இஸ்லாமிய பார்வையில் தீபாவளி


اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏

நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். 8:36. 

قَالَ النَّبِيِّ صلى الله عليه وسلم

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ

பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்புகாரி-10                                   

 

 இவ்வுலகில் நன்மை தீமை- நல்லவர் கெட்டவர்

என ஒவ்வொன்றிற்க்கும் எதிர்மறை இருப்பது போல

நல்ல [நன்மை] பண்டிகைகள் தீய [பாவ] பண்டிகைகள் என்பதிலும் எதிர்மறை இருக்கின்றன.

எப்படி நல்லவர்களை / நன்மையானவைகளை பார்த்தால் நன்மை செய்வோமோ? அது போல நாம் நல்ல [நன்மை] பண்டிகைகளை கொண்டாட வேண்டும்

[உதாரணம் : இரு பெருநாட்கள்]

எப்படி தீமைகளை / தீமையானவர்களை கண்டு ஒதுங்குவோமோ ? அது போல நாம் தீய [பாவ] பண்டிகைகளை விட்டும் வெறுத்து ஒதுங்க வேண்டும். அதுதான் நமக்கும், நம் குடும்பத்திற்க்கும், நம் மார்கத்திற்க்கும் நாம் கொடுக்கும் மரியாதையாகும்..

 

 

நம்முடைய இந்து சகோதரர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகிறார்கள்.

பட்டாசு வெடிப்பது – வாணவேடிக்கைகள் செய்வது                              அவர்களது கொண்டாட்டம்அது அவர்கள் வணக்கம்.

உலகில் சிலை வணக்கம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கேலிக் கூத்துக்கள் நடந்ததும்-  நடப்பதும் வாடிக்கைஆபாசம்ஆட்டம் பாட்டம்தேவையன்றி                             சப்தமெழுப்ப   இசைக்கருவிகள்,வாணவேடிக்கைகள்   செய்தல் ,பணத்தை  ஒரு பயனும் இல்லாத வழிகளில்                செலவழித்தல் இவை அனைத்தும் சிலை வணக்கத்தின்  ஒரு பகுதியே! சீனர்கள் நிஜக்காசை கொடுத்து போலிக் காசுகளை வாங்கி அதை தீயில் போடுவார்கள்இறந்து போன பிரதேதத்துடன்   கட்டுக்கட்டாக அக்காசுகளை வைப்பார்கள்

 

ஜாஹிலிய்யாக் காலத்தில் மக்காவாசிகள் தவாபு செய்கிற போது சீட்டியடிக்கிற பழக்கமும் கைதட்டுகிற பழக்கமும் கொண்டிருந்தனர்வீணான வழிகளில் காசு பணத்தை விரயம் செய்தனர்அதைத்தான் அல்லாஹ்       அன்பால் அத்தியாயத்தில் 35 36 வசனங்களில் கண்டிக்கிறான்.

 

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏

அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள் 8:35. 

 

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏

8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.

 

 

 

ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேளிக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.

 

தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது.

 

இது போன்ற பண்டிகைகளில் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.

 

ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்களிலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் வலியுறுத்துகின்றது.

 

நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம் வணக்கமாக ஆக்கியிருக்கின்றது.

 

இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது. மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.

இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.

பட்டாசு வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார்.

(தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.)

பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சோடியம் நைட்ரேட் அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோனடியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகின்றன. இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக் கேட்டை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆய்வு மையத்தின் மருத்துவர் ஆர். ஸ்ரீதரன் கூறுகின்றார். இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றது என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார்.

இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.

இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்.

இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.

மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.

பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகள் கூட, சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மருத்துவர்களின் வெறும் ஆய்வு அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம்.

பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.

இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ‌   وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். 4:29

 

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ وَاَحْسِنُوْا اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (2:195)

 

நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா?

பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா?

ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு?

மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய ++ பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன.

இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.

قَالَ النَّبِيِّ صلى الله عليه وسلم

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ

பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி-10 

 

வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா?

வீணாகச் செலவழிக்கும் போது, காசைக் கரியாக்காதே! என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.

ثُمَّ لَـتُسْـَٔـلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ

அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 102:8)

பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை!

அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும்.

பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

முஸ்லிம்களது பெருநாட்களில் இஸ்லாமின் ஏகத்துவ தத்துவமும் சகோதரத்துவ கோட்பாடும் அமைதி மார்க்கத்தின் 

அடையாளங்களும் மிளிர்வதைப் போலவே பிற 

சமூகத்தினரின் விசேச நாட்களில் அவர்களுடைய

 தத்துவங்களும் கோட்பாடுகளும் வெளிப்படும் என்பதை 

சிந்திக்கிற யாரும் அறிந்து கொள்ளலாம்.

இந்துக்களின் கொண்டாடமான தீபாவளியும் அப்படித்தான்இந்து மதத்தின் கற்பனையான பொய்யான கோட்பாடுகளையும் அசமஞ்சத்தனமான த்த்துவங்களையும் பிரதிபலிக்கிறது

தீபாவளி பற்றி இந்துமத நூல்கள் குறிப்பிடுகிற செய்திகளை கொஞ்சம் கவனியுங்கள்அதன் தத்துவங்களிலும் நடைமுறைகளிலிலும் குப்ரு ஷிர்கின் அனைத்து அம்சங்களும் அதில் இருப்பதை உணரலாம்.

'தீபம்என்றால் ஒளிவிளக்கு. 'ஆவளிஎன்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றிஇருள் நீக்கிஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும்நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

 

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம்அன்றைய தினம்அதிகாலையில் எல்லா இடங்களிலும்தண்ணீரில் கங்கையும்எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்குங்குமத்தில் கௌரியும்சந்தனத்தில் பூமாதேவியும்புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றையதினம்எல்லா நதிகள்ஏரிகள்குளங்கள்கிணறுகளிலும்நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.

புராணக் கதைகளின் படிகிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன்அந்நரகன்தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டிகிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

·  கிருஷ்ணர்நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போதுஅவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்குர்ஆன்சொல்வது போல எந்த ஆதரமும் இன்றி செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகள் சிலை வணக்கத்திற்கு மக்களை தூண்டும் சைத்தான் அழகுபடுத்திக் காட்டும் நடவடிக்கைகளாகும்.

இத்தகைய திருவிழாக்களை கண்டு மனதில் வெருப்பு கொள்வதும் விலகி நிற்பதும் ஈமானிய குணமாகும்.

நமது ஈமான தூய்மையானதாக இருக்க வேண்டும்.

 நாம் வருடா வருடம் தீபாவளி கொண்டாடக்கூடாதென எவ்வளவு பயான் பண்ணினாலும், அத்தீமை நின்ற பாடில்லை.

ஆசைக்குதானே ஒரே ஒரு வேட்டு பொட்டுகுறன்.

சின்னப்புள்ளதானே வேட்டு போடாட்டும்.

ஓசி வேட்டுதானே வேஷ்டா போகும் . நம்ம வேட்டு போடுவோம். Etc..

இப்படி சின்ன.. சின்னகாரணங்களைச் சொல்லி.. சொல்லி.. நம் விலை மதிப்பில்லா ஈமானையும், இறையன்பையும் இழந்து விடுகிறோம்.

 

 

 அல்லாஹ் []  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى   

وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள்எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள் .அல்குர்ஆன் 25:67 

 நபி  அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم

عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ : رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلممَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ

நம்முடைய மார்க்கத்தில்  இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.அபூதாவூத் 4606,

தீபாவளிவுடைய நாளில் ஒரு முஃமீன் எப்படி நடந்து கொள்வார்

அன்புள்ளவர்களே! அண்ணல் நபி  அவர்களின் வாழ்வில் எத்தனையோ படிப்பினைகள் அடங்கியிருக்கின்றன. அவர்களைவிடச் சிறந்த முன் மாதிரி வேறு யாரும் இருக்க முடியாது

நபி சொன்ன, வாழ்ந்த வாழ்க்கையின் பிரகாரம் நாம் வாழ முயற்சிக்க வேண்டும். நபி சொல்லாத வாழ்க்கையை , சந்தோஷத்தை புறந்தள்ளி விட வேண்டும்.

