்தப்பா)
5) தாய் உடன் பிறந்த சகோதரர்கள் (பெரியப்பா / சிச்சா)
6) உடன் பிறந்த சகோதரன் &சகோதரியின்ஆண்பிள்ளைகள்

7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களின் பிள்ளைகள் (பால்குடிச் சகோதரர்கள்)
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை தான் பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்!(நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது!(நூல் : புகாரி : 2640)
😎
 கணவனின் தந்தை (மாமனார்)
9) மகள்களின் கணவன்மார்கள் (மருமகன்கள்)
10) இரண்டாவதாக திருமணம் செய்த கணவனின் ஆண் பிள்ளைகள்
• இரண்டாவது கணவனுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளுவதற்கு முன் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது கணவனின் ஆண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்!(அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு பெண்ணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய ஆண்களே!
💟
 மஹரம் மற்றும் மஹரம் அல்லாதவர்களுடன் பேன வேண்டிய ஒழுக்கம் :
💜
 மஹரமான உறவுகள் உடன் பேன வேண்டிய ஒழுக்கங்கள் :
• ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக மஹரமான உறவுகள் உடன் பேன வேண்டிய ஒழுக்கங்கள்!

1) மஹ்ரமான உறவுகளை பொறுத்த வரை அவர்கள் நமக்கு அனுமதிப்பட்ட ஹலால் ஆன உறவுகளே!
2) மஹ்ரமான உறவுகளை திருமணம் செய்து கொள்ள முடியாது! (திருமணம் செய்து இருந்தாலும் அது செல்லுபடி ஆகாது)
• ஒரு பெண் திருமணம் ஆகி கணவன் உடன் வாழ்ந்து கொண்டு இருந்தால் அந்த பெண் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது ! ஆனால் அந்த பெண் தன் கணவனிடம் இருந்து தலாக் பெற்று தலாக் உடைய இத்தா காலம் முடிந்து விட்டால் வேறு ஆணை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! அல்லது கணவன் இறந்து இத்தா காலம் முடிந்து விட்டால் வேறு ஒரு ஆணை நிக்காஹ் செய்து கொள்ள முடியும்!
3) மஹ்ரமான உறவுகள் உடன் தனிமையில் இருக்கலாம் பயணம் செய்யலாம்! நல்ல முறையில் பழகவும் பேசவும் செய்யலாம்!(நூல் : முஸ்லிம் : 2611)
4) ஒரு பெண் மஹரமான உறவுகள் முன் தனது அழகாரத்தை வெளிப்படுத்தலாம்!
குறிப்பு : மஹ்ரம் உறவுகள் என்றாலும் கணவனை தவிர்த்து மற்றவர்கள் உடன் ஆடை ஒழுக்கம் பேணுவது சிறந்தது ஆகும்!
❤️
 மஹ்ரம் இல்லாத உறவுகள் உடன் பேன வேண்டிய ஒழுக்கங்கள் :
• ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக மஹ்ரம் இல்லாத உறவுகள் உடன் பேன வேண்டிய ஒழுக்கங்கள்!
• மஹ்ரம் இல்லாத உறவுகள் பொறுத்த வரை இவர்கள் நமக்கு அந்நீயர்களே! மஹரமான உறவுகளுக்கு அப்படியே எதிரானவர்கள்!
1) மஹ்ரம் இல்லாத உறவுகளை பொறுத்த வரை அவர்கள் நமக்கு அனுமதிப்படாத (ஹராமான) ஆன உறவுகள் ஆவர்கள்!
2) மஹ்ரம் இல்லாத உறவுகளை திருமணம் செய்து கொள்ள முடியும் !
• ஒரு ஆண் நான்கு திருமணம் முடித்து நான்கு மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தால் வேறு எந்தப் பெண்ணையும் அவன் மணமுடிக்க முடியாது! நான்கு மனைவிமார்க்களில் யாரேனும் ஒருவர் தலாக் கூறி பிரிந்து விட்டால் அல்லது நான்கு மனைவியில் யாரேனும் ஒருவர் மரணித்து விட்டால் மட்டுமே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியும்!
3) மஹ்ரம் இல்லாத உறவுகள் உடன் தனிமையில் இருக்க கூடாது! தனிமையில் பயணம் செய்ய கூடாது!(நூல் : முஸ்லிம் : 2611)
• பயணத்தை பொறுத்த வரை பெண்கள் உடன் ஒரு மஹரமான உறவை அழைத்து செல்ல வேண்டும் தனிமையில் செல்லுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்!
4) மஹ்ரம் இல்லாத உறவுகள் உடன் அவசிய தேவை கருதி வேறு எதற்கும் பேச கூடாது! அதே போன்று பேச்சில் குழைத்து (நளினம்) பேச கூடாது!(33 : 32)
5) பெண்ணாக இருந்தால் மஹ்ரம் இல்லாத உறவுகள் முன் ஹிஜாப் பேன வேண்டும்! பார்வை தாழ்த்த வேண்டும்! அவசிய பேச்சு தவிர மற்ற பேச்சகள் பேச கூடாது! தனது அழகாரத்தை வெளிப்படுத்த கூடாது!
6) ஆணாக இருந்தால் மஹ்ரம் இல்லாத உறவுகள் முன் பார்வை தாழ்த்த வேண்டும் பேச்சு ஒழுக்கம் பேன வேண்டும்!
7) சிறிய வயது பிள்ளைகள் அதவாது கருத்து அறியாத பிள்ளை மற்றும் தள்ளாடும் வயது உடையவர்கள் அதவாது பெண்கள் மீது ஆசை அற்றவர்கள் இவர்கள் முன் நாம் மஹரம் ஆன உறவுகள் உடைய சட்டம் பேனலாம்!(அல்குர்ஆன் : 24 : 31)
😎
 அந்நிய ஆணையோ அல்லது அந்நிய பெண்ணையோ தொட கூடாது! (மிகவும் நிர்ப்பந்த சூழ்நிலை தவிர)
9) அந்நிய பெண்கள் அல்லது அந்நிய ஆண்கள் உள்ள இடங்களுக்கு அவசிய தேவை இல்லாமல் செல்ல கூடாது!
(நூல் : முஸ்லீம் : 4383)
10) ஆணுக்கு மனைவியின் உடன் பிறந்த சகோதரிகள் (கொழுந்தியா) அந்நிய பெண்களே! இதை பற்றி நேரடியாக அல் குர்ஆனில் கிடையாது! ஆனால் அவர்களை நிக்காஹ் செய்து கொள்ள வழி உள்ளதால் அவர்கள் அந்நிய பெண்களே!

• அதே போன்று ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியாக ஆக்கி கொள்ள கூடாது! மனைவி இறந்து விட்டால் அல்லது மனைவி தலாக் விட்டால் மட்டுமே அவர்களின் சகோதரியை நிக்காஹ் செய்து கொள்ள முடியும்!(அல் குர்ஆன் : 4 : 23)
• ஒரு ஆண் தனது மனைவியின் சகோதரிகள் உடன் சகஜமாக பழகுவது மரணத்திற்கு நிகரான ஒரு செயல் ஆகும்! நபி (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்து உள்ளார்கள்!(நூல் : முஸ்லிம் : 4383)
11) ஒரு பெண்ணுக்கு கணவனின் உடன் பிறந்த சகோதரரர்கள் (கொழுந்தனார்கள்) அந்நிய ஆண்களே ! இதை பற்றி நேரடியாக அல் குர்ஆனில் கிடையாது! ஆனால் அவர்களை நிக்காஹ் செய்து கொள்ள வழி உள்ளதால் அவர்கள் அந்நிய ஆண்களே!
• கணவனை தலாக் விட்டால் அல்லது கணவன் இறந்து விட்டால் இத்தா காலம் முடிந்த பிறகு அந்த பெண் விருப்பம் பட்டால் கணவனின் சகோதரனை நிக்காஹ் செய்து கொள்ள முடியும்!(அல் குர்ஆன் : 4 : 23)
• ஒரு பெண் தனது கணவனின் சகோதரர்கள் உடன் சகஜமாக பழகுவது மரணத்திற்கு நிகரான ஒரு செயல் ஆகும்! நபி (ஸல்) அவர்கள் கண்டித்து உள்ளார்கள்!
(நூல் : முஸ்லிம் : 4383)
12) ஒரு ஆணுக்கு மனைவி உடைய அண்ணன் அல்லது தம்பி உடைய மனைவிகள் மஹ்ரம் இல்லாத உறவுகள் ஆவர்கள்!
13) ஒரு பெண்ணுக்கு தனது கணவனின் சகோதரி உடைய கணவன் மஹ்ரம் இல்லாதவர்கள் ஆவர்கள்!
💟
 கூட்டு குடும்பத்தில் எவ்வாறு மஹரமான உறவுகள் பேணுவது :
• தனி குடுத்தனம் உடன் வாழும் போது எளிதாக மஹ்ரம் பேனலாம் ஆனால் அதே கூட்டு குடும்பமாக வாழும் போது சற்று கடினமாக ஆகி விடுகிறது!

 

 

• கூட்டு குடும்பத்தில் எவ்வாறு மஹரம் பேன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!
💜
 ஸலாம் கூறி வீட்டிற்குள் நுழைதல் :
• வீட்டிற்குள் நுழையும் போது ஸலாம் கூறி நுழைய வேண்டும்!(அல்குர்ஆன் : 24 : 27)
• நமது வீடு இல்லாமல் மற்ற வீட்டிற்கு செல்வதாக இருந்தால் கட்டாயம் ஸலாம் கூற வேண்டும் பின்பு மூன்று முறை தமது பெயரை தெளிவாக கூறி அனுமதி கேட்க வேண்டும் அனுமதி கொடுக்க வில்லை என்றால் அல்லது திரும்பி சென்று விடுங்கள் என்றால் நாம் திரும்பி வந்து விட வேண்டும்!(அல்குர்ஆன் : 24 : 28) - (நூல் : புகாரி : 6250)
💜
 மூன்று முக்கிய நேரங்கள் :
• பொதுவாக ஆண் பெண்கள் மூன்று நேரங்களில் ஓய்வு எடுத்து கொண்டு இருப்பார்கள் இதை அல்லாஹ் அந்தரங்க நேரம் என்று கூறுகிறான்!
1) ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு    2) நண்பகல்
3) இஷா தொழுகைக்கு பிறகு(அல்குர்ஆன் 24 : 58 & 59)
• இது போன்று நேரங்களில் நாம் ஓய்வு எடுத்து கொண்டு இருப்போம் அல்லது கணவன் உடன் தனித்து இருப்போம் இந்த நேரத்தில் நமது ஆடைகள் எப்படி வேண்டும் என்றாலும் கலைந்து இருக்கலாம்!
• அதனால் இது போன்ற நேரங்களில் செல்வதாக இருந்தால் கட்டாயம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்!
💜
 பிறர் வீட்டுக்கு சென்றால் பார்வை பேணுதல் :
• நாம் பிறர் வீட்டுக்கு சென்றால் வீட்டின் வாசளுக்கு நேராக நிற்க கூடாது! நம்மை அறியாமல் பார்வை உள்ளே சென்று விட்டால் அல்லது உள்ளே இருக்கும் பெண்களை பார்த்து விட்டால் பின்பு அனுமதி கேட்பது அர்த்தம் அற்றதாக ஆகி விடும்!
• பிறர் வீட்டுக்கு நாம் சென்றால் நாம் வீட்டின் வாசல் பக்கமோ அல்லது ஜன்னல் பக்கமோ நிற்க கூடாது அதை தவிர்த்து ஒரு பக்கமாக நின்று பார்வை பேணி அழைக்கலாம்!


