கணவன் மனைவி கடமைகள்
கணவனின் கடமைகள்
முன்னுரை
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ..
ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்…
(அல்குர்ஆன் : 4:34)
தாமரைப் பூ போன்ற இல்லற வாழ்க்கையில் தண்ணீராக மனைவியும், இலையாக கணவனும் இருப்பதுண்டு. வெளியே இருந்து பார்க்க தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டுவதில்லையோ, அதுபோல் ஒட்டியும் ஒட்டாமலும் குடும்பத்தை நடத்திச் செல்லும் பெருமை கணவன், மனைவிக்கு உண்டு.
கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும்.
அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்-மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.
கால மாற்றத்தால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது.
இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர்.
கண் போன்ற கணவன்
அன்பிற்க்குரியவர்களே..”கணவன்’ என்பவன், மணந்தவளுக்குக் கண்ணைப் போன்றவன் என்ற பொருளில் “கணவன்’ என்ற சொல் வழங்கிவருகிறது. “கொழுனன்’ என்பார் வள்ளுவர். மனைவிக்குப் பற்றுக்கோடானவன் என்பது இதன் பொருள். உடம்பில் உள்ள உறுப்புகளுள் கண்ணே முதன்மையானது. அதுபோலத்தான் பெண்ணாய்ப் பிறந்தவளுக்குக் கணவனே கண் போன்றவன் – முதன்மையானவன் என்பதால் “கணவன்’ என்று வழங்கினர்.
நீரில்லா நதி, மழையில்லா வயல்வெளி, சிறகில்லாப் பறவை, தந்தியில்லா வீணை, பூத்துக் காய்க்காத மரம், மணம் வீசா மலர், தந்தமில்லா யானை – என இவையெல்லாம் எப்படி இருந்தும் பயனற்றதோ, அதைப் போல கணவன் இல்லா பெண்ணும் வாழ்ந்தாலும் பயனற்றவளே! கணவனோடு சேர்ந்து நடத்தும் இல்லற தர்மமே பெண்ணிற்கு பெருமையாகும்.
அதனால்தான் ஔவையார், “இல்லறமல்லது நல்லறம் அன்று’ என்றார்.
இல்லறத்தில் நல்லறம் போற்றி வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் “கணவனே கண்கண்ட தெய்வமாக’ அக்காலத்தில் இருந்துள்ளார்கள்.
நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்: திர்மிதீ 1079
பழமொழி உணர்த்தும் விளக்கம்
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. கணவன் கல்லைப் போன்றோ புல்லைப் போன்றோ இருந்தாலும் பரவாயில்லை என்ற பொருளில் தற்போது வழங்கப்படுகிறது. கல்லும், புல்லும் ஒரு பெண்ணுக்கு கணவன் ஆக முடியுமா? நிச்சயமாக முடியாது..
ஆனால் இதை கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன் என பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.
கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி ஒருவனுக்கு இருக்கிறது. புல்லன், அதாவது கல்வி கற்றவன் (புல் என்றால் கல்வி எனவும் பொருளுண்டு) என்றாலும் அவனுக்கு புருசன் ஆகின்ற தகுதி இருக்கிறது என்ற பொருளில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கல்லான் என்பதன் எதிர்சொல்லாகவே புல்லன் இருக்கவேண்டும். அதுவே பொருத்தமானதாக உள்ளது. படிக்காதவன் என்றாலும் படித்தவன் என்றாலும் வாழ்க்கைக்கு அவன் துணைவன் என இதற்குப் பொருள் கொள்ளலாம்.
எனவே சரியான பழமொழி இதுதான்
“கல்லான் ஆனாலும் கணவன்; புல்லன் ஆனாலும் புருஷன்” என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
பொறுப்பும் கேள்வி கணக்கும்
அன்பார்ந்த கணவன்மார்களே… நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)
தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1442)
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மீதான பாசம்
25 ஆண்டு காலம் அன்னை கதீஜா ரலி அவர்களுடன் இனிமையான இல்லற வாழ்க்கையை நபியவர்கள் நடத்தினார்கள். கதீஜா ரலி அவர்கள் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரின் நினைவாகவே நபியவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், தனது பழைய மனைவியைப் பற்றி எப்பொழுதும் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்கள், “எப்போதோ இறந்து விட்ட, பல் விழுந்த அந்தக் கிழவியை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களே, இறைவன் உங்களுக்கு அவரை விட சிறந்த மனைவியை தரவில்லையா?” என்று கேட்டார்கள். இதனைக் கேட்ட நபிகள் நாயகத்தின் முகம் கவலையில் ஆழ்ந்தது.
நான் போதித்த இஸ்லாமிய மார்க்கத்தை மக்கள் ஏற்க மறுத்தபோது அவர்கள் முதன் முதலில் ஏற்றுக் கொண்டார்கள். மற்றவர்கள் என்னைப் பொய்யன் என்று சொன்னபோது, அவர்கள் என்னை நம்பினார்கள். மக்கள் எனக்கு ஆதரவு தர மறுத்தபோது, அவர்கள் தனது செல்வத்தினால் ஆதரவு கரம் நீட்டினார்கள். அல்லாஹ் அவர்கள் மூலமாகவே எனக்குக் குழந்தைகளையும் தந்தான். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களை நினைவு கூறுவதை தவிர வேறெதனையும் நான் கூற மாட்டேன்” என்றார்கள். நபியவர்கள் முன்னிலையில் கதீஜா ரலி அவர்களின் பெயர் கூறப்பட்டால் உடனே மனைவியைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அதில் சோர்வடைய மாட்டார்கள். அவர்களுக்காக துஆ பிரார்த்தனையும் செய்வார்கள்.
கதிஜா (ரலி) இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் நபி அவர்களை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றார்கள்.
நபி அவர்களோ ‘கதிஜாவின் கப்ருக்கு (கதிஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின்) அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று அறிவிக்கின்றார்கள். பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது மனைவி கதிஜா அவர்களின் மீது நபியவர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இச்சம்பவம்.
அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மீதான பாசம்
அமர் இப்னு (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள் “இறைத்தூதர் அவர்களே! மனிதர்களிடையே நீங்கள் அதிகம் நேசிப்பவர் யார்?” “ஆயிஷா” என உடனே பதிலுரைக்கிறார்கள். எவ்வளவு வியப்பான பதில் அது. வேறு யாரிடமாவது இதுபோன்ற கேள்வியை முன் வைத்தால் அவர்கள் எனது மனைவியைத்தான் நான் அதிகம் நேசிக்கிறேன் என கூறுவார்களா? சந்தேகம்தான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மனிதர்களிலேயே அதிகம் நேசிப்பவராக தனது மனைவி ஆயிஷாவை குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா மீது எந்த அளவு பிரியம் வைத்திருந்தார்கள் என்பதனை இதன்மூலம் அறிய முடிகிறது.
ஆறுதல் கிடைக்கும்
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்காக உங்கள் மனைவியை உங்களிலிருந்தே படைத்தான்…” (அல்-குர்ஆன் 30 : 21)
கணவன் மனைவிக்குள் ஆறுதல் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் இந்த வசனம் அனுமதிக்கிறது.
சொற்கள், செயல்கள், விளையாட்டு இவை கணவன் மனைவிக்குள் ஆறுதலையும் நெருக்கத்தையும் கொடுக்கும்.
இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ், நூல்: முஸ்லிம் 2911)
அபூபக்கர் (ரலி) அவர்களின் பாசம்
கண்ணியமானவன், சங்கையானவன் மனைவிக்குக் கண்ணியம், சங்கை செய்வான். சாபத்திற்குரியவன் மனைவியை கேவலப்படுத்துவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். மனைவியை கேவலப்படுத்துபவன் சாபத்திற்கு உரியவன் என்பதே இதன் பொருள்.
தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தன் மரணப்படுக்கையில் அபுபக்கர் (ரலி) கூறியது நாம் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது.
அவர்கள் கூறினார்கள் ‘என் மரணத்திற்கு பிறகு என் ஜனாஸாவை (உடலை) என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்ட வேண்டும்’.
‘ஏன்?’ என்று கேட்டார்கள் தோழர்கள்.
‘என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்’ என்று பதிலளித்தார்கள்.
தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.
மனைவியிடம் சிறந்தவனாக வேண்டும்
ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதி விலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கணவன்மார்கள் கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.
ஹதீஸில் கூறப்பட்டுள்ளது
أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا
“இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் உள்ளவர்கள் தான்! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி எண்: 1082
நமக்குத் தூரமானவர்களிடம் இருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும் குறைகளையும் தெளிவாக அறிந்தவர்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழே உண்மையானது. ஊர் மக்கள் மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும்.
பொருளாதாரம் வழங்குதல்
இஸ்லாமிய நடைமுறையிலும் சரி உலக நடைமுறையிலும் சரி மனைவி என்று உனக்கு ஒரு வாழ்க்கை துனைவி கிடைத்து விட்டால் அவர்களுக்கு தேவையான பொருளாதாரத்தை செலவை கணவன் பொறுப்பேற்று செய்ய வேண்டும்.
قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ ؟ قَالَ : أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ ، أَوِ اكْتَسَبْتَ ، وَلاَ تَضْرِبِ الْوَجْهَ ، وَلاَ تُقَبِّحْ ، وَلاَ تَهْجُرْ إِلاَّ فِي الْبَيْتِ.
قَالَ أَبُو دَاوُدَ : وَلاَ تُقَبِّحْ أَنْ تَقُولَ : قَبَّحَكِ اللَّه
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, “நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல் : அபூதாவூத் 1830
திருமணத்திற்குப் பின் அவளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் கொடுக்க வேண்டும். கணவன் மனைவிக்குத் தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுப்பது அவனுடைய கடமை, என்பதற்கு எவ்வித ஆதாரமும் சொல்லத் தேவையில்லை. காலம் காலமாக இதுவே முழு உலகின் நடைமுறை. அதே சமயம் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் பல இடங்களில் மனைவிக்கு வாழ்வாதாரம் வழங்குவது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய இறைத்தூதரும் கூறியுள்ளனர்.
அல்குர்ஆன்:
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ..
ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்…
(அல்குர்ஆன் : 4:34)
அல்லாஹ் இந்த வசனத்தில் பெண்களை நல்ல விதத்தில் நிர்வகிப்பவர்கள் ஆண்கள், என்று சொல்லிவிட்டு அதற்குரிய காரணமாக அவர்கள் மனைவிமார்களுக்கு செலவு செய்கின்றனர், என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளான். இதன் மூலம் கணவனுடைய தகுதியை இந்த வசனம் உறுதி செய்கிறது.
وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوا عَلَيْهِنَّ حَتّٰى يَضَعْنَ حَمْلَهُنَّ..
அவர்கள் கர்ப்பிணிகளாய் இருந்தால், குழந்தை பெற்றெடுக்கும் வரையில் அவர்களுக்கு செலவுக்குக் கொடுங்கள்.
(அல்குர்ஆன் : 65:6)
لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا
வசதியுள்ளவர் தம் வசதிக்கேற்ப ஜீவனாம்சம் அளிக்கட்டும். எவருக்கு வாழ்வாதாரம் குறைவாக அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர் அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் எவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கின்றானோ அதற்கு மேலாக அவர் மீது அவன் பொறுப்பு சுமத்துவதில்லை. வசதிக் குறைவுக்குப் பிறகு, அதிக வசதிவாய்ப்புகளையும் அல்லாஹ் வழங்கக்கூடும்.
(அல்குர்ஆன் : 65:7)
وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ
(தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை நிறைவு செய்ய வேண்டும் என்று தந்தையர்களில் யாராவது விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். (இந்நிலையில்) அத்தாய் மார்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும், உடை கொடுப்பதும் குழந்தைகளின் தந்தையர்க்குரிய பொறுப்பாகும்
(அல்குர்ஆன் : 2:233)
நபிமொழிகளில் சொல்லப்படுகிறது
மனைவிக்கு செலவு செய்வது அவசியம், என்ற கருத்து நபிமொழிகளில் தெள்ளத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜத்துல் விதாவின் இறுதி உரையில் பின்வருமாறு கூறினார்கள்: மனைவிமார்களுக்கு நல்ல விதத்தில் உணவளிப்பதும் உடை கொடுப்பதும் (ஆண்களாகிய) உங்களுடைய கடமையாகும். (அபூதாவூத்- 1907)
முஆவியதுல் குஷைரீ (ரலி) அவர்கள் நபியவர்களிடம் மனைவியின் உரிமைகள் பற்றி கேட்டார்கள் அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சாப்பிடும் போது அவளுக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும். நீங்கள் உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். (அபூதாவூத் – 2144)
மனைவிக்கு உணவு உடை மட்டுமல்ல, அவளுக்குத் தேவையான சகல வசதிகளையும் கணவன் செய்து கொடுக்க வேண்டும்.
ஏனெனில், அலலாஹ் மனைவிமார்களிடத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படியாக அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான். … மனைவிமார்களிடத்தில் நல்ல முறையில் அழகிய விதத்தில் நடந்து கொள்ளுங்கள்! (4:19)
மேலும் ஆண்களைப்பற்றி குர்ஆனில் மிகச்சிறந்த முறையில் நன்கு நிர்வகிப்பவர்கள் என்று கூறுகிறான். எனவே, அவளுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை மட்டும் கொடுத்து விட்டு மற்ற தேவைகளை புறந்தள்ளிவிடுவது அவனுடைய தகுதிக்கு அழகல்ல.
இன்றைக்கு வீட்டு நிர்வாகம் பெண்ணிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதற்கான அவசியத் தேவைகளை ஆணிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மனைவிக்குத் தேவையான செலவினங்களை கணவனே கொடுத்தாக வேண்டும். என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவைகள் நிறைவேற்றுவது
அதுமட்டுமல்லாமல் அந்தந்த ஊர்களின் நடைமுறைப் படி அவளுக்குத் தேவையான உணவை வழங்க வேண்டும். இரண்டாவது அவளுக்குத் தேவையான உடை. சட்டப்படி வருடத்திற்கு இரண்டு செட் துணி கொடுப்பது கட்டாயம். (அல்ஃபதாவல் ஹிந்திய்யா, துஹ்ஃபதுல் பாரி)
எனினும், வருடத்திற்கிடையில் ஆடை கிழிந்து விட்டால் புதிய ஆடை வாங்கிக் கொடுப்பதே கணவனுடைய தகுதிக்கு ஏற்றது.
கணவருடைய சக்திக்கு மேல் எதையும் வற்புறுத்தக்கூடாது. மனைவியுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற பேரார்வத்தில் அவர் ஹராமான வழியில் சம்பாதிப்பதற்கு தயாராகிவிடலாம். அந்தக்குற்றம் மனைவியையும் சாரும் என்ற எச்சரிக்கையும் சேர்த்து செல்லப்படுகிறது.
மனைவிக்கு தங்குமிடம் கொடுப்பது
அல்லாஹ் தஆலா குர்ஆனில் ஆதம் (அலை) அவர்களைப் பார்த்துச் சொல்கிறான்.
فَقُلْنَا يٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَـنَّةِ فَتَشْقٰى
(ஆதலால், நாம் ஆதமை நோக்கி) “ஆதமே! நிச்சயமாக இவன் உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப் படுத்திவிடாது நீங்கள் (எச்சரிக்கையாக) இருங்கள். இன்றேல் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள்” என்று கூறினோம்.
(அல்குர்ஆன் : 20:117)
اِنَّ لَـكَ اَلَّا تَجُوْعَ فِيْهَا وَلَا تَعْرٰىۙ
“நிச்சயமாக நீங்கள் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 20:118)
இந்த வசனம் நபி ஆதம் (அலை) அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
எனவே, உணவு, உடை, இருப்பிடம் போன்ற வசதிகளை கணவனே மனைவிக்கு செய்து கொடுக்க வேண்டும், என்று விளங்கமுடிகிறது. அதற்கான சிரமத்தை கணவனே சகிக்க வேண்டும். தலாக் விடப்பட்ட பெண்களைக் கூட கணவன் தன்னுடைய வீட்டிலேயே இத்தா இருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதே குர்ஆனுடைய கட்டளை.
மனைவி தன்னுடைய வீட்டை கணவனுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு தானும் கணவனுடன் சேர்ந்து குடியிருந்தால் கணவனிடம் வாடகை வாங்கிக் கொள்ளலாம். (ரத்துல் முஹ்தார்)
உணவு ஊட்டுவது , ஒத்தாசை செய்வது
மனைவியை புன்னகையுடன் காணவேண்டும்; அவளுக்கு அன்பாக ஊட்டிவிட வேண்டும். இதுவும் அவளுக்குச் செய்யவேண்டிய உரிமைதான் என்கிறது பின்வரும் நபிமொழி:
إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللهِ إِلاَّ أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ
‘நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி, அதற்கும் நற்பலன் உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத்பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி 56)
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிக்கு வீட்டு வேலைகளில் அதிகமாக உதவியிருக்கிறார்கள். இது குறித்த நபிமொழி வருமாறு:-
‘நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன வேலை செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். ‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பைச் செவிமடுத்தால் தொழுகைக்காகப் புறப்பட்டு விடுவார்கள்’ என்று ஆயிஷா (ரலி) பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்), நூல்: புகாரி)
பொழுது போக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்தல்
وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி (950)
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது மனைவியரை அழைத்துச் செல்வார்கள். இதுவும் ஒரு கணவன் தமது மனைவிக்குச் செலுத்த வேண்டிய நியாயமான உரிமையாகும்
மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடனும் கலகலப்பாக பேசுபவர்களாக இருங்கள். அது சதகாவகும்.
فَإِذَا قَضَى صَلاَتَهُ نَظَرَ فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ.
தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள், நூல் : புகாரி 1119
பொது இடங்களில் அடிப்பது திட்டுவது
يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْم
“நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204
மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.
அடுத்ததாக “பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல.
கோபத்தில் நிதானமாக இருப்பது
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.
உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5225.
விருந்தினர் முன்னிலையில் தனது மனைவி இப்படி நடந்து கொண்டால் நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்று இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
மற்றொரு ஹதீஸில்
காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார்
(ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) ‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூ பக்ருக்கும் அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)’ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5666, 7217.
வாடா போடா அழைப்பது
இன்றைய காலகட்டத்தில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு மனைவி தன் கணவனை பெயர் சொல்லியும் அழைக்கலாம். ”… வாடா …. போடா….” என்றும் செல்லமாகவும் கூறலாம். இஸ்லாம் இதையும் தடுக்கவில்லை.
”மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமைப்போன்று மனைவிக்கும் உரிமை இருக்கிறது” என்று கூறுகிறது இஸ்லாம். (அல் குர்ஆன்: 2: 228)
பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இதில் அடங்கும்.
நபியவர்கள் சொல்வார்கள்..
”ஆயிஷாவே! நீ என்மீது சந்தோஷமாக இருக்கிறாயா..? அல்லது கோபமாக இருக்கிறாயா..? என்பதை நான் சாதாரணமாக அறிந்து கொள்வேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். எப்படி? என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்க, ”முஹம்மத் உடைய இறைவன்மீது சத்தியமாக” என்று நீ கூறினால், சந்தோஷமான இதயத்துடன் நீ இருக்கிறாய் என்பதை உணர்வேன்.”
”இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக” என்று நீ கூறினால் உன் உள்ளம் கோபத்தில் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி, முஸ்லிம்)
தம் கணவரை ”முஹம்மத்” என்ற பெயரால் அழைப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சந்தோஷத்தோடு அனுமதிக்கிறார்கள்.
எனவே கணவனின் பெயரை மனைவி தாராளமாகச் சொல்லலாம்.
இன்று கூட, அரபு நாடு செல்பவர்கள் சாதாரணமாக இந்நிலையை காண்பார்கள்.
கணவன் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்பதெல்லாம் நமது நாட்டு-மாற்று சமூகத்தவரின் பழக்கமாகும். அந்த பழக்கத்தின் தாக்கத்தினால் நம் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பாலோர் கணவன் பெயரை மனைவி சொல்வது மரியாதைக் குறைவு என்று நினைக்கின்றனர். இது தவறு.
விட்டுக்கொடுப்பது
ஒருநாள் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவிடம் “என் இறைவனை சிறிது நேரம் வணங்குவதற்கு அனுமதி தருவீர்களா?” என கேட்கிறபோது “இறைத்தூதர் அவர்களே! உங்கள் நெருக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் உங்கள் மனம் விரும்புவதை நானும் விரும்புவதே எனக்கு திருப்தி” என்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.
கணவன்-மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பாடத்தை படம் பிடித்து காட்டுகிறது மேற்காணும் சம்பவம். மனைவிடம் கேட்காமலே இறைவனை வணங்கியிருக்கலாம். ஆனால் மனைவிடம் அனுமதி கேட்கிறார்கள். ஆயிஷாவும் அனுமதி தராமல்கூட இருந்திருக்கலாம். அனுமதியும் வழங்கி உங்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புவதையும், உங்கள் விருப்பமே என் விருப்பம் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார் ஆயிஷா.
கணவன்-மனைவி இருவருமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிமையானதாக அமையும். கணவனுக்கு மனைவி மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல மனைவிற்கும் கணவன் மீது உரிமை உள்ளது. “கணவனின் திருப்தியை பெற்ற நிலையில் எந்த பெண் மரணமடைகிறாரோ அவள் சுவனம் நுழைந்துவிட்டால்” என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மற்றொரு இடத்தில் “மனைவியிடத்தில் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.
முடிவுரை
மனைவியின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள கணவர் பழகிக்கொள்ள வேண்டும். வருத்தமாகவோ, சோகமாகவோ இருக்கும்போது மனைவியின் கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதலாக நான்கு வார்த்தை பேச வேண்டும். அது கணவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். காலை வேளையில் வீட்டு வேலைகளை விரைந்து முடிப்பதற்கு மனைவி எதிர்கொள்ளும் சிரமத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அது சிறிய வேலையாகவே இருந்தாலும் இருவருக்குமிடையே நேசத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும்.
கணவன்-மனைவி இருவரும் தங்கள் வாழ்வு இவர்தான் என்பதை முதலில் மனதில் நினைக்க வேண்டும்.
அலி (ரலி) அவர்கள் தனது மனைவி பாத்திமா (ரலி) குறித்து இவ்வாறு அன்பொழுக கூறுகிறார்கள் “எனது மணப்பெண்ணும், மன அமைதியும் நபி முஹம்மது ஸல் அவர்களின் மகள் தான்.. அவர்களே என் வாழ்வு. அவர்களே என் மனைவி. அவர்கள் என் சதையுடனும், இரத்தத்துடனும் கலந்துவிட்ட மனைவி”.
இதேபோல் ஒவ்வொரு கணவனும்-மனைவியும் நினைக்கும் பட்சத்தில் கணவன்-மனைவி உறவு விரிசலடையாமல், கணவன்-மனைவி பிணைப்பு மேலும் விரிவடையும் என்பது நிதர்சனமான உண்மை.
கணவன்மார்களுக்கு 100 அறிவுரைகள்
*ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே*
. *ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.*
*கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது.*
*அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசனைகளை இங்கே தருகிறோம்*.
*அல்லாஹ் உங்களின் வாழ்க்கையை சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக.*
01) மனைவியை சந்திக்கும்போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அதுசதகாவகும்.
02) வீட்டினுள் நுழையும்போது சலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். சலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.
03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.
04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.
05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.
06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.
08) நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்னைகளை மறக்கடியுங்கள்.
10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.
11) பிள்ளைகளைப் பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.
12) இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.
14) குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.
15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)
16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.
17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..
18) திருமணம் முடித்தபின் தன் மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தன் கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.
19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.
20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.
21) அழகாக காட்சியளியுங்கள். சுத்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.
23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.
24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன. நபியவர்கள் நவின்றார்கள் ( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்).
25) தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடந்து கொள்ளாதீர். நபியவர்கள் கூறினார்கள் “நான் என் மனைவியருக்கு மிகச் சிறந்தவன்”.
26) அவளுக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவள் முன்னிலையில் செய்ய வேண்டாம்.
27) அவளுக்கு அறிவுரை வழங்கும்போது தனிமையில் அறிவுரை வழங்குங்ககள். பிறர் முன்னிலையில் அவளது குறைகளை எடுத்துக்கூறாதீர்கள். அனைவரிடமும் குறைகள் உண்டு. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
28) வீண் கோபம் வேண்டாம். கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.
29) அதிர்ச்சியூட்டக்கூடிய சந்தோஷங்களை கொடுங்கள். அவளுக்கு மிக விருப்பமான ஒன்றை செய்யலாம்.
30) உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் அவளிடம் ஆலோசனை கேட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
31) எப்போதும் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெளியில், கடைத்தெருவில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் அதே போன்று அவளுக்கும் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.
32) அவ்வப்போது அவளுக்கு உணவுகளை ஊட்டியும் விடுங்கள்.
33) உங்களுக்கு இருக்கும் அந்தஸ்தில் அவளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குதிரையில் அவளையும் உட்கார வைக்கலாம். அது அவளது உள்ளத்தை குளிரவைக்கும்.
34) உங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவு வேண்டாம். அதன் விளைவு கொடியது.
35) எல்லா நல்ல விஷயங்களிலும் அவளைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டைச் செயலிலும் காட்டுங்கள்.
36) அவளது குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்திருங்கள். அவர்களை மதித்துப் பழகுங்கள்.
37) அவளது குடும்பத்தார் முன்னிலையில் அவளைப் பாராட்டிப் பேசுங்கள்.
38) அவள் தனக்கு கிடைத்த அருட்கொடை என்பதாக அவளுக்கு உறுதிப்படுத்துங்கள்.
39) இருவரும் அவ்வப்போது பரிசுகளை, அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம். பரிசுகள் அன்பை வளர்க்கும் என நபியவர்கள் கூறினார்கள்.
40) முக்கியமாக இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். புரிந்துணர்வு தவறும் போதே பிரச்சினை உருவாகிறது.
41) அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள்.
42) சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை.
43) வெளியில் உமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், நஷ்டங்கள் காரணமாக அவற்றின் விளைவுகளை மனைவியிடம் காட்ட வேண்டாம்.
44) வீட்டை விட்டு வெளியே போகும்போது எங்கு போகிறோம் என்றும் திரும்பி வீட்டுக்கு வரும்போது என்று வருகிறோம் என்றும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
45) வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து செய்யப்போவதாக அவளை மிரட்ட வேண்டாம்.
46) இருவரும் ஒருவருக்கொருவர் இறைவனுக்கு இணங்கிவாழும் (இபாதத்) விஷயத்தில் உதவி ஒத்தாசையாய் இருங்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக).
47) முடிந்த வரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
48) அவளது விருப்பத்திற்கு இணங்க விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கு தங்கவும் அனுமதி வழங்குங்கள்.
49) வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்கள், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதற்காக நம் மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்த்துவிடவும் கூடாது. அதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுவீர்கள். நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக எல்லா வாசல்களையும் திறந்துவிடுவது முட்டாள்தனம். அதாவது அவள் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதற்கான வழிமுறைகளை நாமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.
50) நம் உயிர் தோழனாக இருந்தாலும் மிகவும் அத்தியாவசிய தேவைக்கன்றி நம் மீது அன்பாக இருக்கும் மனைவியுடன் அறிமுகப்படுத்தி வைப்பது கூடாது. அதனால் ஷைத்தான் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
51) அடிக்கடி (தலைவலி தராத) நல்ல வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள். நல்ல வாசனையை பெண் விரும்புவாள்
52) காலையில், மாலையில், இரவு வேளைகளில் பற்களை துலக்கவும். குறைந்த பட்சம் இருமுறையாவது துலக்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மனைவியன் பக்கத்தில் சென்று பேசும் போது வாய் துர்நாற்றம் வீசாது.
53) தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சகல விதத்திலும் சுத்தமாக இருங்கள். முக்கியமாக நாற்பது நாட்களுக்கு ஒருமுறையேனும் மர்ம உறுப்பு, அக்குள் ஆகியவற்றிலுள்ள முடிகளை அகற்றி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
54) நீங்கள் அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். ((மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள் : நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளையும் அணியச்செய்வதும், அவளது முகத்தில் அறையாமல் இருப்பதும், அவளை இழிவு படுத்தாமல் இருப்பதும், வீட்டில் தவிர அவளை வெளியிடங்களில் எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்காமல் இருப்பதும் கணவனின் கடமை என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.)
55) அறியாமைக்கால நடைமுறை போன்று அவளை மாதவிடாய் காலங்களில் அன்றாட கூட்டுப்பணிகளில் ஒதுக்கி விட வேண்டாம்.
56) மனைவி ஆசையோடு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு தன்னை நெருங்கும் போது நீங்கள் எப்படிப்பட்ட களைப்பில் அசதியில் இருப்பினும், உங்களின் பிரச்சினையை அறியாத அந்த அழகிய மனைவியின் ஆசைக்கு கொஞ்ச நேரம் ஈடு கொடுங்கள்.
57) தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி கண்ட பிறகு தான் ஓய்வெடுக்க வேண்டும். அவளின் ஆசையை நிறைவு செய்யும் போது ஏற்படும் சுகம் கணவனுக்கு அதிகமாக இருக்கும். எனவே, முதலில் அவளின் தேவையை பூர்தி செய்ய வேண்டும்
58) “பிஸ்மில்லாஹ்” சொல்லி எல்லா விஷயங்களையும் ஆரம்பியுங்கள். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதுகூட ‘பிஸ்மில்லாஹ்”வுடன் சேர்த்து அதற்கான துஆவையும் ஓதிக்கொள்ளலாம். அதனால் பிறக்கும் குழந்தை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்படுகிறது.
59) உங்கள் மனைவியின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மற்றும் அவளுடைய குடும்பத்தாரைப்பற்றி குறைவாகவும் ஏளனமாகவும் பேசாதீர்கள். அவ்வாறு தவறு ஏதாவதை சுட்டிக்காட்ட வேண்டுமாயின் அதனை பக்குவமாக எடுத்து அன்பாக விளக்கிக்கொடுங்கள்.
60) உங்கள் குடும்பத்தாரிடம் அவளைப் பற்றி பெருமையாக பேசுங்கள்.அதனால் உங்களது குடும்பத்தினர் அவளை மதிப்பார்கள். அவளைப் பற்றி அவர்களிடம் ஏளனமாக பேசும்போது அவர்கள் அவளை மதிக்கத் தவறுவார்கள்.
61) வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். மாதம் ஒரு முறை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். இஸ்லாம் அனுமதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.
62) வாரம் ஒரு முறை தனியாக வெளியில் சென்று அவளோடு மனம் விட்டுப் பேசுங்கள்.
63) மனைவிக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் ஏனைய பொருட்களை அவளுடன்
சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.
64) வெளியில் சென்று இரவில் நேரம் தாமதம் ஆகாமல் வீட்டுக்கு வர முயற்சி செய்யுங்கள். பொதுவாக மனைவி தன் கணவன் வீட்டுக்கு வரும்வரை சாப்பிடாமல் காத்துக்கொண்டிருப்பாள். இதுவே கணவனுக்கு மாத்திரம் கிடைக்கும் ஒரு சந்தோஷமாகும்.
65) தனக்கு பிடித்ததுதான் அவளுக்கும் பிடிக்கும் என்று எண்ணாதீர்கள். அவளுக்கும் ஆசைகள் பல இருக்கும். அதனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இருவருக்கும் பிடித்திருப்பது ஒன்றென்றால் அது நீஙகள் செய்த பாக்கியம்.
66) திருமணத்தின் பின்னுள்ள வாழ்க்கையில் கருத்து முரண்பாடு ஏற்படுவது வழக்கம். அதில் நீங்கள்தான் வெல்ல வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இருவருமே வாழ்க்கையில் தோற்று விடுவீர்கள். அதனால் அவளது கருத்து பிழை என்ற போதிலும் மௌனமாக இருந்து பின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அந்த விஷயத்தைப்பற்றி மறைமுகமாக உங்களின் கருத்தை தெரிவியுங்கள். ஏனென்றால் பெண்கள் பொதுவாக அனைத்திலும் தான் செய்வதுதான் சரி என்று எண்ணும் இயல்பு. உடையவர்கள். அதனை நேரடியாக சொன்னால் சில சமயங்களில் கோபம் அதிகமாகும். அதன் விளைவு விவாகரத்துவரைகூட செல்லலாம்.
67) வெளியில் நீங்கள் எவ்வாறான பிரச்சினைகளை சந்தித்தாலும் வீடு திரும்பும் போது அழகிய புன்னகையோடு சலாம் சொல்லி விட்டிற்குள் நுழையுங்கள். கைகளை பற்றிப்பிடியுங்கள்.
68) திருமணம் முடித்த பின் மனைவியின் விஷயத்தில் மட்டுமல்லாது அவளது குடும்ப விஷயங்களிலும் பொறுப்பாக செயல்படுவது சிறந்தது.
69) உங்களால் முடிந்தால் வீடு திரும்பும்போது மனைவிக்கென்று ஏதாவது அவள் விரும்பிய உணவை அல்லது பானத்தை வாங்கிச்செல்லுங்கள்.
70) வாரத்திற்கு ஒருமுறையேனும் வெளியில் சென்று சாப்பிடுங்கள்.
71) அவளுடைய ஆசைகளை மறுக்காமல் கேளுங்கள். அதில் தவறு இருப்பின் உடனே கூறாமல் சற்று தாமதமாக்கி எளிமையான வார்த்தைகளைக் கொண்டு அதை சுட்டிக்காட்டுங்கள்.
72) மனைவியோடு பேசுவதற்காக நேரம் ஒதுக்குங்கள். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு டீவியை பார்த்து பிறகு தூங்குவது கூடவே கூடாது. மனைவியிடம் அன்பாக பேச வேண்டும். அவ்வப்போது உடல் நலம் போன்றவற்றை விசாரிக்கவும்.
73) மனைவி தலைவலி, இடுப்புவலி, கால் வலி போன்ற நோய்களோடு இருக்கும் போது தனது ஆசையை பூர்த்தி செய்தாகவே வேண்டும் என்று எண்ணலாகாது. மாறாக அவளின் நோய்க்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஊதாரணமாக, தலைவலி என்றால் தலையை சற்று பிடித்து விடலாம்.
74) மனைவியோடு சில சில மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடலாம். “நபி (ஸல்) தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களோடு விளையாடுவார்கள். இரு முறை ஓட்டப் பந்தயமும் நடந்தது”
75) தனது வருமானத்தைப் பற்றியும், அதிலிருந்து தான் செலவளிப்பதன் விவரம் பற்றியும் மனைவியிடம் பகிர்ந்துகொள்வது சிறந்தது. உங்கள் மனைவி ஸாலிஹாண (நல்ல) ஒருவராக இருந்தால் அதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுவாள்.
76) நீங்கள் வெளிநாட்டிலும், மனைவி தாய் நாட்டிலும் இருந்தால் அவளோடு பேசுவதற்காக கணினியை பயன்படுத்துவது வழக்கம். அப்போது பேஸ்புக், டுவிட்டர், யாகு சட், போன்ற சமுக வலையமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் போக வேண்டாம் என்று அன்பாகக் கட்டளையிடுங்கள்.
77) மனைவியிடம் நம் நண்பர்களான பிற ஆண்களைப் பற்றி புகழ்ந்து, வர்ணித்து பேசாமல் இருப்பது மிக முக்கியமாகும். அதன் விளைவாக அன்பு அந்தப் பக்கம் திரும்பலாம். இதன் விளைவு கணவனுக்கே எதிராகலாம். இது குறித்து கவனமாய் இருக்க வேண்டும்.
78) அவளுடைய குறைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம். முக்கியமாக உடலுறவுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும் கூறாதீர்கள். உடலுறவில் அவளுக்கு இருக்கும் குறைபாடுகளை நண்பர்களிடம் ஏன் பெற்றோர்களிடமும் கூறவேண்டாம். அது அவளுக்கு செய்யும் மிகவும் கேவலமான துரோகமாகும்.அதற்கான ஆலோசனைகளை இருவருமாக சேர்ந்து மருத்துவரை அணுகி பெற்றுக்கொள்ளலாமே.
79) நீங்கள் கேட்கும் பயான்கள், ஹதீஸ்கள், நபித்தோழர்களின் வரலாறுகள், நல்ல விஷயங்கள் போன்ற அறிவுரைகளை அவளுக்கும் கூறுங்கள். முழுக்க முழுக்க மார்க்க அறிவுரைகளை ஆவலுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
80) முறையாக மனைவியை மற்றவர்களிடத்திலிருந்து மறைத்துக் கொள்ளுங்கள்.
81) இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட அழகிய ஆடைகளை அணியவையுங்கள், வாங்கி கொடுங்கள்.
82) திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட மஹ்ரமான ஆண்களோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் அனுமதிக்கலாகாது. இதில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
83) பெரிய தவறுகளுக்காக மட்டும் விசாரணை நடத்துங்கள். சிறு சிறு தவறுகளை இனிமேலும் செய்ய வேண்டாம் என்று பாசத்தோடு சொல்லுங்கள்.
84) பெண்கள் அதிகமாக நோய்வாய்படக்கூடியவர்கள். அவர்களுக்கு அடிக்கடி பலவீனம்ஏற்படும்போது ‘உனக்கு ஒரே நோய்தான், நோயாலயா ஒன்ன பெத்தாங்க” என்று எரிச்சலடையக்கூடாது. பாசத்தோடு அவளுக்கு தேவையான மருந்தை கொடுக்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
85) ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அதற்கு பகராக இதுதான் சரி என்பதை அவள் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
86) உணவில் உப்பு அதிகம் என்றாலோ ருசி இல்லை என்றாலோ மனைவியை திட்டாதீர்கள். அதனை நீங்கள் உண்டு முடியுங்கள். உறங்கப்போகும்போது அவளிடம் அந்த உணவின் நிலை பற்றி கூறி மறந்து விடுங்கள். பின் அவள் அதனைப்பற்றி கேட்கும் போது ‘இருந்த போதிலும் என் மனைவி சமைத்தது நன்றாகத்தான் இருந்தது” என்ன்ற வார்த்தை அவளை ஆறுதல் படுத்தலாம். அடுத்த முறை மிகவும் ருசியாக சமைக்க முயற்சி செய்வாள்.
87) அவளுடைய ஆசைகளை அல்லது உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.
88) இரகசியமான முறையில் அவளின் பிரச்சினையை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
89) திருமணமான பின்பு மனைவியிடத்தில் தான் எதிர்பார்ப்பது இல்லையெனில் அதற்காக வருந்த வேண்டாம். அதனை அவளிடம் நல்லமுறையில் வேண்டுகோள் விடுங்கள். நிச்சயமாக அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வாள். அப்போதும் அவளால் முடியவில்லையென்றால் அல்லாஹ்விற்காக பொறுமையோடு இருங்கள்.
90) தான் ஏதாவது தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொண்டு அவளிடம் வருத்தம் தெரிவியுங்கள். நிச்சயமாக அவளுடைய அன்பு அதிகரிக்கும்.
91) முந்திய காலங்களில் செய்த தவறுகளை அவளிடம் சுட்டிக்காட்ட வேண்டாம்.
92) மனைவி கோபமடையும் வேளை கணவன் அமைதியை கையாள வேண்டும் தானாகவே அவள் அமைதியாவாள்.
93) மனைவி கணவனைவிட அதிகமாகப் படித்திருக்கலாம், குறைவாகவும் படித்திருக்கலாம் .அவளுக்கு தெரியாத ஒரு விஷயம் பற்றி நம்மிடம் கேட்கும் போது “உனக்கு இது கூட தெரியாதா?” என்றெல்லாம் அவளை இழிவு படுத்தாமல் முறையாக அவளை நெருங்கி அன்பாக விளக்கலாமே. அதனால் அவள் நம் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்கும்.
94) திருமண வாழ்க்கையில் பெரும்பாலும் மனைவிக்கும் கணவனின் தாய், சகோதரி ஆகியோர் இடையே பிரச்சினை வருவது சகஜம். அச்சந்தர்ப்பத்தில் கணவன் தன் தாய், சகோதரிகளின் பக்கம் மாத்திரம் சாய்ந்து பேசுவது முறையல்ல. நம்மை நம்பி வந்தவளே நம்மனைவி. அதனால் இரு தரப்பினருக்கும் நடுவராக நின்று பிரச்சினையை தீர்த்து வைப்பது அவசியமாகும். எத்தரப்பில் தவறு இருக்கிறதோ அதை அவர்களுக்கு உணர்த்தி இரு தரப்பினரையும் ஒற்றுமையாக்கி வைப்பது கணவன் மீது கட்டாய கடமையாகும். அதற்கான ஆற்றலை கணவன் பெற்றிருப்பது அவசியமாகும்.
95) விருந்துகளுக்கு அழைப்பு வந்தால் மனைவியையும் அழைத்துச் செல்லலாம். முக்கியமாக உங்களது குடும்ப விருந்துகளுக்கு கட்டாயமாக அவளையும் சேர்த்து அழைத்துச் செல்லலாமே. உங்களது குடும்பம் அவளை மதிக்க அது காரணமாக அமையும்.
96) வசதி படைத்தவர்கள் திருமணம் முடித்த பின் தம் குடும்பத்துடனோ, மனைவியின் குடும்பத்துடனோ ஒன்றாக வாழாமல் தனியாக ஒரு வீட்டை அமைத்துக்கொள்வது பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சிறந்தது. “விட்டு, விட்டு சந்தியுங்கள் அன்பை வளர்த்துக்கொள்ளலாம்” எனும் முதுமொழிக்கேற்ப ஒரு தனி வீட்டில் இருந்து அவர்களை விட்டு, விட்டு சந்தித்து நிரந்தரமாக பாசத்தை தக்க வைத்துக்கொள்வது முடியுமல்லவா!
97) பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பன்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன்முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். எனவே இவ்வாறான நற்குணங்களை மனைவியிடமிருந்து பிறக்கச் செய்வது கணவனின் கடமையல்லவா!
98) மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது “விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்” என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
99) அல்லாஹ் ஒரு துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.”யா அல்லாஹ்! எனது மனைவி, குழந்தை ஆகியோரில் எனக்கு கண்குளிர்ச்சியை தருவாயாக”, எனவே இந்த துஆவை நித்தமும் கேட்க நாம் தவறிவிடக் கூடாது.மனைவியை பார்க்கும் போது நமக்கு மனசந்தோஷம் கிடைக்க வேண்டும். மனைவியின் அழகு என்பது நிறத்தில் ஏற்பட்டது அல்ல.அவளை பார்க்கும் போது தனிப்பெரும் இன்பம் கிடைக்குமானால் அதுவே நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகு.
100) இறுதியாக மிக முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன், திருமண பந்தத்தில் இணையும் பெண்கள் இறுதிவரை குறிப்பிட்ட கணவனுடனேயே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஒரு கணவன் தான் நேசிக்க வேண்டிய ஒரேயொரு பெண் தனது மனைவியாவாள். மாறாக அவன் கள்ளக் காதலிகளுடன் தொடர்ப்பு வைத்திருப்பது தனது மனைவிக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.
எப்போது அவன் கள்ளக்காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வானோ அப்போதே வாழ்வில் அவனது நிம்மதியை இழந்து விடுகிறான்.தன்னை நம்பி வரக்கூடிய பெண்ணுடன் இறுதிவரை வாழ்பவனே உண்மையான மனிதன். பொதுவாக பெண்கள் இலகுவில் ஒருவரை விரும்ப மாட்டார்கள், விரும்பினால் இறுதிவரை அவருடனேயே வாழவேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள்.ஆண்கள் அவ்வாறல்ல விவாகம் செய்த ஒரு பெண்ணை விவாகரத்து செய்து விட்டு இன்னொருத்தியை விவாகம் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். விவாகரத்து செய்வது ஆகுமான ஒரு காரியம் தான். ஆனாலும் விவாகரத்து செய்யப்படக்கூடிய பெண்களது வாழ்க்கையின் நிலை என்ன ? அவர்களது பெற்றோர், சகோதரர்களது படும் பாடு ஆகியவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.இந்நிலை உங்கள் சகோதரி அல்லது மகளுக்கு ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன என்பதை காரணமே இல்லாமல் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு ஆண்களும் சிந்திக்க வேண்டும்.
மனைவியின் கடமைகள்
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)
சிறந்த மனைவி
1664- حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا غَيْلاَنُ ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ : {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ} ، قَالَ : كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَا أُفَرِّجُ عَنْكُمْ ، فَانْطَلَقَ ، فَقَالَ : يَا نَبِيَّ اللهِ ، إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الآيَةُ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ ، إِلاَّ لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ ، فَكَبَّرَ عُمَرُ ، ثُمَّ قَالَ لَهُ :
أَلاَ أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பவர்: உமர் (ரலீ), நூல்: அபூதாவூத் 1412
ஆண்களுக்கு கட்டுப்படுதல்
1192 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
« لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا »
. قَالَ وَفِى الْبَابِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ وَسُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِى أَوْفَى وَطَلْقِ بْنِ عَلِىٍّ وَأُمِّ سَلَمَةَ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ.
நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா, நூல்: திர்மிதி 1079
ஒழுக்கம் பேணுதல்
கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் அம்சம் தனது கணவனின் இடத்தில் வேறொரு ஆடவரை வைக்காமல் இருப்பதாகும். இது கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடத்தை வகிக்கும் விஷயமாகும். இந்தக் கற்பு ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதை, பெண்மணிகள் கவனத்தில் கொள்வது மிக மிக இன்றியமையாததாகும்.
ஒழுக்கமுள்ள பெண்கள்
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا
கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.
(அல்குர்ஆன் 4:34)
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 24:30)
اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண் களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)
1196 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِىٍّ الْجُعْفِىُّ عَنْ زَائِدَةَ عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ قَالَ حَدَّثَنِى أَبِى أَنَّهُ شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ فَذَكَرَ فِى الْحَدِيثِ قِصَّةً فَقَالَ « أَلاَ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلاَّ أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلاً لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا
فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ أَلاَّ يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ وَلاَ يَأْذَنَّ فِى بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ
أَلاَ وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِى كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَمَعْنَى قَوْلِهِ « عَوَانٌ عِنْدَكُمْ ». يَعْنِى أَسْرَى فِى أَيْدِيكُمْ
“உங்கள் படுக்கையை அடுத்தவர் களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக் காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலீ), நூல்: திர்மிதி 1083
பர்தாவை பேணுதல்
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّوَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப் படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி அடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்க முடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 33:59)
பெண்களின் ஆபாச ஆடை
3971 – حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.
இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3971.
சொர்க்கத்தில் சிறப்பு அந்தஸ்து
ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்’ என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நபின்றார்கள். அறிவிப்பு: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆதாரங்கள்: தப்ரானி, முஸ்னத் அஹ்மத்.
ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா
அனுமதியின்றி நோன்பு வைக்கக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமழான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், புகாரி, அபூதாவூத், தாரமி,
உடலுறவுக்கு மறுக்கக் கூடாது
கணவன் தாம்பத்யத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், வானவர்கள் விடியும் வரை அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
கருத்துகள்
கருத்துரையிடுக