அல்லாஹ்வை மகிழ்விக்க‌ அழகிய வழிகள்


 இந்த உலகில் சிலரின் சொல், செயல், நடத்தையை பார்த்து நாம் சிரிக்கிறோம். அந்த சிரிப்பு சிலருக்கு மகிழ்சியும், சிலருக்கு மன வருத்ததையும் ஏற்படுத்துகிறது

ஆனால் ? நாம் ! அல்லாஹ் மகிழும் படி வாழ்ந்தால் யாரும் வருத்தம் அடையாமல் எல்லோரும் மகிழ்சியாக வாழலாம். இன்ஷா அல்லாஹ்.

இவ்வுலகில் மனிதர்களின் நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவதை விட; நம்மை படைத்தவன் நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவது மிகப்பெரும் பாக்கியமாகும்.

அல்லாஹ்வின் சந்தோஷம் நமக்கு கிடைத்துவிட்டால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்து விட்டது போன்றதாகும்.

நம் வாழ்வில் நமக்கு மிகவும் பிரியத்திற்குரியவர், நேசத்திற்குரியவர் என்று சிலர் இருப்பார்கள். கணவன்மனைவிக்கும், மனைவிகணவனுக்கும், பெற்றோர்கள்பிள்ளைக்கும், பிள்ளைகள்பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்கிடையே மற்றும் நண்பர்களுக்கிடையே நேசத்தை வைத்திருப்போம். ஆனால், இவ்வுலகில் எத்தனை பேர் நம்மைப் படைத்த அல்லாஹ்வை மீது எந்தளவு நேசம் வைத்திருக்கிறோம். என்பதனை இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். ?

இந்த உலகத்தில் எல்லோரும் தன் பெற்றோரை, தன் கூட பிறந்த சகோதர‍சகோதரிகளை, தன் பிள்ளைகளை, தன் மனைவியை, மகிழ் வோடு வாழ விரும்புகிறோம். ஆனால் நம்மை படைத்த ரப்புல் ஆலமீனை மகிழ்வுபடுத்தாமல் விட்டு விடுகிறோம்.

 ஆதலால்? அல்லாஹூ ரப்புல் ஆலமீன் எந்த நல்லரங்களைக் கொண்டு மகிழ்ந்தானோ அப்படிப்பட்ட நல்லரங்களை நாமும்  நம் வாழ்வில் செய்து, ரப்புவின் மகிழ்வில் நாமும் பங்கு கொள்வோமாக!

அப்படியானால்? நம்மைப் படைத்தவன் நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவது எப்படி? எதன் மூலம் நாம் ரப்புக்கு  சந்தோஷத்தைக் கொடுக்கலாம்  என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்..

அல்லாஹ் எந்த அமல் செய்தால்  சிரிப்பானோ?

அல்லாஹ்எந்த இபாத்தை பார்த்து  சிரித்தானோ? அப்படிபட்ட அமலை செய்யக்கூடிய பாக்கியத்தை வாய்ப்பை & சந்தர்பத்தை தந்தருள் புரிவானாக ! ஆமீன்.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்துஅல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்என்று கூறுவான். எனவே அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்துஅல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்என்று ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. [புஹாரி 3209]

அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:

 اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ

நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன்: 11:61)

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.(50:16.)

 وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ

நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.(56:85.)

நபிஅவர்கள் கூறினார்கள்:-  

““நிச்சயமாக அல்லாஹ் [ﷻ] அழகை விரும்புகிறான்:-

إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ،”.((رواه مسلم)

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அழகை விரும்புகிறான்.

நபிஅவர்கள் கூறினார்கள்

ஒரு கவளம் உட்கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அல்லது ஒரு மிடர் நீர் பருகி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அடியானைப் பார்த்து அல்லாஹுதஆலா அளவற்ற மகிழ்ச்சியடைகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

 அல்லாஹ் [ﷻ] சிரிக்கிறான் என்பதற்கு பொருள்அல்லாஹ் சிரிக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என்பதை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிற போதுஎவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றானோ அவரை அல்லாஹ் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைவித்து விடுவான்என கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

ü திண்ணமாக அல்லாஹ் மூன்று பேர்களைக் கண்டு சிரிக்கிறான். (மகிழ்ச்சியடைகிறான்).

தொழுகைக்கான வரிசையில் நிற்பவர்,

நடு இரவில் தொழுகின்ற மனிதர்,

போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர். (படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல்) கடைசி வரை போராடுகின்ற மனிதர் (இப்னுமாஜா-200)

[முதலாவது:- தொழுகைக்கான வரிசையில் நிற்பவரைக் கண்டு சிரிக்கின்றான்:-..]

 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ

ஜின் இனத்தையும் மனித இனத்தையும் என்னை வழிபடுவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று (51: 56) உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். எனவே ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் அல்லாஹ்வை வழிபடுவதே மிக முக்கியப் பணியாகும். அது தவிர உள்ள ஏனைய அனைத்துச் செயல்பாடுகளும் அதற்கு அப்பாற்பட்டதுதான். அக்கடமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னைப் படைத்த இறைவனுக்கு அஞ்சி, தொழுகை வரிசையில் நிற்கின்றான் என்றால் அதைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். என்னுடைய அடியான் நான் இட்ட கட்டளையைச் செவ்வனே நிறைவேற்ற நின்றுவிட்டான்; நான் இட்ட கட்டளைக்குப் பணிந்துவிட்டான் என்று கருதிச் சிரிக்கிறான்; உவகை கொள்கிறான்.

அது மட்டுமல்ல, முதல் மனிதரைப் படைத்து அவருக்குச் சிரம் பணியக் கட்டளையிடப்பட்டபோது அவருக்குப் பணிய மறுத்த ஷைத்தான் உன்னுடைய நல்லடியார்களைத் தவிர மற்ற அனைவரையும் நான் வழிகெடுப்பேன் என்று அறைகூவல் விட்டுவிட்டு வந்தானே அவனுடைய அறைகூவல், ஒருவன் தொழுகை வரிசையில் நின்று அல்லாஹ்வை வழிபட முற்படும்போது தோற்றுப்போய்விடுகிறது. அதை எண்ணியும் அல்லாஹ் மகிழ்ச்சியடையலாம்.

[இரண்டாவது:- நடு இரவில் தொழுகின்ற மனிதரைக் கண்டு சிரிக்கின்றான்:-..]

மற்றவர்களெல்லாம் துயில்கொள்ளும் நடுநிசியில் இவன் மட்டும் எனையஞ்சித் தன் தூக்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை வழிபடுகின்றானே என்று நினைத்தும் ஷைத்தானின் அறைகூவலைத் தோற்கடிக்கச் செய்துவிட்டானே என்று கருதியும் சிரிக்கிறான்;

நடுநிசியில் தொழுவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: மக்களே! (சலாம் எனும்) முகமனைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவளியுங்கள்; மக்கள் உறங்கும்போது (நடுநிசி) இரவில் தொழுங்கள்; (இவற்றைச் செய்தால்) அமைதியான முறையில் சொர்க்கத்தில் நுழைவீர்கள். (திர்மிதீ) ஆகவே நடுநிசியில் தொழுவது அல்லாஹ்வின் அன்பிற்கும் அருளுக்கும் உரியதாகும்.

[மூன்றாவது:-, போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர்]. இது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல் கடைசி வரை போராடுகின்ற மனிதரையே குறிக்கிறது. தம் உயிரையும் துச்சமாகக் கருதி அல்லாஹ்விற்காக இறுதி வரை போராடுகின்ற ஒற்றை மனிதரைக் கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஷைத்தானின் அறைகூவல் தோற்றுப் போய்விட்டதை எண்ணி அல்லாஹ் மகிழ்ச்சி கொள்கிறான்.

ü இரு மனிதர்களின் விஷயத்தில் அல்லாஹ் [ﷻ] சிரிக்கின்றான்:-.

இரு மனிதர்களின் விஷயத்தில்அல்லாஹ் சிரிக்கின்றான்”  ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்கிறார் இவரும், கொலை செய்யப்பட்டவரும் சுவர்க்கத்தில் நுழைவதைக் கண்டு அல்லாஹ் சிரிக்கின்றான்என்று நபி {ஸல்} அவர்கள் தம் தோழர்கள் நிரம்பியிருந்த ஓர் சபையில் கூறிய போது

அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி சாத்தியமாகும்?” என்று நபித்தோழர்கள்  வினவ, அதற்கு நபி {ஸல்} அவர்கள்போர்க்களத்தில் எதிரும் புதிருமாக இரு அணிகளில் உள்ள இருவர், ஒருவர் அல்லாஹ்வின் சத்திய சன்மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டவர். மற்றொருவர், சத்திய இஸ்லாம் மேலோங்கக் கூடாது எனும் முனைப்போடு எதிர்க் களத்தில் பங்கு பெற்றவர்.

எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கலந்து கொண்டவரை களத்தில் கொலை செய்கிறார். அவருக்கு ஷஹீத்  உடைய அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவர் சுவனத்தில் நுழைவிக்கப் படுகிறார்.

பின்நாளில், எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார்.  பின்னர் தாம் எதிரும் புதிருமாய் இருந்த காலத்தில் யுத்த களத்தில் செய்த கொலைக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்கிறார்.

அல்லாஹ் அவருக்கும் ஓர் நற்பேற்றை வழங்குகின்றான். அவர் சத்திய சன்  மார்க்கம் மேலோங்க வேண்டும் என்கிற அடிப்படையில் நடக்கிற யுத்தத்தில் கலந்து கொண்டு தீனுக்காக தம் உயிரை அர்ப்பணிக்கிறார், ஷஹீதாகின்றார். எனவே, இவரும் சுவனத்தில் நுழைவிக்கப்படுகின்றார்என்று கூறிய அண்ணலார் இதன் காரணத்தினாலேயே அல்லாஹ் சிரிக்கின்றான்என்று கூறினார்கள். (புகாரி 2826 )

உஹது போரில் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் அஃபான் என்பார் எதிரிகளின் அணியில் இருந்தார். போரில் நுஃபான் பின் கவ்கல் (ரலி) என்ற முஸ்லிமை அவர் கொலை செய்து விட்டார். இவர் பிறகு இஸ்லாத்தில் இணைந்தார். பின்பு அறப்போரில் கொல்லப்பட்டு உயிர்த் தியாகியாகி விட்டார்.

ü தமக்கே தேவை இருந்தும் கூடு, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவதைக் கண்டு அல்லாஹ் (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்:-.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.’.. அல்லதுஇவருக்கு விருந்தளிப்பவர் யார்?.’.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (விருந்தளிக்கிறேன்)’ என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்துஎன்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, ‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லைஎன்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடுஎன்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூடு, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான். [புகாரி 4889]

وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ

மேற்க்கண்ட அமலை நாமும் செய்து அல்லாஹ்வின் மகிழ்வில் பங்கு கொள்வோமாக!! ஆமீன்.

ü பாவமன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் [ﷻ]  அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்:-.

உண்ண உணவோ, அருந்த நீரோ இல்லாத ஒரு காட்டில், ஒருவருடைய உணவும் நீரும் வைக்கப்பட்டிருந்த வாகனம் தன் கயிற்றை இழுத்தவாறே காணாமல் போய்விடுகிறது; அவர் ஒட்டகத்தைத் தேடிக் களைத்துவிட்டார். பிறகு அந்த ஒட்டகம் ஒரு மரத்தைக் கடக்கும்போது அதன் கயிறு மரத்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொள்கிறது. அம்மனிதருக்கு அந்த ஒட்டகம் அவ்வாறே சிக்கிய நிலையில் கிடைத்துவிடும்போது அவர் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், யாரஸூலல்லாஹ்! அவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார் என்று நாங்கள் கூறினோம், கவனமாகக் கேளுங்கள்!, (இவ்வளவு கடினமான நிலையில் நம்பிக்கை இழந்த பின்) அவரது வாகனம் கிடைத்தால் அம்மனிதர் மகிழ்ச்சியடைவதை விட, தன் அடியான் தவ்பாச் செய்யும் போது அல்லாஹுதஆலா அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்”  (முஸ்லிம்)

வறண்ட பாலைவனத்தில் தொலைந்து போய்விட்ட தமது ஒட்டகத்தை உறங்கியெழும்போது கண்டுபிடித்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி, தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.  (புகாரி 5301)

ü சொர்க்கத்தில் விவசாயம்:-... மகிழ்ச்சிடைகிறான்

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாதுஎன்று கூறுவான்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (புகாரி 2348)

ü பாவங்களை அவனைத் தவிர வேறு யாரும் மன்னிக்க முடியாது என்று விளங்கியுள்ளஅடியானப்பார்த்து மகிழ்ச்சிடைகிறான்:-.

அலீஇப்னு ரபீஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன், அவர்களுக்கு முன்னால் வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் தமது பாதத்தை ரிகாபில் (கால் வைக்கும் வளையம்) வைத்தபொழுது, (بِسْمِ اللهِ) என்று சொன்னார்கள், பிறகு வாகனத்தின் முதுகில் அமர்ந்ததும் (اَلْحَمْدُ لِلّهِ) என்றும் பிறகு, (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَي رَبِّنَا لَمُنْقَلِبُونَ) இந்த வாகனத்தை நாங்கள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கும் நிலையில், எங்களுடைய கட்டுப்பாட்டில் இதை ஆக்கிக் கொடுத்த அல்லாஹ் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் எங்களுடைய ரட்சகனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்கள் என்று சொன்னார்கள். பிறகு, மூன்று முறை (اَلْحَمْدُ لِلَّهِ) என்றும், மூன்று முறை (أَللّهُ أَكْبَرُ) என்று சொல்லியபின், (سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ) நீ பரிசுத்தமானவன். (உனக்கு மாறுசெய்து) எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாதுஎன்று சொன்னார்கள். இதற்குப் பிறகு அலீ (ரலி) அவர்கள் சிரித்தார்கள், தாங்கள் எதற்காக சிரித்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நான் செய்ததைப் போன்று செய்துவிட்டு அவர்கள் துஆ ஓதியபின் சிரித்ததைக் கண்டேன். யாரஸூலல்லாஹ்! தாங்கள் ஏன் சிரித்தீர்கள்?” என்று வினவினேன். அடியான், அல்லாஹுதஆலாவிடம் தன்னுடைய பாவங்களை மன்னித்துவிடு என்று சொல்வதாலும், பாவங்களை அவனைத் தவிர வேறு யாரும் மன்னிக்க முடியாது என்று அடியான் விளங்கியுள்ளதாலும், உம்முடைய ரட்சகன் அவனைப்பார்த்து மகிழ்ச்சிடைகிறான்என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். [அபுதாவூத் 2602]

 

 

ü மனிதனின் பேராசையை சுட்டிக்காட்டி சிரிக்கும் அல்லாஹ் [ﷻ]:-.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, “உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், “மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவாஎன்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், “என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவாஎன்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், “என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!” என்பார். அதற்கு இறைவன், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?” என்று கேட்பான். அதற்கு அவர், “என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார்.

(இதை அறிவித்தபோது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகுநான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது மக்கள்ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இவ்வாறுதான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அப்போது நபித் தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். [முஸ்லிம் 310]

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உலகில்

1.அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அடியானைப் பார்த்து

2.தொழுகைக்கான வரிசையில் நிற்பவர்,

3.நடு இரவில் தொழுகின்ற மனிதர்,

4.போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர். (படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல்) கடைசி வரை போராடுகின்ற மனிதர்.

5. இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் போர் கலந்து. அவருக்கு ஷஹீத்  உடைய அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவர் சுவனத்தில் நுழைவிக்கப் படுகிறார்.

6.பின்நாளில், எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார்.  பின்னர் தாம் எதிரும் புதிருமாய் இருந்த காலத்தில் யுத்த களத்தில் செய்த கொலைக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்கிறார்.

7. தமக்கே தேவை இருந்தும் , தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவதைக் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்:-.

8.பாவமன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் [ﷻ]   மகிழ்ச்சி அடைகிறான்:-.

9.பாவங்களை அவனைத் தவிர வேறு யாரும் மன்னிக்க முடியாது என்று விளங்கியுள்ளஅடியானப்பார்த்து மகிழ்ச்சிடைகிறான்:-.

மறுமையில்

10.சொர்க்கத்தில் விவசாயம்:-... மகிழ்ச்சிடைகிறான்

11.மனிதனின் பேராசையை சுட்டிக்காட்டி சிரிக்கும் அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001