குடும்ப தகராறுகள்

 


 

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். 4:1

 

 அல்லாஹ் நமக்கு வழங்கிய நிஃமத்துக்களில் ஒரு பெரும் நிஃமத்குடும்ப அமைப்பு.

குடும்பம்னு ஒன்னு இல்லேன்னா நம்ம வாழ்கை எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தா அதன் அருமை புரியும்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் இந்த உலகிலிருந்து முதலில் தொடர்பாவது உறவுதான். அத்தா அண்ணன் மாமா சின்னம்மா என்ற உறவுகள் உடனடியாக வந்து ஒட்டிக் கொள்கின்றன. அந்த உறவுகளே இறுதியாக ஒரு மனிதரை மண்ணரைக்கு கொண்டு செல்வது வரை உடன் வருகின்றன.

இதன் அருமையை புரிந்து கொள்ளாமல் தற்போது முஸ்லிம் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து வருகின்றன.

-------------------------------------------------------

அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்... மனநலவியல் அடுக்கும் காரணங்கள்!

து ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை உயர் நீதிமன்ற வளாகம். முன்பு ஒன்றாக இருந்து, இப்போது தனியாகப் பிரிந்திருக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் பிரிவு கட்டடத்தின் ஒரு தாழ்வாரம். வரிசையாக ஆண்களும் பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெஞ்சில் அந்த ஆண் அமர்ந்திருக்கிறான். அவன் முகத்தை வெகு கவனமாகத் தவிர்த்தபடி மனைவி இன்னொரு புறம் அமர்ந்திருக்கிறாள். அவர்களின் மூன்று வயதுக் குழந்தை கையில் இருக்கும் பலூனைத் தூக்கி அம்மாவின் பக்கம் வீசுவதும், பிறகு அப்பாவின் மேல் விடுவதுமாக விளையாடிக்கொண்டிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் அந்த பலூன் வெடித்துவிடும் என்பதையும், அதேபோல அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உறவும் வெடிக்கப்போகிறது என்பதையும் உணராத குழந்தை உற்சாகமாக விளையாடுகிறது. அந்தத் தம்பதி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி வந்திருப்பது விவாகரத்து தொடர்பாக! 

Pause

விவாகரத்து வழக்குகளை கனிவோடுதான் அணுகுகிறது நம் சட்டம். சனி, ஞாயிறுகளிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் இயங்குகின்றன. முக்கியமாக பிரபலங்களின் வழக்குகள் இந்த தினத்தில்தான் விசாரணைக்கு வருகின்றன. மணமுறிவு கோரும் தம்பதியரை முதலில் கவுன்சலிங்குக்கு அனுப்புகிறார்கள். அங்கேயும் சமரசம் ஏற்படாத நிலையில்தான் வழக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. விவாகரத்து வழக்கை ஒரு வழக்குறைஞர்தான் தாக்கல் செய்வார் என்றாலும், அவரால் நேரடியாக நீதிமன்றத்தில் வாதாட முடியாது. விவாகரத்து கோருபவர் தன் தரப்பு நியாயங்களை அவரேதான் எடுத்துச் சொல்ல வேண்டும். குடும்ப நல நீதிமன்றங்களால் தீர்க்கப்பட முடியாத வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன. சட்டம், திருமண உறவு அவ்வளவு எளிதாக முடிவுக்கு வந்துவிடக் கூடாது என நினைப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைக்கு அதிகரித்துவரும் மணமுறிவுகளுக்கு என்ன காரணம்? விவாகரத்து வரை உச்சம்பெறும் தம்பதியருக்கு இடையிலான விரிசலின் உளவியல் சிக்கல்தான் என்ன?

2016-ம் ஆண்டின் ஒரு கணக்குப்படி, உலக அளவில் விவாகரத்து வழக்குகளில் முன்னிலையில் இருப்பது ஐரோப்பா (சில நாடுகள்), அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்து இங்கிலாந்து. இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, சதவிகிதம் கணக்கில் இந்தியா மிக மிகப் பின்னால் இருக்கிறது. ஆனாலும், அதிகரித்துவரும் மணமுறிவு வழக்குகள் கொஞ்சம் அச்சப்படுத்தவும் செய்கின்றன. மனம் விசித்திரமானது, எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கும் என தெரியாது. ஆனாலும், வாழ்க்கை விஷயத்திலும்கூட விபரீத முடிவுகளை மனதால் எடுக்க முடியுமா... அந்த நிலை வரும் அளவுக்கு அப்படி என்ன சிக்கல், வாழ்க்கை நெருக்கடி? 

வரதட்சணை, ஆண்மைக்குறைபாடு என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக நான்குதான் இந்தியாவில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், விருப்பமில்லா திருமணம், திருமணத்துக்கு வெளியே உறவு (Adultery), வேடிக்கையை விரும்பும் இன்றைய தலைமுறை (Fun-Loving Generation). இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது புனிதம், பாரம்பர்யம் எனக் கருதப்படும் ஒன்று. அது எளிதாக முறிவுக்கு வருவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. 

ஒரு தம்பதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். கணவனின் நண்பன் கேட்டான்... `ஏன்டா விவாகரத்து... என்ன பிரச்னை?’’ 

``கோர்ட்ல கேஸ் நடக்குது. இப்போ அதைப் பத்திப் பேசக் கூடாது. முடியட்டும், சொல்றேன்.’’

வழக்கு முடிந்தது. தம்பதி பிரிந்தார்கள். நண்பன் மறுபடியும் கேட்டான்... `அதான் கேஸ் முடிஞ்சிடுச்சே... இப்பவாவது சொல்லேன். என்ன பிரச்னை?’’

‘`இப்போ அவ என் மனைவி இல்லை. ஒரு அந்நியப் பெண்ணைப் பத்தி பேசுறது தப்பு.’’ அழுத்தமாக பதில் சொன்னான் கணவன். 

இது பரவலாக இணையதளங்களில் சில வருடங்களுக்கு முன்னர் வந்த குறுங்கதை. அவன் நாகரிகம் தெரிந்தவன். இந்த அடிப்படை அறம், நாகரிகம் இல்லாததும் விவாகரத்து வரை நீளும் பிரச்னைக்குக் காரணம். இந்தியாவில் அதிகரித்துவரும் மணமுறிவுகளுக்கும் மண வாழ்க்கை நீடித்திருப்பதற்கும் மனநலவியல் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன் பட்டியல்போல சில அம்சங்களை அடுக்குகிறார்... 

* சிறு வயது முதலே உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்களாக (அவர்கள் பெற்றோர்கள் உணர்வு வெளிப்பாட்டை கண்டித்திருப்பதால்கூட இருக்கலாம்) இருப்பதும் ஒரு காரணமாகியிருக்கலாம். 

* ஆளுமையில் குறைபாடு போன்ற நோயினால் ஆட்பட்டவர்களுக்கு கருத்து ஒற்றுமை ஏற்படாமல் போய்விடலாம். 

* உடல்ரீதியாக தாய்-தந்தையரைவிட்டுப் பிரிந்திருந்தாலும், மனதளவில் பிரிய முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல். 

* சந்தேக உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் வரும். 

* 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவாகவும், புரிதலில் சிக்கலும் ஏற்படலாம். 

* கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்களிடையே மன ஒற்றுமை சீர்குலைய வழி ஏற்படலாம். 

* கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதினாலேயேகூட இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகக்கூடும். 

* முதலில் பிறந்த குழந்தை ஆணாக இருந்தால், பொறுப்புஉணர்வு அதிகமாக இருப்பதால் கணவன், மனைவியிடையே சிக்கல் வருவதில்லை. 

* மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையப் பெற்ற பெற்றோர்களைக்கொண்ட தம்பதிகளுக்கு மணமுறிவு ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது. 

