முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?

 

 


 

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ

‘‘ஒருவர்மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் அல்குர்ஆன்:5:32.)

، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: புகாரி-7376

உலகெங்கும் தற்போது தீவிரவாதம் தலைத்தோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களால் உலகம் முழுவதிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்இத்தகைய தீவிரவாதச் செயல் மதம், மொழி, இனம், நாடு என்ற பல்வேறு அடிப்படைகளில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் மறுபெயராகவே மேற்கத்திய ஊடகங்களால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சில இடங்களில் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்குமே தீவிரவாதச் சாயம் பூசிவிட்டது உலக ஊடகத்துறைதனிமனிதர்களின் செயல்களை ஒட்டுமொத்த மதத்தோடு தொடர்புபடுத்தத் துவங்கினால் எந்த மதமும் தீவிரவாதப் பட்டம் பெறாமல் எஞ்சி இருக்காது.

பெயரளவில் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சிலரிடத்தில் இவ்வாறான காரியங்கள் இருக்குமே தவிர இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இஸ்லாம் அவர்களின் செயல்களை ஆதரிக்கவும் இல்லைஇஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கும் மார்க்கம்  அல்ல. திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் வேதமல்ல. மாறாக, அன்பை ஏவும் மார்க்கம். மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம்.

ஒருவர் ஒரு உயிரைக் கொன்றால் அவருக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற பாவம் கிடைக்கும் என்று கூறி, உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

‘‘ஒருவர்மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் அல்குர்ஆன்:5:32.)

இவ்வாறு, ஒரு உயிரைக் கொல்வதே ஒட்டுமொத்த மனிதர்களையும் கொல்வது போல் என்று சொல்லும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? துணை நிற்குமாமேலும், மனிதர்களுக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் இலக்கணமே என்பதையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மார்க்கம் என்பதே பிறர் நலம் நாடுவதுதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம்-95

இன்னும், ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வுலகத்தில் வாழும் போது இறையன்பை எதிர்பார்த்தே வாழவேண்டும். அப்படி வாழ்பவரே முஸ்லிம்மக்களுக்கு இரக்கம் காட்டுவது தான் இறையன்பைப் பெற்றுத் தரும் என்றும் மார்க்கம் சொல்கிறது.

، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: புகாரி-7376

இவ்வாறு ஒரு மனிதன் பிற மனிதனுக்கு போதிக்கும் அன்பையே பிரதான தத்துவமாகக் கொண்ட மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறதுஇதை முஸ்லிம்களிடத்தில் உலகம் கண்கூடாகக் காண்கிறது. சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், கஜா புயல் போன்ற எண்ணற்ற இயற்கைப் பேரிடர்களின் போது முஸ்லிம்களின் அன்பும் பாசமும் நிறைந்த அயராத பணி இதற்கெல்லாம் சாட்சிகளாக உலக மக்களின் கண் முன்னால் நிற்கிறது.

சமீபத்திய குஜராத் குஜராத் மோர்பி

தொங்கும் பால விபத்து ஏற்பட்ட உடனேயே கருத்து சொல்லிக்கொண்டு இல்லாமல் களத்தில் இறங்கி பல உயிர்களைக் காப்பாற்றியது யார்? இந்த மீட்பு பணியில் இரண்டு இஸ்லாமியர்கள் பெரும் உதவி செய்துள்ளனர். சம்பவத்தன்று மோர்பியில் உள்ள மருத்துவமனையில் தனது மகளை பிரசவத்திற்காக சேர்த்திருந்தார் தௌஃபீக் பாய். அப்போது சிலர் உடல்களை ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போதுதான் அவருக்கு விபத்து குறித்து தெரிந்துள்ளது. விபத்தை கேள்விப்பட்டவுடன் தௌஃபீக் பாய் உடனடியாக ஆற்றை நோக்கி ஓடியுள்ளார். அங்கு தப்பியவர்களை மீட்க உதவியுள்ளார். சுமார் 35 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இவர் பேருதவி செய்திருக்கிறார். இது குறித்து உள்ளூர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்த நேரத்தில் நமக்கு சாதி-மதம் தேவையானது அல்ல. மனிதாபிமானம்தான் தேவையானது" என்று கூறியுள்ளார். அதேபோல இதில் உதவிய மற்றொரு நபர், நீச்சல் வீரர் ஹுசைன் பதான். இவர் ஆற்றில் குதித்து தனது உயிரையும் பொருட்படுத்தாது 50 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/india/muslim-youth-who-saved-lives-in-the-morbi-bridge-accident/articlecontent-pf796215-483347.html
ஆனாலும், எத்தகைய மாற்றம் வந்தாலும் ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதில் பொய் பிரச்சாரங்களின் வாயிலாகத் தவிடுபொடியாக்கி, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என மக்களை ஏமாற்றிவிடுகின்றன

அவை அனைத்துமே ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி இருந்து, அந்த நாட்டுக்கும் வேறொரு நாட்டுக்கும் போர் நடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சமாகும்இஸ்லாமிய நாடு மட்டுமல்ல. எந்த நாடாயினும் தனது எல்லையைப் பாதுகாக்கும் போர் செய்யும் போது எதிர்த்து வருபவர்களைக் கொல்வதுதான் உலக வழக்கம். கைகட்டி வேடிக்கை பார்ப்பது இல்லை.

அதுதான் அங்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இஸ்லாத்தைப் பரப்ப போர் செய்யுங்கள் என்றோ, அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்றோ திருக்குர்ஆன் போதிக்கவில்லைமேற்படி சொன்னது போல் நாடுகளுக்கிடையே போர் புரிவதற்குக் கூட இஸ்லாம் சில நெறிமுறைகளை சொல்லித் தருகிறது.

ü இஸ்லாமிய ஆட்சி இருந்தால் மட்டுமே போர்

திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளனஅரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுப்போலத்தான் போர் செய்வதென்பது தனிநபர்களின் மீதோ, குழுக்கள் மீதோ கடமையில்லை. அரசாங்கத்தின் மீது மட்டுமே கடமையானதாகும்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த 23/10/22 ஞாயிறன்று அதிகாலை4:00மணியளவில் கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.

கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.       கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாணைக்கு  மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

ü தற்கொலைத்தாக்குதல் மார்க்கத்தில் அனுமதி இல்லை.

 ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் தனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஜுன்துப் (ரலி) நூல் : புகாரி 1364

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப்பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், அதில் பலியாவோர் பொதுமக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமான நிலையங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும், குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பியபோது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் தமது குடும்பமோ, சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.

ü வம்புச் சண்டைக்கு வருவோருடன்தான் போர்

இஸ்லாம் போரை அரசாங்கத்திற்கு மட்டும்தான் கடமையாக்கியுள்ளது. அரசாங்கத்திற்குப் போர் கடமையாக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் இஷ்டப்படி அனைவரையும் தாக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் புரிய மட்டுமே வலியுறுத்துகிறது.

وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன்:2:190.)

இவ்வாறு போர் புரிவது யதார்த்தமான நியதியே. வம்புச் சண்டைக்கு வருவோருடன் சண்டையிடாமல் கைகட்டி வேடிக்கை பாருங்கள் எந்த சித்தாந்தமும் சொல்லாது.

ü போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லக் கூடாது

வம்புச் சண்டைக்கு வருவோருடன்தான் போர் புரிய வேண்டும். அத்தகைய போரிலும் எதிர் தரப்பில் பெண்கள், குழந்தைகள் போன்ற அப்பாவிகள் இருந்தால் அவர்களைக் கொல்லக் கூடாது என்றும் அவர்களைக் கொல்வது கடும் கண்டனத்திற்குரிய குற்றம் என்றும் இஸ்லாம் சொல்கிறது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட ஒரு புனிதப் போரில், பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.நூல்: புகாரி-3014

ü எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது

போரிடும் போது எதிரிகளின் மீதுள்ள கோப அலையினால் அவர்களின் உடல்களை கோரப்படுத்தக் கூடாது; சிதைத்துவிடக் கூடாது.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)நூல்: புகாரி-2474, 5516

ü போரில் அத்துமீறக்கூடாது

போர் புரியும் போது எதிரிகளை விட அரசாங்கத்திற்கு படைபலம் அதிகம் இருந்தாலும் எல்லைக் மீறக் கூடாது, அக்கிரமம் புரியக்கூடாது.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன்:2:190.)

இதுபோன்று இன்னும் பல பாதிப்பில்லா சட்டங்களையும் வழங்கி அப்பாவிகளைக் காத்து, நாட்டை அழிக்க வருபவர்களுக்கு எதிராக மட்டுமே போர் என்ற நெறிகளை இஸ்லாம் சொல்கிறது. இந்த நெறிகள், சட்டங்கள் யாவும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் போர் நெறிகளை விட பல மடங்கு உயர்ந்தவையாகும்இஸ்லாம் சொல்லும் போர் நெறிகள் மட்டுமே  மனித உரிமை மீறல் இல்லாத நீதமான போர் நெறியாகும்.

இவ்வாறு போரில் கூட மனித உரிமை மீறலைத் தடுக்கும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் யாரோ ஒரு சிலர் செய்வதற்கு இந்த மார்க்கமோ அல்லது அதன் வழிகாட்டியான திருக்குர்ஆனோ ஒருபோதும் பொறுப்பாக முடியாது.

தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம்

மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப் பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.

ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் காரணமாகவே கொள்கை வுறுபாடுகள் பல இருந்தாலும் அனைத்து கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இத்தகைய செயல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றனர். அது மிகச் சரியான கண்டனமே என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

ஆனால் இது மாதிரி சமயங்களில் ஒரு சில அறிவிலிகளின் அல்லது எவ்வித கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களின் செயல்பாடுகளினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது ஒரு சாராருக்கு மட்டும் அது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் யார் எனில் உலகின் பல்வேறு திசைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் தான். உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு குண்டு வெடித்து விட்டால் உடனே இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்ததில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி! இதை அவர்கள் தங்கள் கைவசம் உள்ள சக்தி வாய்ந்த ஊடகங்களின் வாயிலாக பிரபலப்படுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பெருமைப்படுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிபோனதைப் பற்றியும், அதற்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை.அதே சமயத்தில்,

இலங்கையில் குண்டு வெடிப்பின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு குண்டு வைத்தவர்களின் மதத்தைக் கூறி அவர்களை இந்து தீவிரவாதிகள் என்றோ,

ஆந்திரா, அஸ்ஸாம், நேபால் போன்ற இடங்களில் தீவிரவாத செயல்களின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு கொன்றவர்களை அவர்களின் மதத்தை முன்னுறுத்தி அவர்களையும் இந்து தீவிரவாதிகள் என்றோ,அல்லது

அயர்லாந்து, ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறைகளினால் மக்கள் கொல்லப்படும் போது அவர்கள் சார்ந்த மதத்தைக் குறித்து அவர்களைக் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.

பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் அத்தகைய தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றனர். இது தான் முறையானது என்பதே நமது கருத்துமாகும். ஆனால் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், ஒரு சில அறிவிலிகளின் செயலுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தையே தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்தி அதன் மூலம் சத்திய ஜோதியாகிய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அவர்களின் கொள்கையைச் சார்ந்தவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த திட்டம் என்றுமே பலிக்காது. எனெனில் திட்டமிடுபவர்களுக்கெல்லாம் மேலான திட்டமிடுபவனாகிய அல்லாஹ் தன்னுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்:

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)

பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செய்ல்களாகும். இந்த மாதிரியான செயல்களைச் செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது. இவ்வித எச்சரிக்கைகளை மீறி செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. ஆனால் உண்மையான விசயம் என்னவென்றால் இஸ்லாத்தின் எதிரிகளே இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்களின் மீது போடுகின்றனர். இதற்கு காரணம் சகோதர பாசத்துடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் மிக கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களே இவ்வாறு செய்கின்றனர்.

ü தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்தனது ட்விட்டர் பக்கத்தில் 01/11/22 கேள்வி

ஜமீஷா முபீன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டாயிரித்திரிட்டால் டெட்ராநைட்ரேட் & நைட்ரோ கிளிசரின் மிகவும் ஆபத்தான சந்தையில் கிடைக்காத வெடிபொருள்.அதன் தயாரிப்பு& விநியோகம்  ஒன்றிய அரசின்கட்டுப்பாட்டில்மட்டுமேநடக்கிறது.குற்றவாளிக்குஎப்படி கிடைத்தது?பாஜக பதில் சொல்லட்டும்!

 

 

 

இஸ்லாம் என்ற சொல்லே அமைதி (Peace) என்ற பொருளைக் கொண்டது. எனவே அமைதி மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை.

கொலை செய்யப்பட்டவரின் வாரிசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது!

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்-குர்ஆன் 17:33)

அநியாயமாக கொலை செய்பவனுக்கு கடுமையான தண்டணை இருக்கிறது!

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (அல்-குர்ஆன் 25:68)

இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது:

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)

குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்:

وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல்-குர்ஆன் 4:93)

நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது கொலையைப் பற்றித்தான்!

(மறுமையில்) மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது (கொலை செய்து ஓட்டிய) இரத்தம் பற்றித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது.

ஆனால் இவைகளை நன்றாக அறிந்திருந்தும் மத துவேசிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் செயலோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது அல்லது தாங்களே தங்களின் கூலிகளின் மூலம் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அவற்றை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் செய்ததாக விளம்பரப்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் கண்டத்திற்குரியது மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் இருக்கிறது. நடுநிலையான பெரும்பாண்மை மக்கள் இத்தகைய மத துவேசிகளின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) இன்னும், சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 17:81)

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001