வெள்ளி, செப்டம்பர் 13, 2019

இளைஞர்களே.....اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
அல்லாஹ் தான் (ஆரம்பத்தில்)பலஹீனமானநிலையில்படைக்கிறான்; பலஹீனத்திற்குப்பின்னர்,அவனேபலத்தை(யும்உங்களுக்கு)உண்டாக்குகிறன்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன். 30:54
. 
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ 
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம்மிக்கவன்.

وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (2 : 208)
ஒரு சமுதாயத்தின் இணையற்ற சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும். 1.வழுவற்ற குழந்தை பருவம்,2. ரத்தம் துடிக்கும் இளமைப்பருவம்
3. பலவீனமான முதுமை பருவம். ஒரு மனிதனுடைய வாழ் நாளின் மிகவும் பலவீனமான காலகட்டங்களாகும்.
. இளமை பருவம் ஒரு சமூக மாற்றத்தில், புரட்சிகளில், போராட்டங்களில், அது போன்று சமூகத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் மோசமான விடயங்கள் என அனைத்து அம்சங்களிலும் மிக முக்கியமானதொரு பங்களிப்பை செலுத்திக் கொண்டிருப்பதை நம் யாராலும் மறுக்க முடியாத‌  உண்மையாகும். சிறுபிராயம்வயோதிகம் எனும் இரு பலவீனங்களுக்கிடையில் உள்ள ஒரு பலமான பருவமே வாலிபம். பருவ வயதை அடைந்ததிலிருந்தே வாலிபம் துவங்கி விடுகிறது வாலிபம் என்பது பருவமடைந்தது முதல் துவங்கி நாற்பதாம் வயதில் நிறைவடைகிறது.
ஒரு சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளதுஇஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும்அசத்தியம் அழியவும்அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தைஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போதுமுதலில் விளங்கிஅதிகளவு விரும்பி ஏற்றுசெயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆத்மீகபிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது
இஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள்.
இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று அவதானிக்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே எமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.
யூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது
கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
இஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு.
இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் உயர்விலும் முற்காலத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்திருக்கிறது.  இஸ்லாத்துக்கு அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவகளின் துளிகளுமே இன்று பரந்த விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம். அன்றைய இளைஞர்களிடம் காணப்பட்ட, தியாகம், வீரம், நல்லொழுக்கும் இன்மையே இந்த பலமான‌ முஸ்லிம் சமூகம் இன்று பலவீனமடைவதற்கான மிகமுக்கிய காரணியாகும்.
ü  சிந்து சமவெளியை முஹம்மத் பின் காஸிம் கைப்பற்றிய போது அவர்களிம் வயது 17. பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 23.
ü  ஸ்பெயினை தாரிக் பின் முறாத் கைப்பற்றிய  பொழுது அவர்களின் வயது 21. இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?


ü  நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட  ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி) ஒரு இளைஞர்.
ü  அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள்.
ü   யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) ஒரு இளைஞர்.
ü  மூத்த ஸஹாபாக்கள் பங்கு பற்றிய ஒரு படையணிக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரழி) ஒரு இளைஞர்.
ü   அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில் அல் குர் ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.

ü  இப்ராஹிம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை தனது தந்தைக்கு எத்திவைத்த பொழுது அவர்களின் வயது 14. சிலை வணங்கிகளின் சிலைகளை உடைத்த இவரை குர் ஆன் ஒரு இளைஞர் என குறிபிடுகின்றது.  அது மாத்திரமன்றி இறை நிரகரிப்பளார்கள் மற்றும் நம்ரூத் போன்ற பல கொடுங்கோள் மன்னர்களுடன் போராடியதும் அவர்களது இளமை பருவத்திலே ஆகும். 

ü   யூஸுப் (அலை) அவர்கள் முகங்கொடுத்த இன்னொரன்ன துன்பங்களை, இன்னல்களை தமது இளமை பருவத்திளே சந்தித்து அழகிய முறையில் வெற்றி கொண்டதையும் ஸூரா யூஸுப்பில் அழகிய படிப்பினைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம்.

ü  ஸுலைமான் (அலை) துல்கர்னைன் (அலை) மூஸா (அலை) அவர்கள் தமது இளமை பருவத்தையே எல்லாம் வள்ள அல்லாஹ்வுக்கே அர்பணித்திருப்பதை காணாலாம், ஸூரா கஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?

ü  மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே.

ü   இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள்.