💜
 ஆடை ஒழுக்கம் பேன வேண்டும் :
• கூட்டு குடும்பத்தில் மஹரம் இல்லாத அந்நிய ஆணோ அல்லது பெண்ணோ இருந்தால் நாம் முதலில் ஆடை ஒழுக்கம் பேன வேண்டும் அதற்கு என்று ஹிஜாப் அணித்து கொண்டு இருக்க வேண்டும் என்று அல்ல! அழங்காரங்களை மறைத்து கண்ணியமாக ஆடை பேன வேண்டும்!(நூல் : புஹாரி : 5176)
• நாம் பிறர் விட்டு செல்லும் போது அனுமதி பெரும் வரை வீட்டின் உள்ளே பாக்க கூடாது! அனுமதி இல்லாமல் பிறர் வீட்டின் உள்ள பார்க்க கூடியவர்களின் கண்ணை கூட நபி (ஸல்) அவர்கள் பறிக்க கூட அனுமதி கொடுத்து உள்ளார்கள்!(நூல்: புகாரி : 6902)

💜
 தனிமையை தவிர்த்து கொள்ள வேண்டும் :
• கூட்டு குடும்பமாக இருந்தாலும் நாம் மஹரம் இல்லாத உறவுகள் உடன் தனிமையில் இருக்க கூடாது!(நூல் : முஸ்லிம் : 2611)
💜
 வீண் பேச்சுகள் தவிர்த்து கொள்ள வேண்டும் :
• அவசிய தேவை இல்லாமல் வீணான பேச்சுகளை பேசி கொள்ளுவது நகைச்சுவையாக பேசி கொள்ளுவது கூடாது! அவசிய தேவையான பேச்சுகளை கண்ணியமாக முறையில் நாம் பேசி கொள்ளலாம்!
• உதாரணமாக :• வீட்டுக்கு உறவினர்கள் வருகிறார்கள் அதில் மஹரம் இல்லாத உறவுகளும் உள்ளார்கள் ஆனால் நாம் விருப்பம் பட்டால் நாம் அவர்களுக்கு கண்ணியமான ஆடை மற்றும் பேச்சு ஒழுக்கத்துடன் பணிவிடை செய்யலாம்!(நூல் : புஹாரி : 5176)
• இஸ்லாம் பேசவே கூடாது கட்டாயம் ஹிஜாப் பேன வேண்டும் என்று கூட்டு குடும்பத்தின் விசயத்தில் கூற வில்லை அதே நேரத்தில் நெருக்கி பழகுங்கள் என்று வரம்பு மீறவும் கூற வில்லை! இரண்டிற்கும் மத்தியில் நாம் நீதமாக இருக்க வேண்டும்!
• மிக முக்கியமானது : இந்த சட்டம் நெருக்கிய உறவினர்கள் மட்டுமே! நெருக்கிய உறவினர்கள் அல்லாத வெளியே உள்ள மற்ற உறவினர்கள் அந்நிய ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இந்த சட்டம் பொருந்தாது!
• இன்று பெரும்பாலான குடும்பங்களில் மஹ்ரம் பேணுவது கிடையாது அண்ணன் போன்று சகோதரி போன்று பழகி கொண்டு உள்ளார்கள் அவர்களுடன் ஒன்றாக வாகனத்தில் செல்லுவது போன்று காரியங்கள் செய்கிறார்கள் இது குற்றமான செயல் ஆகும்! இது பாவத்திற்கு வழி வகுக்கும்!
💟
 மஹரமான உறவுகள் பேன வில்லை என்றால் ஏற்படும் சமூக சீர் கேடுகள் :
• அல்லாஹ் நம்மை பாதுகாக்கணும்! இந்த அஜ்னபி மஹ்ரம் பேனாமல் இன்று சமூகத்தில் எவ்வளவு சீர் கேடுகள் ஏற்படுகின்றன!
• அஜ்னபி மஹ்ரம் பேனாமல் இன்றும் பல அலட்சியமாக விட்டு விடுவதால் தான் ஓடி செல்லுவது! ஹராமான உறவை (கள்ள தொடர்பு) ஏற்படுத்தி கொள்ளுவது! மனைவியின் சகோதரி உடன் ஹராமான உறவை ஏற்படுத்தி கொள்ளுவது போன்று அவலம் ஏற்படுகிறது!
