இறையருள் ( பரக்கத்) பெற..

 


{يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَاؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ } -… قال رسول الله «عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُم

 

  நமது வாழ்க்கை முழுவதும் பரக்கத் நிறைந்ததாக ஆக என்னென்ன? அமல்களை செய்ய வேண்டும். சம்பந்தமாக பார்ப்போம்.! 

நமக்கு பரக்கத் கிடைக்க வேண்டும்? என்ற ஆசை இருக்கிறது.

நான் பரக்கத் பெற வேண்டும் என்பதற்க்காக  பிறரிடம் துஆ செய்யுங்கள்? எனக்கூறி ஆவல் கொள்கிறோம்.

பரக்கத்தை பெற்றுத்தரும் பல அமல்களை நாம் விட்டு விடுகிறோம். பிறகு எப்படி நம் வாழ்கையில் பரக்கத் கிடைக்கும்.

பரக்கத் வேண்டும் என்பதற்க்காக அங்கும் / இங்கும் அழைகிறோம். ஆனால்; பரக்கத் நம்முன்னே இருக்கிறது / நம் கூடவே வருகிறது அதனை பயன்படுத்தாமல் விட்டு விட்டு; பரக்கத் கிடைக்கல / பரக்கத் வரல என புழம்பிக்கொண்டு இருக்கிறது நமக்கு மிகப்பெரும் வருத்தத்தை தருகிறது.

ஆக நபியவர்கள் எந்தெந்த அமல்களில்? என்னென்ன? பரக்கத்துகள் இருக்கிறது; என்று சொன்னார்களோ அதனை தேடி, அறிந்து அமல்செய்து; நம் வாழ்நாள் முழுவதும் பரக்கத்தாக ஆக்கிடுவோமாக!.

அல்லாஹ் []  திருமறையில் கூறுகின்றான்:-  

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ-[

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், (வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள்..- [அல்குர்ஆன்  24:27]

♣ நபி  அவர்கள் கூறினார்கள்:-

قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُمْ. رواه الحاكم

 நபி  அவர்கள், உங்களுடைய பெரியவர்களுடன் பரக்கத் இருக்கிறது” (ஹாகிம்)

 

ü பரக்கத்தை பெற்றுத்தரும் பஜ்ர் தொழுகை :-

إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً  ]

பஜ்ர் தொழுகை தனிப்பெரும் அந்தஸ்தை பெறுகிறது. .வானவர்கள் சங்கமிக்கும் தொழுகை பஜ்ர் தொழுகையாகும்.

مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ رواه مسلم ]

பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை [பரக்கத்தைபெற்றுவிட்டார் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

 

ü அதிகாலையில் அலுவல்களில் ஈடுபடுவதின் மூலம் பரக்கத்தை பெறலாம்:

عَنْ صَخْرِ نِ الْغَامِدِيِّؓ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

 (اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا) யா அல்லாஹ்!, என்னுடைய சமுதாயத்தினருக்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக!” என்று ரஸூலுல்லாஹி  அவர்கள் துஆச் செய்துள்ளார்கள்.

மேலும், அன்னார் சிறிய படை அல்லது பெரும்படையை அனுப்பிவைக்கும் போது அவர்களைக் காலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள். ஹஜ்ரத் ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள், அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில் தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்கள் செல்வந்தரானார்கள், (அவர்களின் செல்வம் பெருகிவிட்டது). (அபூதாவூத்)

தெளிவுரை:- என்னுடைய சமுதாயத்தினர் அதிகாலையில் பயணம் செய்யட்டும், உலகம் அல்லது மார்க்கம் சம்பந்தமான வேலைகளில் அந்நேரத்தில் எதைச் செய்தாலும் அதில் அவர்களுக்கு பரக்கத் கிடைக்கும்என்பது இந்த ஹதீஸில், ரஸூலுல்லாஹி  அவர்கள் செய்துள்ள துஆவின் நோக்கமாகும்

 

ü பரகத்தை பெற்றுத்தரும் ஹலாலான சம்பாத்தியம்:-

நபிகள் நாயகம்  அவர்கள் கூறினார்கள் : செல்வத்தை உரிய முறையில் யார் அடைகிறாரோ அவருக்கு அதில் பரக்கத் வழங்கப்படும். செல்வத்தை முறையற்ற வழிகளில் யார் அடைகிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார் என்று கூறினார்கள். [முஸ்லிம் 1874]

அடியான் ஹராமான வருமானம் ஈட்டி அதில் இருந்து தர்மம் செய்தால்  அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அதில் செலவு செய்தால் அல்லாஹ் அதில் பரகத் செய்வதில்லை. [அஹமத்]

ஒரு மனிதர் நபி  அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு யாசகம் கேட்டார்.