* திருமணம் ஆன உடனேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால், மண வாழ்க்கையில் பக்குவப்படுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் ஆகிவிடும்போது சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது. 

* திருமணம் ஒரு ரொமான்டிசத் தன்மைகொண்டது என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள், யதார்த்தத்தில் அப்படி இல்லை என்று தெரிய வரும்போது ஏமாற்றமடைகிறார்கள். 

* திருமணத்துக்குப் பிறகு குழந்தைப்பேறு அமையாதது மணமுறிவுக்கு முக்கியக் காரணம். 

* சிறு வயதில் திருமணம் செய்தவர்களிடையே மணமுறிவுக்கு காரணம் நிலையான வேலை இல்லாமல் இருப்பது; பொருளாதாரத்தில், தற்சார்பு இல்லாமல் இருப்பது ஆகியவையே. 

* சிறு வயது திருமணம் மணமுறிவுக்கு இட்டுச் செல்வதற்குக் காரணம் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற எண்ணம் அல்லது வருமானம் குறைவாக இருப்பதும், அதனால் ஏற்படும் மனக்கசப்பு போன்ற காரணங்கள். 

* பெரிதும் வேறுபட்ட, மாறுபாடான, பண்பாட்டுச் சூழல், மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனரீதியாக வேறுபட்டவர்களிடையேயான மண வாழ்க்கை எளிதில் முறிவுபட வாய்ப்பு உள்ளது. 

* மிக முக்கியமான ஒருவருடைய மரணத்தின் துயரம், ஆறாத வடுவாக தோய்ந்துவிடுவதால் முழுமையாக மண வாழ்க்கையில் ஈடுபட முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம். 

* இவை எல்லாம் இல்லாமல், சில வகையான முற்றிய மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கணவராகவோ, மனைவியாகவோ கொண்டிருப்பவருக்கு மணமுறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

* பாலியல் பிரச்னைகள் மற்றும் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது, குடி அல்லது போதைப் பழக்கம் போன்ற காரணங்களும் விவாகரத்துக்குக் காரணங்களாகின்றன. 

இப்படி வெகு நீளமான பட்டியலையே தருகிறார் மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன். 

தம்பதியர் ஒற்றுமைக்கு உலக அளவில் சுட்டிக்காட்டப்படும் நாடு இந்தியா. அதற்குக் காரணம், நம் பாரம்பர்யம். கணவன் - மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், அன்பு. ஆனால், இவை மெள்ள மெள்ள காலாவதியாகிவருவதுதான் மணமுறிவுச் சிக்கலுக்கான அடிப்படை. 

ஈகோ, தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய அடிப்படையாகிறது. சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்துபோய்விட்டது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், மணமுறிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பேருந்தில் கனமான செருப்பால் காலை மிதித்துவிட்டு, சர்வ சாதாரணமாக `ஸாரி சொல்பவரிடம் சண்டைக்குப் போவதில்லை; விட்டுத்தான் கொடுக்கிறோம். கண்மூடித்தனமாக ராங் சைடில் வந்து மோதும் இரு சக்கர வாகனக்காரன் இடித்துவிட்டு, `சாரி மட்டும் சொன்னால், ஏற்றுக்கொண்டுவிடுகிறோம். இரண்டு திட்டுகளை மட்டும் மனதில் சொல்லிக்கொண்டு விட்டுக்கொடுத்துவிடுகிறோம். வாழ்க்கை முழுக்க இணைந்து வாழும் வாழ்க்கைத்துணையிடம் எதையும் விட்டுக்கொடுக்காமல் சண்டைக்கோழியாக நிற்கிறோம். செய்வதையும் செய்துவிட்டு `சாரி கூடக் கேட்பதில்லை. ஈகோ தடுக்கிறது. சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் உறவுக்கு வலு சேர்க்கும்! அதிகமாகும் விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போடும்! அந்த நல்லப் பழக்கத்தை முதலில் கடைப்பிடிக்கப் பழகுவோம்!

 

...................................................................................................................

காசு. பணத்தில் المال ,       மதிக்கப்படுவதில் العزة    அதிகாரம் யாருடையது என்பதில் الحكم  والسيادة , ,

ஏற்படக் கூடிய சர்ச்சைகள் குடும்ப உறவில் இணக்கமற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. சில  இடங்களில் அதுவே மிகப் பெரிய பகையாகவும் ஆகிவிடுகிறது.

இரண்டு பெரும் பணக்கார சகோதரர்கள் ஏராளமான நற்காரியங்களை செய்து வருகிறார்கள். சம்பாதிப்பதில் குறையில்லை. சமூகத்திலும் எதிர்ப்பில்லை.  ஆனால் சொந்த குடும்பத்திற்குள் நிலவும் பகையால் மிகுந்த மன உளைச்சளுக்குள்ளாகிறார்கள். காசு, அந்தஸ்து, நற்செயல்கள் அனைத்தும் இருந்தும், நிம்மதிக்கு தடையாக குடும்ப பகை இருக்கிறது.

தமிழகத்தின் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊரில் பாட்டனார் ஒரு கல்லூரியை நிறுவினார். நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த கல்லூரியை நிர்வகிப்பதில் சகோதரர்கள் சண்டையிட்டு கோர்ட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடம் பத்து வருடமாக அல்ல. ஒரு தலைமுறையாக கோர்ட்டில் வழக்கு நீண்டு கொண்டிருக்கிறது. கல்லூரியை கோர்ட் நிர்ணயித்திருக்கிற யாரோ நிர்வாகம் செய்கிறார்கள். சொந்தக்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை இதனால் அது சம்ப்ந்தப்பட்ட குடும்பங்களின் மகிழ்ச்சி பெரிது பாதிக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் எல்லா வகையான நிம்மதிக்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிற போது முஸ்லிம் குடும்பங்களில் சில இத்தகைய போட்டிகளில் பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் காசு பணம் வீணாகிறது என்பது பெரிதல்லகுடும்பங்களில் கிடைக்க வேண்டிய அமைதி பறி போகிறது. அடுத்த தலைமுறை இணக்கமான உறவுகளற்றதாகி வருகிறது என்பது தான் பெரிய சோகம்..

இன்றைய பல  குடும்பங்களிலும் நிம்மதி குலைந்து பகையும் சண்டையும்  பெருகி வருகிறது. மகிழ்ச்சி பெருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அழுகையும் சோகமும் பீரிடுகிறது.

அல்லாஹ் நம் அனைவரது குடும்பத்தை பிரச்சனைகள் சண்டைகள் பகை வெறுப்பிலிருந்து பாதுகாப்பானாக!

குடும்பங்களுக்குள் பகை எப்படி உருவாகிறது. அதை தவிர்ப்பது எப்படி என்பதை சிந்திக்க ஆரம்பிப்பதற்கு முன் அடிப்படையில் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம்

அல்லாஹ் ஒவ்வொரு மனிதருக்கும் தனி சுதந்திரதை  வழங்கியுள்ளான். தனித்தனியான இயல்புகளையும் அமைத்துள்ளான்.

சிலருக்கு கார்ட்டூன்கள் பிடிக்கும் சிலருக்கு ரெஸ்லின் பிடிக்கும் சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும்.

ஒரே தாயின் கர்ப்பத்திலிருந்து பிறந்த பிள்ளைகள் ஒரே இயல்பில் இல்லை. இருக்க முடியாது.

இந்த எதார்தத்தை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்திருப்பதில்லை.

சுய விருப்பு, சுய சுதந்திரம் , சுய மரியாதை   என்பது வெவ்வேறு வகையாக இருக்கிறது. அதனாலேயே குடும்பத்தில் தகறாறுகள் எழுகின்றன.  

இதனாலேயே ஒருவர் மற்றவருக்கு எதிரியாக இருக்கிறார்கள். இருப்பார்கள்.

இந்த எதிர்ப்புணர்வை குறைத்து நட்புணர்வையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதில்தீன் -  இஸ்லாமிய மார்க்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை முறையாக உணர்ந்ந்து அதன்படி வாழ நினைத்தால் சங்கடங்கள் தீரும்  சந்தோஷம் வளரும்.     

மனித உடலில் ஒரு உறுப்பு கூட மற்றதற்கு மிக உறுதுணையாக இருக்கிறது. கண்களில் தூசு விழும் எனில் மிக வேகமாக கை உதவிக்கு வருகிறதுதலையில் அடி விழுந்தால் கண் அழுகிறது. கால் மருத்துவரை தேடி ஓடுகிறது.

இந்த ஒருங்கிணைப்பிற்கான ஒரே காரணம் உயிர் தான்.   

உயிர் விடை பெற்று விட்டால் ஒருவரது நாக்கை வெட்டினாலும் மற்ற உடலின் அங்கம் எதுவும் உதவிக்கு வரப்போவதில்லை.

உடல் உறுப்புக்களை உயிர் ஒருங்கிணப்பது போல குடும்ப உறவுகளை ஒன்று படுத்தும் உயிர் தீன் என்பதை அழுத்தமாக முஸ்லிம்களான நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தீன் வழி நடப்பதன் மூலம் இதயங்கள் இணையும் என்பதை திருக்குர் மிகச் சிறப்பாக  புரிய வைக்கிறது.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا)

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். 19:96

இது விசயத்தில்  ஒரு மோடிவஸனல்  ஸ்பீக்கர் how to manage your relationship என்று வரிசையாக பட்டியலிடுவது போல இஸ்லாம் பல காரியங்களை பேசுவதில்லை. மிக சாதாரணமாக அடிப்படையாக ஓரிரு செய்திகளை சொல்லித்தருகிறது.

ஒவ்வொரு குடும்பமும் அந்த குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனி நபரும் இந்த அடிப்படைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் அடுத்த தலைமுறைக்கு இந்த கருத்துக்களை சுட்டிக் காட்டி செல்லிக் கொடுக்கவும் வேண்டும்.

குடும்ப உறவுகளுக்கிடைய பிரச்சனைகள் உருவாகாமல் இருக்க இஸ்லாம் இரண்டே வழிகாட்டுதல்களை கூறுகிறது.  

ü 1 அல்லாஹ்வின் மீது பயம்

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சக உறுப்பினர் விசயத்தில் முதலில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் விசயத்தில் பெற்றோர்கள்.பெற்றோர்கள் விசயத்தில் பிள்ளைகள்

சகோதர உறவுகள் விசயத்தில் மற்ற சகோதர்ரகள்கணவன் மனைவியர் ஒருவர் மற்றவர் வசயத்தில்எழுகிற குடும்ப பிரச்சினைகள் அனைத்திற்குமான தீர்வு இதில் இருக்கிறது.

திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயம் குடும்ப உறவுகளையும் அவர்களது உரிமைகளையும் பற்றி பிரதானமாக பேசக் கூடியதாகும் அந்த அத்தியாயத்தின் முதல் வசனம் اتَّقُوا رَبَّكُمُ தொடங்குகிறது.

 يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 

திருக்குர்ஆனின்  விரிவுரையாளர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களே குடும்ப உறவுகளிடம் சரியாக நடந்து கொள்வார்கள் என்பதால் தான் இந்த அறிவுரை முதலாவதாக கூறப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகளுக்கிடையே அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள் என்ற போதனை அடிக்கடி செய்யப்படனும்.

ஆண் குழந்தைகள் பெண் பிள்ளைகளை அடிக்கிற போது. அல்லது சீண்டு கிற போது,

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேதம் பாராட்டுகிற போது.

கணவன் மனைவி ஒருவர் மற்றவரை முறைகேடாக நடத்துகிற போது

முதியவர்களில் ஒரு சிலர் மதிக்கப்படாமல் போகிற போது

அல்லாஹ்வை பயந்து கொள் என்று அறிவுறுத்தப்படனும்.

அல்லாஹ்வின் மீதான் அச்சம் ஊட்டப்படுகிற இடங்களிலும் அது அறிவுறுத்தப்படுகிற இடங்களிலும் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

குடும்பங்களுக்கிடையே செல்வம் அந்தஸ்து வசதி வாய்ப்புக்களைப் பற்றிய பெருமை தற்காலத்தில் அதிகம் பேசப்படுகிறது.

என மகனுக்கு ஏசி இல்லாம் தூக்கம் வராது. என் மகள் பிராண்டட் துணி மணிகள் தான் அணிவாள். என் பேரக்குழந்தைகளுக்கு கேஎப்ஸி தான் பிடிக்கும் என்றெல்லாம் பெருமை பேசும் வழக்கம் பெருகி இருக்கிறது.

அதில் கொஞ்சமாவது அல்லாஹ்வை பற்றி பேச்சு இருந்தாக வேண்டும். அவனைப் பற்றிய அச்சம் தரப்பட வேண்டும். மறுமை சிந்தனை கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு இறையச்சமூட்டி வளர்க்கப்படுகிற பிள்ளைகள் பின்னாலில் குடும்பத்திற்கு நன்மையாக இருப்பார்கள். அவர்கள் சிறப்பான வாழ்வையும் பெருவார்கள்.

உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்உமய்யா சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. இன்றுவரை உலகை பெரிய அளவில் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவர்.

[صفة الصفوة لابن الجوزي   வில் ஒரு செய்தி வருகிறது.

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹி) மரணப்படுக்கையில் இருக்கிற போது அவரது மைத்துனர் மஸ்லமா அவரிடம் வந்து, உங்கள் பிள்ளைகளை இப்படி ஏதுவும் மற்ற ஏழைகளாக விட்டுச் செல்கிறீர்களே என்னைப் போன்ற குடும்பத்தவர்களை அழைத்து அவர்களை கவனித்துக் கொள்ளுமேறு கேட்கக் கூடாதா என்று கேட்டார்.

உமர் ரஹ் சொன்னா: நான் என் பிள்ளைகளை ஏழைகளாக விட்டுச் செல்வதாக கூறினாய்! நான் அவர்களுக்குரியதை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.. அவர்களுக்கு சொந்தமில்லாத எதையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை அவ்வளவு தான்.

உங்களைப் போன்ற உறவினர்களிடம் அவர்களை கவனித்துக் கொள்ள சொல்லவில்லை. வாஸ்தவம் தான். அவர்களை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். என் மகன்கள் ஒன்று அல்லாஹ்வை அஞ்சுகிறவராக இருக்க வேண்டும். அவர்களுக்கான வழியை அல்லாஹ் காட்டுவான். அவர்கள் பாவிகளாக இருந்து விட்டாலோ அந்த பாவிக்க்கு நான் வலுவூட்டக் கூடாதல்லவா ?

பிறகு அவரது 11 மகன்களை அழைத்துக் கூறினார்.

செல்வங்களே! உங்களது தந்தைக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன. ஒன்று உங்களை அரச செல்வாக்கில் பணக்காரர்களாக்கி அவர் நரகம் செல்வது. இரண்டாவது உங்களை ஏழைகளாக்கி அவர் சொர்க்கம் செல்வது, நான் சொர்க்கம் செல்ல விரும்புகிறேன். நீங்கள் செல்லுங்கள் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான் என்றார்.

.البداية والنهاية  வில் இப்னு கஸீர் ரஹ் கூறுகிறார்.

இறையச்சத்தில் வளர்க்கப்பட்ட உமரின் பிள்ளைகள் பிற்காலத்தில் பெரும் செல்வந்தர்களாக திகழ்ந்தார்கள்ஏராளமான சொத்துக்களை விட்டுச் சென்ற அரசர் சுலைமானின் வாரிசுகள் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

  இறையச்சம் ஊட்டி வளர்க்கப்படுகிற குடுமபங்களில்  - அல்லாஹ்வை பய்ந்துக்க என்று சொல் அதிகம் அறிவுறுத்தப்படுகிற குடும்பங்களில் உறவுகளுக்கிடையே நீதி பராமரிக்கப்படும்.

அப்போது மனைவியை துன்புறுத்துகிற கணவனோ·         பிள்ளைகளுக்கிடையே பேதம் பாராட்டுகிற பெற்றோர்களோ·         பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகளோ·         சகோதரர்களை அவமதிக்கிற சகோதரர்களோ இருக்க மாட்டார்கள்.

 

குடும்ப உறவுகளுக்கிடைய பிரச்சனைகள் உருவாகாமல் இருக்க

ü வது வழி   உறவை பேணுதல்

صلة الرحم என்பதன் முதல் பொருள் நாம் உறவுகளோடுதான் பிறந்திருக்கிறோம். என்பதை அழுத்தமாக உணர்வதாகும்.

நாம் மேலே கூறிய அந்நிஸா அத்தியாயத்தின் முதல் வசனம்

الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً

கணவன், மனைவி, பிள்ளைகள் சகோதர்கள் என்கிற கட்டமைப்பை அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான் என்பதை உணருமாறு உத்தரவிடுகிறது.

 நாம் தனி மரம் அல்ல. நமது விருப்பம் மட்டுமே பிரதானமல்ல. அல்லாஹ் கூறியபடி இந்த உறவுகளை நாம் பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை குடும்ப உறவுகள் அனைவருக்கும் வேண்டும்.

 திருக்குர் ஆன் பல வழிகளில் இதை நமக்கு நினைவூட்டுகிறது.

 ஒரு சிக்கல் வரும் போது சகோதரர்களே நினைவுக்கு வருவார்கள்.

மூஸா அலை அவர்கள் பல வருடங்கள் மத்யனில் தனியாக வாழ்ந்து விட்டு மனைவியோடு எகிப்துக்கு திரும்பி வருகிர வழியில் திடீரென ஒரு பெரும் நபித்துவ பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது அவருக்கு அவருடைய அண்ணன் ஹாரூன் (அலை) தான் நினைவுக்கு வந்தார்

وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي (29هَارُونَ أَخِي (30اشْدُدْ بِهِ أَزْرِي (31وَأَشْرِكْهُ فِي أَمْرِي (32كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا (33وَنَذْكُرَكَ كَثِيرًا (34

 

நாளை மறுமையில் ஒவ்வொரு விலகி ஓடுவார்கள் என்பதை குறிப்பிடும் போது அல்லாஹ் முதலில் சகோதரர்களையே குறிப்பிடுகிறான். குடும்பம் என்பது விலகி ஓட முடியாத உறவு என்பதையே உணர்த்துகிறது.   

  يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

உறவை பேணுதல் என்பதன் முதல் பொருள் உறவுகளோடு தான் நாம் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வை நினைவில் நிறுத்துவது.

இரண்டவது அந்த உறவுக்கான மரியாதையை தருவதாகும்.

மூன்றாவது உறவுகளுக்கு உதவுவது ஒத்துழைப்பது.

பெரும்பாலும் குடும்பங்களில் பிரச்சனைக்கு காரணம்

1.   உறவுகள் உரிய முறையில் மதிக்கப்படாதது

2.   அல்லது உறவுகள்  அதிகப்படியான மரியாதையை எதிர்பார்ப்பதும் ஆகும்.

இந்த இரண்டும் தவறான அனுகுமுறையாகும்.  

குடும்பத்தில் மூத்தவர்கள் வயதாகி விட்டாலும் கூட அவர்களே அக்குடும்பத்தின் கேடயங்கள்!  அவர்களை முன்னிறுத்தித்தான் நல்ல காரியங்கள் செய்யப்படும்.

ஒரு பிரச்சனை எனும் போது அவர்களே முன்னிலைப் படுத்தப்படுவார்கள்.

குடும்பதலைவர் என்பவர் ஒரு கேடயம். அவரை வைத்துத்தான் பிரச்சனைகளை எதிர்கொள்ளப்படும்.

அதே போல இளையவர்களின் உணர்வுகளை மூத்தவர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். அது இளையவர்களை மதிக்கும் ஒரு விதமாகும்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மகனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு செயல்பட வேண்டும்.  பெருமானார் (ஸல்) அவர்கள் தனிச்சிறப்பு வாய்ந்த நபியாக இருந்த பொதும் கூட மற்றவர்களின் கருத்துக்களுக்கு பல இடங்களில் மதிப்பளித்துள்ளார்கள். அவரகளை பாராட்டியுள்ளார்கள்.

மதித்தல் என்பது தான் உறவை பேணுதலின் பிரதான அம்சமாகும்.  

குடும்ப உறவுகளி ஒருவரை தொடர்ந்து அலட்சியம் செய்வதோ அல்லது அவமரியாதையாக நடத்துவதோ , நமது சொந்த தேவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து விட்டு அவர்களது தேவைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதோ கட்டாயம் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது அல்ல. மார்க்க ரீதியாக மிகப்பெரியர் பாவமாகவும் அமையும்.

துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.

நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.

ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

 

அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.

அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன் என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)ஆதாரம் : புகாரி

என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.

இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான் எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.

சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,

நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.

இரண விஸ்தீரனம் :
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.

யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

எதுவரை சேர்ந்து நடப்பது :
சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டே இருப்பர், குத்திப் பேசிக்கொண்டே இருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும்.

தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி

இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.

எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.

காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.

நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.

இஸ்லாத்திற்கு எதிராக இரத்த உறவு:
இரத்த உறவு இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ந்து வருமென்றால் அப்போது இரத்த உறவை விட கொள்கை உறவே முதன்மை பெறும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படுவோர் மீது உண்மையான பாசத்தையும் நேசத்தையும் சொரிய முடியாது. இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கின்றான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்; அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (58:22)

இந்த வசனத்தின் படி நபித் தோழர்கள் தமது தந்தை, சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் என்ற பாகுபாடின்றி போர்க் களங்களில் எதிர்த் தரப்பில்; இருந்த பலரைக் கொன்றுள்ளனர். இரத்த உறவைக் காரணம் காட்டி சத்தியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவ முடியாது.

அல்லாஹ்வை மிஞ்சி இரத்த உறவு ஓங்கலாகாது
இரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், அது எல்லை மீறிச் சென்று விடக் கூடாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும்விட பெற்றோரையோ, மற்ற உறவினர்களையோ ஒரு முஃமின் நேசிக்க முடியாது. இதனைப் பின்வரும் வசனம் இப்படி விபரிக்கின்றது.

“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத் தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பாத்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24)

நபி (ஸல்) அவர்களும், உங்களில் எவருக்கும் நான் அவரது தாய், தந்தை பிள்ளைகள் மீது மனித சமூகத்தை விடவும் விருப்பத்திற்குரியவனாக ஆகாதவரையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது. (ஆதாரம் :முஸ்லிம்) என்ற நபிமொழி மூலம் நவின்றுள்ளார்கள். எனவே, பெற்றோர்கள் மீதோ, குடும்பத்தினர் மீதோ பாசம் வைக்கும் போது அந்தப் பாசம் எல்லை மீறிச் சென்று விடாவண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.

எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான் அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), (ஆதாரம்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001