• இன்று காஃபிர்கள் உடன் முஸ்லீம் பெண்கள் ஓடி போவதற்கு முக்கிய காரணம் அஜ்னபி மஹ்ரம் பேனாமல் இருப்பது தான் காஃபிர் பெண்ணுக்காக பெற்ற பெற்றோர்களையோ அடிக்க துணியும் ஆண் பிள்ளைகள் காரணம் அஜ்னபி மஹ்ரம் பேனாமல் இருந்தது தான்!
• பிள்ளை மீது அளவு கடந்த நம்பிக்கை உலக மோகம் அஜ்னபி மஹ்ரம் பேனாமல் பிள்ளைகளை பெற்றோர்கள் விட்டு விடுகிறார்கள் பின்பு வாழ்கை முழுவதும் கஷ்டம் பட்டு கொண்டு இருக்கின்றார்கள்!
• இன்னும் சிலர் boy friend - girl friend என நண்பர்களை வைத்து கொள்ளுகிறார்கள் இதுவும் இஸ்லாத்தில் கூடாது! இவர்களும் அந்நிய ஆண் / பெண்ணே! இவர்களிடமும் மஹ்ரம் பேன வேண்டும்!
• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றைய காலத்தில் உலக கல்வி கொடுப்பதின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு என்றால் இஸ்லாம் இரண்டாவது முதலாவது உலக கல்வி தான் என்று மஹ்ரம் பேனாமல் இரவில் கூட உலக கல்வி கற்க அனுப்பி வைக்கிறார்கள்! இதனாலேயே பின்னால் மஹ்ரம் இல்லாத காஃபிர்கள் உடன் கூட சர்வசாதாரணமாக பழகி கொண்டு உள்ளார்கள்! பெற்றோர்கள் எனது பிள்ளை பற்றி எனக்கு தெரியும் அவன் / அவள் மேல் நம்பிக்கை உள்ளது விட்டு விடுகிறார்கள் பின்பு மகள் அப்படி செய்து விட்டால் பிள்ளை இப்படி செய்து விட்டால் என்று புலம்பி கொண்டு இருப்பது! இதுவும் குற்றமான செயல் ஆகும்!
• இன்னும் சிலர் அஜ்னபி மஹ்ரம் சட்டம் தெரிந்தும் அதை பின் பற்றாமல் உள்ளார்கள்! எனக்கு அவர்கள் அண்ணன் போன்று சகோதரன் போன்று அல்லது எனக்கு அவர்கள் சகோதரி போன்று நல்ல நண்பர்கள் நாங்கள் என்று பழகி கொண்டு உள்ளோம் சிறு வயதில் இருந்து பழகி கொண்டு உள்ளோம் என்று எல்லாம் கூறுவார்கள் இதுவும் குற்றமான செயல் ஆகும்!
• இன்னும் சில குடும்பங்களில் கணவன் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் அல்லது ஆண் பிள்ளை அப்படி தான் இருப்பான் பெண் தான் மஹ்ரம் பேன வேண்டும் ஆண்கள் வெளியே செல்ல கூடியவர்கள் என்று வெட்கம் இல்லாமல் கூறுவார்கள் இவ்வாறு கூறினாலும் சரி குற்றம் குற்றம் தான் அதற்க்கு துணை போக கூடியவர்களுக்கும் இதில் பங்கு உண்டு!
• அஜ்னபி மஹ்ரம் எல்லாம் ஆரம்ப காலத்தில் வந்தது இப்போது உள்ள காலத்தில் எல்லாம் பின் பற்றவது இயலாது என்று அலட்சியமாக கூறுகிறார்கள் ஆனால் அஜ்னபி மஹ்ரம் சட்டம் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றால் அல்லாஹ்வே ஒவ்வொரு உறவையும் குறிப்பிட்டு இவர்கள் மஹ்ரம் இவர்கள் மஹ்ரம் இல்லாதவர்கள் என்று கூறி உள்ளான் என்றால் நாமே அந்த சட்டத்தின் உடைய மதிப்பை விளங்கி கொள்ளலாம்!

@அல்லாஹ் போதுமானவன்

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001