இது கேட்ட நபி  அவர்கள்உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா?” எனக் கேட்டார்கள்.  ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். அவற்றைக் கொண்டு வருமாறு நபி  அவர்கள் பணித்தார்கள்.

அவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி  அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.

இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடாரி வாங்கி வாருங்கள் என்றும் கூறி அவரை அனுப்பி வைத்தார்கள்.

கோடாரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி  அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி யாசித்த அந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.

நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்குப் பின் எம்மை வந்து நீர் சந்திக்க வேண்டும்என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

 அவர் நபி  அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார்.

பதினைந்து நாட்களுக்குப் பின் நபி  அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து மகிழ்ந்த முகத்தோடு இதற்காக நன்றி கூறினார்.

அப்போதுஇறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்என்று கூறி நபி  அவர்கள் அவரை அனுப்பி வைத்தார்கள்.    ( நூல்: திர்மிதீ )

ü நம்முடைய உணவில் பரக்கத்தை பெற‌:-

 ஸஹாபிகளில் சிலர், யாரஸூலல்லாஹ்!, நாங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வயிறு நிரம்புவதில்லைஎனச் சொன்னார்கள், நீங்கள் தனித்தனியாகச் சாப்பிடுகிறீர்கள் போலும்? என்று ரஸூலுல்லாஹி அவர்கள் கேட்டார்கள், அவர்கள் ஆம்என்றார்கள், நீங்கள் சாப்பிடும் போது ஒன்று கூடி, அல்லாஹுத்தஆலாவின் பெயர் சொல்லிச் சாப்பிடுங்கள். உங்கள் உணவில் பரக்கத் உண்டாகும் என நபி  அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)  

நாம் உண்ணும் உணவின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள்.  [திர்மிதி]

விரலைச் சூப்பி, பாத்திரத்தை நன்கு வழித்து, தட்டில் மீதம் வைக்காமல், சாப்பிடும்படி நபிகள் நாயகம்  அவர்கள் கட்டளையிட்டு விட்டு உணவில் எங்கே பரக்கத் இருக்கிறது என்று நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறினார்கள். [முஸ்லிம் 4139]

உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான். மனிதன் உணவு உண்ணும்போதும் அவன் பங்கேற்கிறான். (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு, பிறகு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார். [ முஸ்லிம் 4138]

 [பிஸ்மில்லாஹ் கூறி] உங்களுடைய உணவை அளந்து போடுங்கள்! உங்களுக்கு பரகத் செய்யப்படும். [ புகாரி 2128]

 சஹர் நேரத்தில் உண்ணுங்கள்! சஹர் உணவில் பரக்கத் இருக்கிறது  [புகாரி 1923]

 

ü அல்லாஹ் நமக்கு கொடுத்ததை பொருந்திக் கொள்வதில்தான் பரக்கத் இருக்கிறது:-

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொள்கிறாரோ! அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ! அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை [ முஸ்னத் அஹமது 19398)

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; [பரகத்தல்ல] மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். [பரகத்தாகும்] [புஹாரி 6446, 6447]

நான் அல்லாஹ்வின் தூதர்  அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கி விட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையான தும் ஆகும். யார் இதைப் பேராசையின்றி எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் (பரகத்) வழங்கப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்ததுஎன்று கூறினார்கள். [புஹாரி 1472] 

 

ü சொந்த பந்தங்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வதின் மூலம் நம் ஆயுலில் பரக்கத்தை பெறலாம்:-

நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது, இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹுத்தஆலாவின் கோபத்தைத் தணிக்கிறது. உறவு முறையினைப் பேணுவது (சொந்த பந்தங்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது) ஆயுளை அதிகரிக்கிறது” [ஆயுலில் பரக்கத்தை செய்கிறது]  (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

 ஆயுளை அதிகரிப்பது என்பதன் பொருள்:- சொந்த பந்துக்களை சேர்ந்து வாழ்பவருடைய வயதில் பரகத் செய்யப்படுகிறது, நற்காரியங்கள் செய்ய நல்லுதவி வழங்கப்படுகிறது, மறுமையில் பலன் தரும் காரியங்களில் இவருடைய நேரங்கள் செலவாகும். (நவவீ)

ü நம் வீட்டில் பலவீனர்கள் / இயலாதவர்கள் இருப்பதும் பரகத்தான்:-

 முஸ்பி இப்னு ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (அவர்களது தந்தை) ஸஃது (ரலி) அவர்களுக்கு, (செல்வத்திலும், வீரத்திலும்) தன்னைவிடக் குறைந்த நிலையிலுள்ள ஸஹாபாக்களைவிட தனக்குச் சிறப்பும் மேன்மையும் இருக்கிறதென்ற எண்ணம் இருந்தது. உங்களில் பலவீனர்கள், இயலாதவர்களின் பரக்கத்தால்தான் உங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படு கின்றன என்று நபி  அவர்கள் கூறி (அவர்களின் எண்ணத்தைச் சீர் திருத்தி)னார்கள்.(புகாரி)

ü வீட்டில் நுழையும்போது வீட்டாருக்கு ஸலாம் சொல்லுவதின் மூலம் பரக்கத்தை பெறலாம்:-

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், (வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள்..- [அல்குர்ஆன்  24:27.]

என் அருமை மகனே! நீர் உமது வீட்டில் நுழையும்போது வீட்டாருக்கு ஸலாம் சொல்லும்! இது உமக்கும், உமது வீட்டாருக்கும் பரக்கத் உண்டாகக் காரணமாக இருக்கும் . (திர்மிதீ)

ü நோயாளியை நலன் விசாரிக்க / சந்திக்கச் செல்வதின் மூலம் பரக்கத்தை பெறலாம்:-

எவர் நோயாளியை நலன் விசாரிக்க அல்லது தன் முஸ்லிம் சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால், நீங்கள் பரக்கத் பெற்றுவிட்டீர்கள், உங்கள் நடையும் பரக்கத் பொருந்தியது. மேலும் உங்களுடைய தங்குமிடத்தை நீங்கள் சொர்க்கத்தில் ஆக்கிக் கொண்டீர்கள்!” என்று உரத்த குரலில் ஒரு மலக்கு அறிவிப்புச் செய்கிறார்  (திர்மிதீ]

ü பெரியவர்களை கண்ணியப்படுத்துவதின் மூலம் பரக்கத்தை பெறலாம்:-

உங்களுடைய பெரியவர்களுடன் பரக்கத் இருக்கிறது (முஸ்தத்ரக் ஹாகிம்) ஆதலால் அவர்களிடம் கண்ணியமாக நடந்திடுவோம்.

ü பரக்கத்தை பெறுத்தரும் திருமணம்:-

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறினார்கள். [அஹ்மத் ]

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ

நபி  அவர்கள் திருமனம் முடிக்கும் போது ஒரு மனிதனை வாழ்த்தினால்; அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் [பரக்கத்] அபிவிருத்தி வழங்குவாயாக! நல்ல காரயங்களில் இவ்விருவரையும் ஒன்று சேர்பானாக‌! எனக் கூறுவார்கள். [திர்மிதி 1011]