 

ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்”(திர்மிதீ 2317]

மேற்கூறிய ஹதிசை ஆராயும் போது தீபாவளி பண்டிகை நம் இஸ்லாமியர்  வாழ்விற்க்கு தேவையற்றது , அதை விட்டும் தவிர்ந்திருத்தல் மிக சிறப்பானதாகும்.

இந்த ஹதீஸின் கருத்து, தீபாவளி பண்டிகை நாளில் வீணான செயல்களைவிட்டு விலகியிருப்பதும், ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளமாகும். அச்செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பது ஒருவரிடமுள்ள இஸ்லாத்திற்கு அழகும், பொலிவுமாகும் என்பதாம்.

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِۖۛۚ وَاَحْسِنُوْاۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.  {அல்குர்ஆன் 2:195..}

وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِۖ{ உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் } என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்தம் 

வெடி போடுதல், வெடி போட உதவி செய்தல் . Etc……. இவையெல்லாம் உலக வாழ்வில் நம் கையால் அழிவை தேடும் காரணிகளாகும்.

وَاَحْسِنُوْا என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்தம்

மேற் சொன்ன விஷயங்களை தவிர்தலே நன்மை செய்வோராக ஆகலாம். இன்ஷா அல்லாஹ்.                                                 தீபாவளிவுடைய நாளில் ஒரு முஃமீன் ஒரு முஃமீன் எப்படி நடந்து கொள்ளமாட்டார்அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் வெறுக்கும் செயலில அப்படி என்ன நமக்கு  சந்தோஷம் இருக்கிறது?
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத செயலில் அப்படி என்ன நமக்கு  சந்தோஷம் இருக்கிறது ? இப்படி செய்தால் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரின் பொருத்தமும் நமக்கு கிடைக்குமா

தீபாவளி கொண்டாட காத்திருக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு, ஸஹாபாக்கள் எப்படியெல்லாம் தீய பாவத்தை விட்டும் ஒதுங்கி நின்றார்கள் / எப்படியெல்லாம் தீய பாவத்தை வெறுத்தார்கள் என்பதனை ஸஹாபாக்களோடு.. நம்மை ஒப்பீடு செய்து பார்ப்போம் வாருங்கள்…… 

. எண்

 ஸஹாபாக்கள்….

நாம் ..

1

சின்ன சின்ன நஃபிலான வணக்கங்களின் மூலம் கூடுதல் நன்மைகளை பெற்று இறை நேசத்தையும் அதிக தரஜாக்களையும் பெற்றார்கள்.  

சின்ன சின்ன பாவங்களின் மூலம் கூடுதல் தீமைகளை பெற்று இறைசாபத்தை பெறுகிறோம்

2

போட்டி போட்டு அமல் செய்வார்கள்.

போட்டி போட்டு பாவம் செய்கிறோம்

3

ஒரு சிறு அமலும் விடுபடாமல் 100- க்கு 100 பேணுதாலாக அமல் செய்வார்கள்.

சிறு பாவத்திலும் கொஞ்சமும் தீமை விடுபடாமல் 100- க்கு 100 மார்க் தீமை செய்கிறோம்

4

ஆகா…  இவர் இப்படி அமல் செய்கிறாரே இவர்  நம்மை விட நன்மையில்  முந்திவிடுவாரோ… [என்று தேட்டம் இருந்தது

இவன் மட்டும் பாவம் செய்யுரான். நானும் பாவம் செய்யுவேன். [என்று அசால்ட்டு இருக்கிறது

5

ஆகா…  ஒரு சின்ன தப்பு பண்ணிடோமே இதன் மூலம் நம்முடைய நல் அமல்கள் அழிந்துவிடுமோ. [என்ற பயம் இருந்தது

இது சின்ன தப்புதானே இது நம்மள என்ன செஞ்சிட போகுது அப்பரம் பாத்துகிடலாம்…. [பயமே இல்லை

6

பாவம் செய்ய எண்ணம் வந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள் 

பாவம் செய்ய எண்ணம் வந்தால் அதனை ஆசையோடு துணிந்து செய்கிறோம்

7

தமது சொத்து, சுகம், ஆசையை விடவும், நாயகத்தை நேசித்தார்கள்… 

தமது சொத்து, சுகம், ஆசையை பாவத்தில் செலவளித்து நாயகம் நம்மை வெறுக்கு அளவில் நடந்து கொள்கிறோம்.  