ü  அல் குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் சிறந்து விளங்கிய ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நபித்தோழர்கள் அவரை அல் ஹப்ரு (அறிஞர்) என்ற பெயர் கொண்டு அழைத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் தேடிப்பிடிக்கக் கூடியவராகக் காணப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவரது வயது பதிமூன்று
நபி (ஸல்) அவர்கள் அவர்களை ஆரம்பத்தில்  ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும்.
Ø  இமாம்களின் இளமை கால சேவைகள்!
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனது பதினாறாவது வயதிலேயே ஹதீஸ்களைத் தேடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் அனாதையாக வளர்ந்தார். அவரை அவரது தாய் பராமரித்து வந்தார். அவரது அறிவுத் திறமை பல பகுதிகளைலும் பிரபல்யமாகியது. அவர் தனது இருபதாவது வயதிலேயே கால்நடையாக வந்து தனது ஹஜ் கடமையை நிறைவேற்றினார். ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் போது அவரிடம் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அதில் அவரது புத்தகங்களே இருந்தன. தான் களைப்புறும் போது அப்பையை ஒரு கல்லின்மீது வைத்து அதில் தனது தலையை வைத்து ஓய்வெடுப்பார்.
Ø  இந்த உம்மத்தின் மற்றுமோர் அறிஞர் தான் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள். அவரையும் அவரது தாயே வளர்த்தார். அவர் தனது பதினாறு வயதிலேயே பிரபல்யமான இஸ்லாமிய நூற்களைப் படிக்க ஆரம்பித்தார். ஸஹாபாக்கள்தாபியீன்கள் பற்றிய நூற்களையும் அவர்களது கருத்துக்கள் பொதிந்த நூற்களையும் அவர் தனது பதினெட்டாவது வயதில் எழுதினார். அவர் இரவில் நபி (ஸல்) அவர்களது மண்ணறைக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு நிலா ஒளியில் ஹத்யுஸ் ஸாரி முகத்திமது பத்ஹுல் பாரி எனும் வரலாற்று நூலை எழுதினார்.
Ø  இமாம் ஷாஃபிஈ ( ரஹ்) அவர்களின் இளமைக் காலம்
இமாம் ஷாபி ( ரஹ்) அவர்கள்  14 வயதில் மதீனாவில் இமாம் மாலிக்கைப் பற்றியும் அவர்களது மு அத்தாவைப் பற்றியும் கேள்விப்பட்டார்.இமாம் ஷாபியின் தாயார் மகனை இமாம் மாலிக்கிடம் அனுப்ப ஆசைப்பட்டர். இமாம் மாலிக்கிடம் செல்வதற்கு முன்னதாகவே அவர் தொகுத்த முஅத்தா நூலை ஷாபி( ரஹ்)மனனம் செய்து விட்டார்.
Ø  இமாம் மாலிக் ரஹ் அவர்களின் பாட வகுப்பு மிகவும் மரியாதையானதாக பல வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிலும் இடமாக  ஒவ்வொரு நாட்டுக்காரருக்கும் தனித்தனியே பாடங்கள் நடை பெறும் இடமாக இருந்தது.
இது போன்று ஆயிரம், ஆயிரம் முன்மாதிரிகளை கொண்டுள்ள இன்றைய எமது சமூகத்தின் முன்மாதிரிகள் யார்? நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என இவர்களின் பின்னால் குடைபிடித்துத் திரியும் இளைஞர்கள் இது போன்று இஸ்லாம் கூறும், இஸ்லாமிய வரலாறுகளில் கண்ட உதராண புருஷர்களாக மாறுவது எப்போது?
ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.                                                                                                    ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது எமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர்.
நாம் அனைவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமானது. மனிதனாகிய எமக்கு இது நிரந்தரமற்ற தங்குமிடம், மரணத்தை சுவைக்கும் தருணம் எக்கணமும் எம்மை எத்தலாம். அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமான இந்த சொற்பமான காலமே எமது முடிவற்ற கபுருடைய வாழ்கை, பல்லாயிரம் ஆண்டுகள் தங்கும் மஹ்ஸருடைய வாழ்க்கை மற்றும் எமது நிரந்தர தங்குமிடமான சுவர்கம் நரகத்தை தீர்மானிக்கப் போகின்றது.
وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ
மேலும் மறுமையை நம்பாத அவர்கள்: நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லைஎன்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை. (45:24)
இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் போன்ற கடமைகள் மாத்திரமன்று. எமது எண்ணங்கள் மிகவும் அழகிய, இலகுவான வழிகாட்டகளை கடமையாகியுள்ளன. எமக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் இறைவனால் தீர்மாணிக்கப்பட்டுவிட்டன. அந்த அடிப்படை விடயங்களை எம்மால் தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது. மிகவும் சொற்மான சில குறிபிட்ட விடயங்களிளே எமக்கான தெரிவு சுதந்திரத்தை தந்து அதற்காக நன்மை தீமையை பிரித்தறிய கூடிய பகுத்தறிவை தந்துள்ளான்.                                                                                                 இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உயர்வு ஏற்படும் விதம் வழிநடத்துவதும் காலத்தின் அவசரத்தேவை.
1) வாலிபம் என்பது இறைவனின் தனிப்பெரும் அருட்கொடை.
Ø   ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர்ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள்.  அவை:
1. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.2. நோய் வருமுன் உடலாரோக்கியத்தையும்.3. வறுமை வருமுன் செல்வநிலையையும்'4. அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தையும்.5. மரணம் வருமுன் வாழ்க்கையையும்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)                          2)வாலிபம் குறித்து விசாரனை                                                                                                 வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருட்கொடைகள் பற்றிய விசாரணையில் (பொதுவாக வயது பற்றி ஒரு விசாரணை இருந்தும்)வாலிபம் குறித்தும் தனியொரு விசாரணை  நடைபெறும் என வருகிறது.
Ø  மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்அதை எவ்வாறு செலவழித்தான்?4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான்?                         அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரலி)
3) சுவனவாசிகள் வாலிபர்களாகவே இருப்பார்கள்                                               வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருளையும் சுகங்களையும் அனுபவிக்கும் சுவனவாசிகள்வாலிபர்களாகவே இருப்பர்
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5457.
4) இந்த பருவத்தில் செய்யப்படும் அனைத்து நல்ல செயல்களுக்கும் அல்லாஹ்விடம் தனிப்பெரும் வெகுமதிகள் உண்டு
Ø  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; 1.நீதியை நிலை நாட்டும் தலைவர், 2.அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர்,3. பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், 4.அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், 5.உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்என்று சொல்லும் மனிதர்,6. தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், 7.தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 660.
ஆனால் இளைஞர்களின் இன்றைய நிலை
சமீப காலமாக கலாச்சார சீரழிவுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளும்சமூகமாகஇஸ்லாமியசமூகம்மாறிக்கொண்டிருக்கின்றது.அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர் சமூகம் தங்களை ஈடுபடுத்திதங்களின் இஸ்லாமிய அடையாளங்களை இழந்து வரும் போக்கும் அதிகரித்திருக்கின்றது.அப்படியொரு கலாச்சாரச் சீரழிவு இதோ காதலர் தினம் (வேலண்டைன் டே) எனும் பெயரில் எதிர் நோக்கி இருக்கிறது.
ஹேர் ஸ்டைல்:இன்றய நவீன காலத்தில் நபிவழியை பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியைப் பின்பற்றி தங்களின் ஹேர் ஸ்டைலைவிதவிதமாகஅமைத்துக்கொள்கிறார்கள்.தலைமுடியையும்.தாடிமுடியையும் அழகு படு்த்த வேண்டும் தான் அதே நேரத்தில் அது நபி வழிக்கு மாற்றமாக இருந்து விடக்கூடாது. தலைவிரி கோலமாக மஸ்ஜிதுக்கு வந்த ஒருவரை நபியவர்கள் முடிகளை சரிசெய்து வரும்படி கூறினார்கள்.அதே போன்று ஸ்டைல் கட்டிங் போன்று பாதி முடியும் பாதி மொட்டையுமாக முடி வெட்டுவதை தடை செய்தார்கள். பாதி முடியை வெட்டி மீதப் பாதியை விட்டுவிடுவது யஹூதிகளின் பழக்கம் அவ்வாறு முடி வெட்டிய ஒரு சிறுவரை கண்ட நபியவர்கள் கண்டித்தார்கள்.அதை தடை செய்தார்கள்.                                                                                                                                      போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்:-இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின் காரணமாக விஸ்கிபியர்ஹெரோயின்கஞ்சாஅபின்பீடாபான்பராக் போன்ற போதைப் பொருட்களை உபயோகிக்க பழகுகின்றனர்..இன்று புதிய புதிய பெயர்களில் போதைப் பொருட்கள்விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.
தீய நண்பர்களின்  தாக்கம்:-இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்  'ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக கவனி(த்து தேர்ந்தெடு)க்கட்டும்.அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: அபூதாவூது).ஒருவர் தான் யாருடன் பழகுகின்றேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. இதனை நபியவர்கள் விளக்கி பின்வருமாறு கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து இரண்டிலொன்று உமக்கு உறுதியாக கிடைக்கும். (1) நீர் அதை விலைக்கு வாங்கலாம்: (2) அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய உடலையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!"என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2101
