இடுகைகள்

நோன்பு அல்லாஹுகுரியதா? ஏன்?

    எதற்காக அல்லாஹ் நோன்பு மட்டும் தனக்குரியது என்று சொல்லிக் காட்டுகிறான் இதைப்பற்றி உலமாக்கள் பல காரணங்களை கூறினார்கள் .   1. காரணம் : நோன்பில் ‘ ரியா ’ ( முகஸ்துதி ) ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை யாரெல்லாம் நோன்பாளி என்றும் , நோன்பாளியில்லை என்றும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது ... ஆனால் வேறு அமல்களைப் பொறுத்த வரை அப்படியல்ல ஒருவர் தொழுகைக்கு வருகிறார் என்றால் அவரை நாம் தொழுகையாளி என்று அறியலாம் ஒருவர் ஜகாத் கொடுக்கிறாரென்றால் குறைந்த பட்சம் இவர் ஜகாத் கொடுக்கக் கூடியவர் என்று அவரிடமிருந்து ஜகாத்தைப் பெறுபவர் அறிந்து கொள்வார் . ஒருவர் தர்மம் செய்கிறார் , அது கொடுக்கும் கைக்கும் வாங்கும் கைக்கும் தெரியும் ஒருவர் ஹஜ் செய்கிறார் அது ஊருக்கே தெரியும் அதை விளம்பரப்படுத்தவே சிலர் நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன் , அரஃபாவில் இருக்கிறேன் ஜம்ராவில் கல்லெறிகிறேன் என்று செல்பி எடுத்து வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் மூலமாக பலருக்கும் அனுப்புகிறார்கள் .   இப்படி நாம் அமல்களை விளம்பரப்படுத்திக் கொ...