இடுகைகள்

ஒரு முஃமீனிடம் இருக்க வேண்டிய கவலைகள்

    முஃமின்களிடம் சில கவலைகள் இடம் பெற்றிருக்க வேண்டும் . அது முஃமின்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .   1.    இறைவன் பொருந்திக் கொள்ளும் அமல்களைத் தான் செய்கின்றோமா ?   அமல்கள் செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாம் நிறைவேற்றும் வணக்க , வழிபாடுகள் , நாம் செய்யும் சேவைகள் சமுதாயத்திற்கும் , மார்க்கத்திற்கும் நாம் உழைக்கின்ற உழைப்புகள் என அனைத்தும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கின்றதா ? என நாம் கவலைப்பட வேண்டும் .   ஏனெனில் , இந்த உலகில் முஃமினுக்கு மிகப் பெரிய பொக்கிஷம் இறை பொருத்தமாகும் .   وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيم ُ   “ அல்லாஹ்வின் திருப் பொருத்தமே மிகப் பெரியதாகும் . அது தான் மகத்தான வெற்றியுமாகும் ”. ( அல்குர்ஆன் : 9: 72 )   இறைப் பொருத்தம் பெற்ற செயல்களைச் செய்யவே நபிமார்கள் விரும்பினார்கள் என குர்ஆன் சான்றுரைக்கின்றது .   وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ...