மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லலாமா?

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.(5:51) وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏ (நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) “அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)” எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை.(2:120) தமிழகம் முழுவதும் மாற்று மத பண்டிகை தீபாவளி கொண்டாட்டம். தமிழகத்தில் 80% மக்களுக்கு மகிழ்வை தரும் பண்டிகை.அருகிலிருக்கும் வீட்டார் எல்லாம் சுவைமிகு இனிப்புகளையையும், பலகாரங்களையும் தந்து குவித்துவிட்டனர். கூடவே,"இது சாமிக்கு செய்ததல்ல. தனியே உங்களுக்கு என எடுத்து வைத்தது"பூஜை பொருள் என்றால், நாம் உண்ணாமல் விட்டுவிடுவோமோ என்ற எண்ணத்தில் வரும் வார்த்தை இது."எங்கள் மகிழ்வில் உங்களுக்கும் பங்குண்டு" என்று சொல்லாமல் சொல்லிய சிலேடை வாசகம் ! இஸ்லாம் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் எனும் இரண்டு பண்டிகையை மட்டுமே கொண்டாட அனுமதிக்கிறது. ஆனால் சில பண்டிகைகளை முஸ்லிம்களாகவே உருவாக்கி கொண்டனர். இஸ்லாமில் பிறந்த நாள், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் இவற்றை பெரும்பாலான முஸ்லிம்கள் கொண்டாடாமல் இருப்பதில்லை. இமாம் இப்னு தைமியா (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்கள் அவர்களின் மாணவரான இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்களும் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறுவது ஹராம் என்று பத்வா வழங்கியுள்ளார்கள். அந்த வகையில் இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுழ்ழாஹ்), முஹம்மத் உஸைமின் (ரஹிமஹுழ்ழாஹ்), அல்பானி (ரஹிமஹுழ்ழாஹ்) போன்ற பலர் மாற்று மத பண்டிகைக்கான வாழ்த்துப் பரிமாறல் அல்லது மற்ற மதங்களின் புது வருடத்துக்கான வாழ்த்துக் கூறல் ஷரீஆவின் பார்வையில் ஹராம் என்றே பத்வா கொடுத்துள்ளனர். இவர்கள் ஹராம் என்பதற்கான நியாயங்களை முன்வைக்கும் போது இது மாற்ற மதத்தவர்களின் மத ரீதியான பண்டிகைத் தினமாகும். எனவே, இதற்காக வாழ்த்துப் பரிமாறுவது அவர்களின் மார்க்க விவகாரங்களில் ஒப்பாகுவதற்குச் சமனாகும். இஸ்லாம், பிற சமூகத்திற்கு ஒப்பாகுவதை ஹராமாக்கியுள்ளது எனவும் வாழ்த்துத் தெரிவிப்பதன் மூலம் அவர்களின் பண்டிகையில் நாம் பங்கேற்கின்றோம் என்றே அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாம் எமக்குத் தெரியாமலே மாற்று மதத்தினரின் மத அனுஷ்டானங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இவைகளைத் தவிர்ந்து கொள்வதே முஸ்லிமின் கடமையாகும். குர்ஆனும், ஹதீஸும் இவ்வாறு மாற்று மதத்தினரைப் பின்பற்றுவதைக் கடுமையாக எச்சரித்துள்ளது.குர்ஆனும், ஹதீஸும் இவ்வாறு மாற்று மதத்தினரைப் பின்பற்றுவதைக் கடுமையாக எச்சரித்துள்ளது. يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் : 5:51) وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏ (நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) “அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)” எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை.(2:120) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழியழ்ழாஹு அன்ஹு ) அறிவித்தார்.‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்லழ்ழாஹு அலைஹிவஸல்லம் ) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்லழ்ழாஹுஅலைஹிவஸல்லம் ) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.ஸஹீஹ் புகாரி : 7320. அபூ ஹுரைரா(ரழியழ்ழாஹு அன்ஹு அறிவித்தார்.நபி(ஸல்லழ்ழாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?’ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்லழ்ழாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.ஸஹீஹ் புகாரி : 7319. மேலும் வாழ்த்துப் பரிமாறுவதை அனுமதிப்பதானது முஸ்லிம் நாடுகளில் மாற்று மதத்தினரின் விழாவை இறக்குமதி செய்து கொண்டாடுவதற்குச் சந்தர்ப்பத்தை வழங்குவதாக அமையும் எனவும் விளக்கம் கூறியுள்ளனர். எனவே மாற்றுமதத்தவர்களின் மத அனுஷ்டான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ அல்லது பொதுவான வாழ்த்துக்குரிய சொற்பிரயோகங்களை பயன்படுத்தியோ வாழ்த்துக்களைப் பரிமாறுவதும் அன்பளிப்புக்களை வழங்குவதும் ஹராம் ஆகும் என இமாம் இப்னு தைமியாவின் சிந்தனையைப் பின்பற்றும் சில நவீன கால அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளனர். மிகக் கருணை மிக்க அழ்ழாஹ்வை நெருங்கி வாழ்வதே ஒவ்வொரு இறையடியானுக்கும் கிடைக்கும் அருளாகும். அழ்ழாஹ்வை நெருங்கும் போது அவன் அதை விடப் பல மடங்கு அவனது அடியானோடு நெருங்குகின்றான்.سبحان الله . நபி(ஸல்லழ்ழாஹு அலைஹிவஸல்லம் ) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்.(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்.என அனஸ்(ரழியழ்ழாஹு அன்ஹு ) அறிவித்தார்.ஸஹீஹ் புகாரி : 7536.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001