குறிப்பாக ஒருசில இஸ்லாமிய பெண்களிடம் தீய நட்புகள் குடிகொண்டு ஈமானை இழக்கக்கூடய நிலைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது. பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள், இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள் நமது வருங்கால‌ தாய்மார்களின் நிலை என்ன? ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன? சினிமா, சின்னத்திரை, இணைய‌த்தளம், நாவல்கள், சஞசிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரிய‌ முன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என அலைக்கழிந்து கொண்டிருப்பதை காணாலாம்.கெட்ட நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் மறுமை நாளில் கைசேதப்படுவார்கள்.
يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏
எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”(அல்குர்ஆன் : 25:28)
لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏ 
நிச்சயமாகஎன்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)(அல்குர்ஆன் : 25:29)
 கலாச்சார சீரழிவிற்கு விதை தூவும் திரைப்படங்களைப் பார்த்தல்:-இன்று அதிகமான இளைஞர்களின் நேரங்கள் சினிமாக்களினால் வீணடிக்கப்படுகின்றன. ஓய்வு என்பது அல்லாஹ் எமக்கு அருளிய அருளாகும். அதனை இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். இன்றைய ஆய்வுகளின்படி ஒரு மாணவன் வாரத்தின் பாடசாலை நாட்களாகிய திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் 36 மணிகள் தொலைக்காட்சியில் செலவழிப்பதாகவும்வார இறுதி நாட்களான சனிஞாயிறுகளில் இது இரு மடங்காக அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.     மேலும் சினிமாக்களை பார்ப்பதுடன் நின்றுவிடாமல் அங்கு வரும் நடிகர்கள்நடிகைகள் போன்று நடைஉடைபாவனைகளை அமைத்துக் கொள்வதும் எமது ஈமானையும் இஸ்ஸலாமிய பற்றுதலையும் பாதிக்கிறது என்பது பேரபத்தான ஒன்றல்லவா?
பாடல்களையும் இசைகளையும் செவிமெடுத்தல்:-பெரும்பாலான இளைஞர்கள் தமது கைகளில் உள்ள கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி விகாரமான  பாடல்களை வீதி ஓரங்களிலும்தூக்கத்தின் முன்னரும்(tik tak)கேட்டு மகிழ்கின்றனர். இவை உண்மையில் எமது ஈமானை பறித்துவிடும். எவ்வாறு பாலைவன மணலில் நீரை ஊற்றுகின்ற போது மிக வேகமாக உறிஞ்சி எடுப்பது போன்று இசையானது எமது ஈமானை உறிஞ்சி எடுத்துவிடும்.                                                                                           கையடக்க தொலைபேசிகளை தவறாக பயன்படுத்தல்:-
இன்று கையடக்க தொலைபேசிகள் அவசியமான தொடர்புக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின் ஈமானிய உணர்வை அது சீரழித்துக் கொண்டிருக்கின்றது. அதில் திரைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். ஷைத்தானின் ஓசைகள் இளைஞர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.வீதிகளில் சென்று கொண்டிருக்கின்ற பெண்களை படம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு அழைப்புகளை கொடுத்து தொல்லைப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நரகத்தின் வேதனைக்கே எம்மைக் கொண்டு சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.                                                   . இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விஷயங்களை கண்டுகளித்தல்:-இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய படங்கள்காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். இதன் மூலமும் அல்லாஹ்வுடனான எமது நெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.
அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பதுடன்விலக்கியவற்றை தவிர்ந்து வாழ வேண்டும். அதற்காக இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெற்றுஅல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையைஇளமை பருவத்தை அல்லாஹ்இரசூலின் வழிகாட்டலுக்கேற்ப பெரியவர்கள் சொல் கேட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிக்க வேண்டும் .             பொதுவாகவே அறிவுரை கூறுவதையும் கண்டிப்பு செய்வதையும் இன்றைய இளைய தலைமுறை விரும்புவதே இல்லை. ஆனால் உளி படாத கற்கள் சிற்பமாகுவதில்லை. பட்டை தீட்டாத வைரங்கள் ஜொலிப்பதில்லை என்பது உண்மையே!                                                                         வாலிபர்கள் முதன் முதலில் கடைபிடிக்க வேண்டியவைகள்!
1) தன் வாழ்வில் இறையச்சம் மிக அவசியம்.
2) எல்லாவித ஹராம்களை விட்டு விலகி நிற்பது.
3) பெருமானாரின் சுன்னதுகளின் மீது அளவுகடந்த பிரியம் வைப்பது.
4) பெற்றோரின் துஆகளை பெறக்கூடிய செயல்களை செய்வது.
5) நல்ல நண்பர்களோடு மட்டும் நட்பு வைப்பது,தீய நண்பர்களின் நட்பை உடனே முறித்து கொள்வது.
6) நமக்கு வழிகாட்டுவதற்காக நல்ல இறையச்சமுல்ல ஆலிமுடன் எப்போதும் சேர்த்திருப்பது.
இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெறுவதற்கு முயற்சிப்பதுடன் அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை கவனம் செலுத்தி ஒரு உண்மையான இஸ்லாமிய வாலிபனாக வாழும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் வல்லோன் அல்லாஹ் தந்தருள் புரிவானாக ஆமீன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக