இடுகைகள்

இஸ்லாம் கூறும் தூய்மை

    மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை   நாயகம் ( ஸல் ) அவர்கள் ஈமானுடன் இணைத்து சொல்லி இருகின்றார்கள் . அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலகீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும் . எனவே அப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதிலும் ,  வளர்ப்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் கவனம் செலுத்துவது கடமையாகும் . இந்த வகையில் அமைந்த ஒன்று தான் மனிதன் பேணவேண்டிய சுத்தம் சுகாதாரமாகும் . நமது தேசம் 76 ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களை சந்தித்த பிறகு தான் தூய்மை இந்தியா திட்டத்தை முன் வைத்திருக்கின்றது . ஆனாலும் இந்த திட்டம் மக்களை வெல்லுமா ?  அல்லது மக்கள் கூட்டம் இதை தள்ளுமா ?  என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை   1400   ஆண்டுகளுக்கு முன்பே தூய்மையை திட்டமாகவும் ,  சட்டமாகவும் ஆக்கியது . உலக முஸ்லிம்களும் காலம் ,  காலமாய் இந்த சுத்தத்தை பாதுகாத்து ...