ரமலானை வரவேற்போம்
ரமலான் இன்னும் சில தினங்களில் வரபோகிறது கேட்கும் பொழுதே எவ்வளவு உள்ளத்தில் மகிழ்ச்சியாக உள்ளது ! ஒவ்வொரு வருடமும் ரமலான் உற்சாகமாக வருகிறது ஆனால் இதற்கு நம்மில் பலர் தயார் இல்லை ! ஒரு சாரார் வேலை படிப்பு நிக்காஹ் என்ற அற்ப காரணங்களை கூறிய ரமலானை பாழாக்கி விடுகிறார்கள் - இன்னும் சிலர் என்ன புது வகை உணவு செய்யலாம் ? ஸஹருக்கு என்ன செய்யலாம் - இப்தருக்கு என்ன செய்யலாம் என்பதில் நோன்பை பாழாக்கி விடுகிறார்கள் ! • இன்னும் சிலர் உண்ணுவது உறக்குவது என்பதிலயே ரமலான் சென்று விடுகிறது ! இன்னும் சிலருக்கு பிறை பற்றி கருத்து வேறுபாடு - தராவிஹ் தொழுகை எண்ணிக்கை பற்றி கருத்து வேறுபாடு இதிலயே பலருக்கு ரமலான் பாழாகி விடுகிறது நவுதுபில்லாஹ் ! வருடத்தில் ஒரு முறை தான் இந்த ரமலான் நமக்கு கிடைகின்றது அதையும் அற்ப காரணங்களால் நாம் பாழாக்கி விட கூடாது ! ஏன் என்றால் எத்தனையோ நபர்கள் நமக்கு தெரிந்தவர்கள் சென்ற ரமலானில் நம்முடன் இருந்தவர்கள் தற்பொழுது கிடையாது ! இன்னும் சிலர் இன்று நா...