8

தன் நஃப்ஸை கட்டுப்படுத்த சிரமமாக இருக்கும் ஆனால் அதற்க்கும் பரிசாக சுவனம்  கிடைக்கும்

தீபாவளி பண்டிகை பார்பதற்க்கு கண்குளிர்சியாக இருக்கும் ஆனால் தன் நஃப்ஸை கட்டுப்படுத்தவில்லையெனில் அதற்க்கு பரிசாக நரகம்  கிடைக்கும்

9

மது ஹரமானதும் மதுஆறு தெருவில் ஓடியது, வட்டி ஹரமானதும் அவ்வட்டிதள்ளுபடி செய்யப்பட்டது.

வீண் விரயம் ஹராம் என்றிருந்தும் அதனை செய்து வருகிறோம்.

10

அல்லாஹ்வின் அன்பை குறைக்கு ஒரு சிறு தீமையும் செய்யவில்லை அந்த ஆசையுமில்லை.

நம் ஆசையும் சந்தோஷமும் பாவம் செய்வதில்தான் உள்ளது..

11

ஷைத்தான் ஸஹாபாக்களை பார்த்தால் பயப்படுவான்.

நம்மை பார்த்தால் தோழமை கொள்கிறான்.

 

ஆக நம் ஆசையை, நஃப்ஸை கட்டுப்படுத்தி, ஸஹாபாக்களை போல பேணுதலாக வாழுவோமாக!

தீபாவளிவுடைய நாளில் ஒரு முஃமீன் எப்படி மக்களை அத்தீமையிலிருந்து பாதுகாக்க பாடுபடுவார்?

அன்புள்ளவர்களே!! நாம்  தீமை நிறைந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், நம் சிறார்களையும் அத்தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் நாம் தாம் அதற்க்கு பொறுப்பாளி. இது தொடர்பாக றுமையில் விசாரிக்கப்படும்.

وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ۞). (المؤمنون:٣

இன்னும் அவர்கள் வீணானவற்றைப் புறக்கணித்து இருக்கிறவர்கள் (அல்முஃமினூன்:3)

وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ لاَ يَشْهَدُوْنَ الزُّوْرَ لا وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّواْ كِرَامًا۞). (الفرقان:٧٢

இன்னும் அவர்கள் எத்தகையோறென்றால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; வீணானதின் பக்கம் அவர்கள் நடந்து சென்றால் கண்ணியமானவர்களாக (அதை விட்டும் ஒதுங்கிச்) செல்வார்கள் (அல்ஃபுர்கான்:72).

உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால்தடுக்கட்டும்அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும்அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.  திர்மிதி (2173),

தீபாவளி பிற சமுதாயக் கலாச்சாரம்

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த தீபாவளி பண்டிகையை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தீபாவளி பண்டிகை / கொண்டாட்டம் பிற மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் கொண்டாடக் கூடாது.

ஒரு உண்மையான முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

«عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‏”‏ ‏.‏

ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார்.( அபூதாவூத் 1514 ,  4031) 

இது எவ்வளவு கடும் எச்சரிக்கைஇதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?

தீபாவளி நமக்கல்ல..

திருக்குர்ஆன் சொல்வது போல எந்த ஆதரமும் இன்றி செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகள் சிலை வணக்கத்திற்கு மக்களை தூண்டும் சைத்தான் அழகுபடுத்திக் காட்டும் நடவடிக்கைகளாகும்.

இத்த்தகைய திருவிழாக்களை கண்டு மனதில் வெருப்பு கொள்வதும் விலகி நிற்பதும் ஈமானிய குணமாகும்.

நமது ஈமான தூய்மையானதாக இருக்க வேண்டும்.

தவ்ஹீதின் தளகர்த்தரான நபி இபுறாகீம் (அலைமக்களின் முன்னிலையில் தன்னுடைய ஈமானை இப்படிப் பிரகடணப்படுத்தினார்கள்.

إِنِّي وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ

தொழுகையை தொடங்குவதற்கு முன் அல்லாஹ்விற்கு அடியார்கள் கொடுக்கிற உறுதிமொழியாக இது அமைந்திருக்கிறது.

குர்பானி கொடுப்பதற்கு முன்னதாக இதை ஓதுகிறோம்,

இந்த வாசகத்தில் உள்ள ஹனீபன் என்ற வாசகம் மிக முக்கிய கவனத்திற்குரியது.

அசத்தியமான அனைத்து வழிகளை விட்டு விலகி சத்தியமான வழியின் பால முழுச் சார்பு கொண்டவனாக அல்லாஹ்வை வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும்.

வஜ்ஜஹத்துவில் இடம் பெற்றுள்ள இரண்டு வாசக்ங்கள் ஹனீபன் என்பதன் பொருளை விளக்குகின்றன,

وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ

وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

இஸ்லாம் முஸ்லிம்களிடம் இரண்டு அம்சங்களை எதிர்பார்க்கிறதுது,

அவர்கள் முஸ்லிம்களாக நடக்க வேண்டும் 

அவர்களிடம் முஷ்ரிகின்  அம்சங்கள் இருக்க கூடாது

முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான உயர்வானஇறைவனுக்கு முற்றிலும் அடிபணிகிற ஒரு தூய சமூகத்தை உருவாக்க நினைத்தார்கள். அந்த சமூகத்தில் பிற மதங்களின் அர்த்தமற்ற இறை விருப்பத்திற்கு மாறான கோட்பாடுகள் அனைத்திலிருந்தும் தன்னுடைய சமுதாயம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று விரும்பினார்கள் வலியுறுத்தினார்கள்

வணக்க வழிபாடுகளில் தொடங்கி தாடி மீசை வைப்பதில் தொடர்ந்து ஆடை அணிவது வரை அனைத்து விச்யங்களிலும் முஷ்ரிகின் அடையாளங்களை விட்டு விலகி இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும் என வலியுறுத்தினார்கள்.

உதாரணமாக நிறைய விசயங்களை சுட்டிக் காட்ட முடியும்

ü முஹர்ரம் 9 ம் நாளில் நோன்பு பிடிக்க பெருமானார் (ஸல்) சொன்னது யூதர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக!

ü பெருமானார் (ஸல்) அவர்கள் நரை முடிக்கு சாயம் பூச ,

மீசைய கத்தரித்து தாடியை வளர்க்க உத்தரவிட்டதும் இதன் அடிப்படையிலேயே!

ü பிற மதத்தவர்களின் வழிபாட்டுக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதற்காக சூரியன் உதிக்கிற மறைகிற நேரங்களில் தொழுவதை பெருமானார் தடுத்தார்கள்.

ü சஹர் சாப்பாட்டை வலியுறுத்தியதிலும் இதே கோட்பாடு வலியுறுத்தப்பட்ட்து.

ü பிறமத்தவரின் சமய நடவடிக்கைகளை முஸ்லிம் கள் பின்பற்றக் கூடாது என்று பெருமானார் கடுமையாக எச்சரித்தார்கள்

ü பிற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் போது அங்குள்ள சமய அடையாளங்கள் முஸ்லிம்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் உமர் ரலி எச்சரிக்கையாக இருந்தார்கள்.

ü முஸ்லிம்கள் தங்களுடைய எந்த ஆவலை பூர்த்தி செய்யும் போதும் அதில் பிற மதக்கலப்புக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்

ü இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அறியாமைக் கால சமய நடைமுறைகளை கடை பிடிப்பதை பெருமானார் வன்மையாக கண்டித்தார்கள்

பிற மதத்தவரின் சமயத்திருவிழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதே : {وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ   என்பதின் பொருள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்

பிற மதத்தவர்களின் திருவிழாக் காலங்களில் அவர்களுடைய சடங்குகளில் பங்கேற்பது அல்லாஹ்வுடைய கோபத்திற்கு காரணமாகி விடும் என்று உமர் (ரலி) எச்சரித்துள்ளார்கள்

இந்தியா போன்ற பன்முக சம்ய நம்பிக்கைகளை கொண்ட நாட்டில் வாழ்கிற முஸ்லிம்கள் மார்க்கத்தின் இந்த அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். இல்லை எனில் நமது இஸ்லாமிய வாழ்வு கேள்விக்குறியதாகிவிடும்,

ஒரு பட்டாசு வெடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? என்று அலட்சியமாக கேட்பது இஸ்லாத்தின் நாடித்துடிப்பை புரிந்து கொள்ளாத கேள்வியாகவே அமையும். இஸ்லாமிய வாழ்வில் அக்கறை கொள்ளாத தன்மையாகிவிடும் (அல்லாஹ் நம்மை காப்பானாக!)

குழந்தைகளுக்காக என்ற சமாதானமும் ஏற்கத் தகுந்த்தல்ல. இது நம்முடைய மார்க்கம் அனுமதிக்காத விசயம் என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பது சிரமம் அல்ல. அக்கறை இருந்தால் போதுமானது.

காசு விரயம் என்பதற்கு அப்பால் இதில் சமய நம்பிக்கையின் கலப்பு நம் ஈமானை பாதித்து விடக் கூடியது என்பதையும் முஸ்லிம் உம்மத்தை தூய்மையானதாக உருவாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையையும் நினைத்துப் பார்க்கிற எவரும் பிற சமயத்தவரின் சடங்குகளிலிருந்து கூடுமானவரை தள்ளியே இருப்பார்கள்; இருக்க வேண்டும்.“ ஹனீபன் முஸ்லிமன் என்பதற்கான அடையாளம் அது.  

தீபாவளியும் வீண் விரயமும்

அன்புள்ளவர்களே! இன்று முஃமினாக இருக்கும் நாமே, பிறருக்கு முன் மாதிரியாக இருக்காமல் தீபாவளி கொண்டாட்டம் என்று நம் நேரம், பணம், இபாதத்தை  வீண் விரயம் செய்கிறோமே!! பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.

وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)

وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31).

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)

வீண், விரயம் எதிலும் கூடாது, பணம், பொருள், நீர், பலம், நேரம், பேச்சுஉணவு, பானம், உடை, உறையுள், கட்டடம், சதக்கா என அனைத்திலும் வெகு அவதானம் தேவை. நல்லதுக்குக்கூட வரம்பு மீறி, தேவையின்றி செலவழிக்க முடியாது.

வுழு செய்யும் போது வுழுவின், ஒவ்வோர் உறுப்பையும் மும்மூன்று தடவைகள் கழுவிக்கொள்ள வேண்டும். வுழு நல்ல காரியம்தானே என்பதற்காக மூன்று தடவைகளுக்குமேல் ஓர் உறுப்பைக் கழுவுதல் கூடாது. அது இஸ்ராஃப்.

வுழு செய்துகொண்டிருந்த ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்இது என்ன விரயம்எனக் கேட்டார்கள். ‘வுழுவில் விரயமுள்ளதா?’ என ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) வினவஆம் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் நீர் இருந்த போதிலும் சரியேஎன்றார்கள்.”  ஸூனன் இப்னி மாஜஹ்)

 தீபாவளி சுருக்க கவிதை,:

காசைக்கரியாக்கி ,காதை செவிடாக்கி,காற்றை மாசாக்கி,

வீடுகளை எரித்து ,வீதிகளை குப்பையாக்கிகுழந்தைகள் முதியோர்நோயாளிகளை துன்புறுத்தும்தீபாவலிதேவையா?100 கோடிக்கு குடிப்பதும்1000 கோடிக்கு வெடிப்பதும்,ஏழை நாட்டுக்கு தேவையா?குடிப்பதும் வெடிப்பதும்பண்டிகையல்ல!                                                       இறைவனை வணங்குதலும்-இல்லாதவர்க்குவழங்குதலுமே இஸ்லாம் கூறும் பண்டிகை!

உண்ணுங்கள் பருகுங்கள்வீண் விரயம் செய்யாதீர்!

அல்லாஹு சுப்ஹானஹுத் தஆலா  தீபாவளி எனும்தீமைப் பண்டிகையை விட்டும் நம்மையும், நம் குடும்பத்தையும், நம் சமுதாயத்தையும் பாதுகாத்து அருள்புரிவானாக! ஆமீன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001