ü நற்பேச்சு கூட பரக்கத்தை பெற்றுத்தரும் துஆவாக  இருக்கட்டும்:-

ரஸூலுல்லாஹி  அவர்களுக்கு அன்பளிப்பாக ஆடு ஒன்று கொடுக்கப்பட்டது வந்தது, ஆயிஷா! இதைப் பங்கிட்டுவிடுஎன்று நபி  அவர்கள் கூறினார்கள். மக்களுக்கு மாமிசத்தை பங்கிட்டுவிட்டுப் பணிப்பெண் திரும்பி வந்ததும் மக்கள் என்ன சொன்னார்கள்?” என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்பது வழக்கம். மக்கள் (بَارَكَ اللهُ فِيكُمْ) அல்லாஹுதஆலா உங்களுக்கு பரக்கத் செய்வானாக!‘ எனக் கூறினார்கள் எனப் பணிப் பெண் சொன்னாள். (وَفِيهِمْ بَارَكَ اللهُ) அல்லாஹுதஆலா  அவர்களுக்கு பரக்கத் செய்வானாக அவர்கள் நமக்கு என்ன துஆச் செய்தார்களோ அதையே நாமும் அவர்களுக்குத் துஆச் செய்துவிட்டோம்.(துஆச் செய்வதில் நாம் அவர்களுக்குச் சமமாகிவிட்டோம், இப்பொழுது மாமிசத்தைப் பங்கிடப்பட்டதின் நன்மை நமக்கு உரியதாகிவிட்டதுஎன ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (அல்வாபிலுஸ்ஸய்யிப்)  

ü ம் ஊர் செழிக்க [பரக்கத் பெற] துஆ செய்வோம்!

நபிகளாரின் சொந்த தம் ஊரான மதினா நகர் செழிக்க [பரக்கத் பெற] நபிகளார் செய்த துஆக்களைப் போல நாமும் நம் ஊர் செழிக்க [பரக்கத் பெற] துஆ செய்வோம்.

ரஸூலுல்லாஹி  அவர்களிடம் பருவகாலத்தின் புத்தம் புதிய பழ வகைகள் கொண்டு வரப்பட்டால், 

(اَللّهُمَّ! بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ) யா அல்லாஹ்! நீ எங்களது மதீனா நகரிலும், எங்கள் பழங்களிலும், எங்களது முத்திலும் எங்களுடைய ஸாஃவிலும், மிகுந்த பரக்கத்தைத் தருவாயாக!” என்று துஆச் செய்வார்கள். பிறகு அந்த நேரத்தில் அங்கு வந்துள்ள குழந்தைகளில் மிகச் சிறியவர்களுக்கு அந்தப் பழத்தைக் கொடுப்பார்கள். (முஸ்லிம்)

  அல்லாஹ்வே! மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதைவிட இரண்டு மடங்கு மதினாவிற்கு பரக்கத் செய்வாயாக! என்று நபிகள் நாயகம்  அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். [புகாரி 1885]

ü நம் வாழ்க்கையில் பரக்கத்தை பெற பெரியோர்களிடம் பரக்கத்திற்க்காகபிரார்த்திக்க வேண்டுதல்:-

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபிகள் நாயகம்  அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபிகள் நாயகம்  அவர்கள், அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும், குழந்தைகளையும், அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். [புகாரி 6344]

அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் என்ற நபித்தோழர் கூறுகிறார்கள்: நபிகள் நாயகம்  அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபிகள் நாயகம்  அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டபோது; நபிகள் நாயகம்  அவர்கள் அல்லாஹ்வே! இவர்களுக்கு வழங்கியவற்றில் இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள் புரிவாயாக! என்று கேட்டார்கள். [முஸ்லிம் 4149]

அபூஹுரைரா {ரலி} அவர்கள் ஒரு சில பேரீத்தம்பழங்களை கையில் எடுத்துக் கொண்டு அண்ணல் நபி  அவர்களிடம் வந்து, யா ரஸூலல்லாஹ்! இந்த போரீத்தம்பழங்களில் பரக்கத் ஏற்பட துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள். அதை பெற்றுக் கொண்டு நபி  அவர்கள் துஆ செய்து விட்டு, இதை ஒரு பையில் போட்டு வைத்துக் கொள். உனக்கு தேவைப்படுகிறபோது அதில் உன் கரத்தை நுழைத்து எடுத்துக்கொள். ஆனால் அதை திறந்து பார்க்கக் கூடாது என்று கூறினார்கள். அதை பெற்றுக் கொண்ட அபூஹுரைரா {ரலி} அவர்களும் அதை பயன் படுத்தி வந்தார்கள். தான் போகின்ற பயணங்களிலும், போர்க்களங்களிலும் அதை எடுத்துச்செல்வார்கள். தானும் சாப்பிடுவார்கள், தன் தோழர்களுக்கும் கொடுப்பார்கள். இப்படியே பல வருடங்கள் ஓடின. ஹஜ்ரத் உஸ்மான் {ரலி} அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட தினம் தான் அந்தப் பை அவர்களிடமிருந்து தொலைந்து போனது. {திர்மிதி}

ü பரக்கத்தை பெற தடையாக இருக்கும் செயல்கள்:-

நாயும், உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் [பரக்கத் ]அருள் வானவர்கள் நுழைய மாட்டார்கள். [புகாரி-3225]

(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரகத் கிடைக்காமல் போகின்றது. [இப்னு மாஜா 87]

அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள்:  (பொய்)  சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்: ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்! புகாரி (2087)

சூடான உணவு அது ஆறும் வரை அதை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் தடைசெய்தார்கள் ஏனென்றால் சூடான உணவில் எந்த பரகத்தும் இல்லை எனக் கூறினார்கள் . பைஹகீ (5636]

ü நாம் ஓவ்வொரு நேரமும் ரப்பிடம் பரக்கத்தை கேட்க வேண்டும்:-யாரஸூலல்லாஹ்! ﷺ தங்கள் மீது ஸலாம் கூறும் முறையை நாங்கள் தெரிந்துள்ளோம். (தஷஹ்ஹுதில் ( اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِـيُّ وَرَحْـمَةُ اللهِ وَبَرَكَاتُهُ ) சொல்லித் தங்கள் மீது ஸலாம் கூறுகிறோம்) தங்கள் மீது ஸலவாத் எவ்வாறு சொல்வது என்பதையும் எங்களுக்குச் சொல்லுங்களேன்என்று நாங்கள் கேட்டோம் ( اَللّهُمَّ صَلّ عَلي مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلي إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلي مُحَمَّد وَعَلي آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلي إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ ) ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது ரஹ்மத்தைப் பொழிந்ததைப்போல யால்லாஹ்! உன் அடியாரும், ரஸூலுமான ஹஜ்ரத் முஹம்மது ﷺ அவர்கள் மீது, ரஹ்மத்தைப் பொழிவாயாக! மேலும் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் பரக்கத்தைப் பொழிந்ததைப்போல் ஹஜ்ரத் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் பரக்கத்தைப் பொழிவாயாகஎன்று சொல்லுங்கள்என நபி ﷺ அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

ü நபி  அவர்கள் சொன்னார்கள்.  ஒருவர் கையை மேலே உயர்த்தி துஆ செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய கையில் பரக்கத்தையும் தனது ரஹ்மத்தையும் வைத்து விடுகின்றான் எனவே துஆ கேட்டால் இரு கைகளையும் முகத்தில் தடவும் வரை வேறு பக்கம் திரும்ப வேண்டாம் என்றார்கள் .[தப்ரானி]

 

 

 

பரக்கத் மட்டும் பெற்றாலே நாம்தாம் கோடிஸ்வரர்:-

என் தந்தை உஹுத் போரின்போது, தம்மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி ﷺ அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி ﷺ  அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம்பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக்கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம்பழங்களை நபி ﷺ அவர்கள் கொடுக்கவில்லை.

மாறாக, ‘‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்துஅவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) பிரார்த்தனை செய்தார்கள்பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன் களையெல்லாம் திருப்பிச்செலுத்தினேன். (முழுக் கடனையும் அடைத்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதியிருந்தன. [புகாரி 2395]

(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டபோது, நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பார்த்தேன். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மக்கள் தண்ணீரைத் தேடினர். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்ய சிறிது தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது [பரக்கத்தான] கையை வைத்தார்கள்பிறகு அதிலிருந்து அங்கத் தூய்மை செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர் ﷺ அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரந்து வருவதை நான் கண்டேன். மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தனர். எந்த அளவுக் கென்றால், அவர்களில் கடைசி ஆள்வரை அனைவரும் (அதிலேயே) அங்கத் தூய்மை செய்து முடித்தனர் [புகாரி 4577.]

(அஸ்ஹாபுஸ் ஸுஃப்பாதிண்ணைவாசிகளின் பசியை போக்கிய பால் சம்பவம் விரிவாகபார்க்க (புகாரி 6452)

பரக்கத்தான மாதங்களில் பரக்கத்தை பெற‌:-

اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان

 ஆக நம் வாழ்வு முழுவதும் பரக்கத் நிறைந்ததாகட்டும்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001