மனஅழுத்தம்
وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا
மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். 4:28.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ
بِذِكْرِ اللّٰهِ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ
. (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! 13:28
أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ
صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ. أَلاَ وَهِيَ
الْقَلْبُ ".
நபி(ஸல்) கூறினார்கள்:
நிச்சயமாக உடம்பில் ஓர் சதைத்துண்டு உண்டு. அது சீராக இருந்தால், அனைத்தும் சீராக அமையும். அது கெட்டுவிட்டால், அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் இதயம் (புகாரி52)
மன அழுத்தம் என்றால் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் பலவீனனாக படைக்கப்பட்டு இருக்கிறான். وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا
குர்ஆன் சொல்கிறது.
பலவீனம் என்றால் அது உடல் ரீதியான பலவீனமாக இருக்கலாம். அல்லது மன ரீதியான பலவீனமாக இருக்கலாம். இப்படி பலவீனங்களைக் கொண்டவனாக தான் அல்லாஹ் மனிதனை படைத்து இருக்கிறான்.
இந்த
பலவீனமாக இருக்கக்கூடிய மனிதன் தனக்கு சுமக்க முடியாது என்று கருதக்கூடிய பிரச்சினைகளை சந்திக்கும் போது
அவனுக்கு மன
அழுத்தம் ஏற்படுகிறது. அல்லது அவனுக்கு விருப்பமில்லாத ஒரு
காரியம் அவன்
மீது திணிக்கப்படும்போது அவனுடைய மனம்
அழுத்தத்திற்கு உள்ளாகிறது.
அவனுக்கு
தாங்க முடியாததும், அவனுக்கு விருப்பம் இல்லாததுமான காரியங்களை சந்திக்கும் பொழுதெல்லாம் மனிதன் அவனுடைய நிதானத்தை இழந்துவிடுகிறான்.
இந்த மாதிரியான ஒரு பிரச்சனைக்கு ஆளாகும் போது அவன் நினைத்த நேரத்தில் தூங்க முடிவதில்லை. ஒழுங்காக சாப்பிட முடிவதில்லை. ஒரு வேலையில் ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்ய முடிவதில்லை. கூட இருக்கிற நண்பர்க எல்லாம் திட்டக் கூடிய ஒரு நிலைமை எல்லாம் ஏற்படுகிறது.
உடல் ரீதியாக தாங்க முடியாததையோ, உளரீதியாக தாங்க முடியாததையோ சந்திக்கும் பொழுது எப்படி எதிர் கொண்டால் அதனால் அது வந்து நம்ம மனசை அழுத்த அது அதனால் நமக்கு பிரச்சனை வராது என்பதை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நாங்கள் பார்த்தோம் என்று சொன்னால் ரொம்ப எளிதாக விடுபட்டுவிடலாம்.
உலகத்தில்
மற்றவர்கள் மன
அழுத்தத்தில் இருந்து விடுபடுவதாக இருந்தால் அவங்களுக்கு நிறைய கவுன்சிலிங் கொடுக்க வேண்டி இருக்கும். தேவைப்பட்டால் சில
நேரங்களில் மருந்து மாத்திரைகள் கூட
அவர்களுக்கு அவசியமாகி விடும். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை இஸ்லாம் என்கிற இந்த
வாழ்க்கை நெறியே மன
அழுத்தத்தில் இருந்து மனிதனை விடுவித்து, அவனை
அப்படி மென்மையாக, லேசானவனாக, எல்லாத்தையும் லைட்டாக எடுத்துக் கொள்ளக் கூடியவனாக மாற்றக் கூடிய அடிப்படைகளை இந்த
மார்க்கம் வழங்கப் பட்டிருக்கிறது.
ஆனால்
இந்த மார்க்கத்தை சரியான முறையில் நம்பி விட்டால் வணக்க வழிபாடு, செயல்பாடுகள். எப்படி ஒரு
பிரச்சனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது.
மன
அழுத்தத்தை போக்குறேன்னு சொல்லிட்டு அவனோட காலத்தையும் அவனோட பணத்தையும் வீணாக்க வேண்டிய தேவையே கிடையாது.
இஸ்லாத்தை க்கும் அது என்ன உலகத்துக்கு ஒரு மெசேஜ் வைக்கிறது? நீங்க இந்த உலகத்துல வாழும் போது உங்களுக்கு சில கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் வரும். பொருளாதார கஷ்டம் வரலாம். தாங்க முடியாத நோயின் காரணமாக கஷ்டம் வரலாம். அல்லது பல பேர் நம்மள வந்து அவதூறு சொல்கிறார்கள். புண்படுத்துகிறார்கள். அது மாதிரியான மான மரியாதைக்கு பிரச்சனை இருக்கிறது என்பதற்காக வரலாம். அல்லது குழந்தை இல்லை என்பதற்காக வேண்டி ஒரு டென்ஷன் ஏற்படலாம். திருமணம் ஆகவில்லை என்பதற்காக கூட இப்படி ஏற்படலாம். ஆனால் திருமணம் சரியாக அமையவில்லை என்பதற்காக கூட இப்படி ஏற்படலாம்.
அல்லது விரும்பக்கூடிய ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக ஏற்படலாம். அல்லது பெற்ற குழந்தை சரியான முறையில் இல்லை என்ற காரணத்திற்காக நமக்கு இதெல்லாம் பிடிக்காத காரியங்கள், நமது விரும்பாத, பிடிக்காத காரியங்கள் எல்லாம் உலகத்தில் நடக்கும் போது அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் அற்புதமான ஒரு ஏற்கத்தக்க பகுத்தறிவுக்கு ஒத்த ஒரு வழிகாட்டுதலை நமக்கு தருகிறது. அது என்ன வழிகாட்டுதல் என்று சொன்னால், நாம் வாழ்கிற இந்த உலகத்துல நீங்க அனுபவிக்கிற எவ்வளவு பெரிய இன்பமாக இருந்தாலும், இந்த உலகத்துல நீங்கள் சந்திக்கின்ற எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் அது ஒரு தற்காலிகமானதே. அது ஒரு சின்ன காலகட்டத்திற்கு உரியது. இதை விட இன்னொரு வாழ்க்கை உங்களுக்கு இருக்கிறது.
நமக்கு பரிட்சைக்காக தரப்பட்டு இருக்கே தவிர, இது நம்மளை தண்டிப்பதற்கு தரப்படல என்று ஒருவன் புரிந்து கொண்டால் அதுல ஒருவனுக்கு குழந்தை இல்ல. எல்லா விதமான முயற்சியும் பண்ணி பார்த்து தான் குழந்தை இல்லை என்று ஆகிவிட்டது என்று சொன்னால் அவன் என்ன நினைக்கிறே? இந்த குழந்தையின்மை என்கிற இந்த ஒரு நிலையை கொடுத்து நீ இறைவனை மறுக்குறியா? அல்லது நான் விரக்தி அடைந்து போயிடுவியா? இந்த உலகத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சுனு நினைக்கிறாயா?
இதுக்கெல்லாம் சேர்த்து பின்னாடி நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறாயா? இப்படி சொல்லி இந்த உலகத்தில் வர்ற எல்லாமே ஒரு பின்னாடி உள்ள ஒரு பெரும் பரிசுக்காக வேண்டி தான் தரப்படுகிறது. இப்படி ஒருவன் நினைத்தான். ஆனால் நிறைய நிறைய வழிகாட்டுதல் இஸ்லாத்தில் இருக்கிறது. இந்த மாதிரி ஒருவன் நினைத்து பார்த்தான். ஆனால் அவனுக்கு இதெல்லாம் பெரிசா தெரியுமா? வறுமையோ, கஷ்டமோ, துன்பமோ, நோயோ, நொடியோ எதுவும் இருக்கட்டுமே. இதெல்லாம் அவனுக்கு சாதாரணமா போய்விடும்.
வாஷிங்டனில் உள்ள,
மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த
ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம் பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.
கடவுள் நம்பிக்கை, நோய்
குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை
போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தமும், நோயின் தாக்கமும் எந்த
வகையிலும் குறையவில்லை.
ரோஸ்
மேரின் குறிப்பிடுகையில், "கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல
சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்சனையிலிருந்து விடுபடுவோம் என்ற
நம்பிக்கை ஏற்படுகிறது. இது
தான் இந்த
ஆய்வின் முக்கிய அம்சம். இந்த
ஆய்வு, இனி
வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என
நம்புகிறேன்'' என்றார்.
நாம்
வாழும் சூழலில் மன
அழுத்தம் (Depression) பெறாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உள்ளம் அமைதியை இழந்து விட்டது. இதனால் நரம்பியல் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தாம்பத்ய நோய்கள் ஏற்படுகிறது. மன
அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரு
முஃமின் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மன அழுத்தத்தின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ளவர்கள் இயற்கைக்கு முரணான குடும்ப உறவுகளால், குடும்ப உறவுகள் சீர்கெட்டு மன
நோய்க்கு ஆளானோர் அதிகமாக உள்ளதாக ஓர்
ஆய்வு கூறுகின்றது. கேரளாவில் இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள
மாநிலம்; மன
வேதனையில் சிக்கி தற்கொலைகளைச் செய்வதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாகத் திகழ்கின்றது.
இறைவனை ஒருவர் நம்ப
வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த
வகையில் இந்த
ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
படித்தவர்களையும், பாமரர்களையும், விட்டு வைக்காத மன
நோய் ஏற்பட யார்
காரணம்? முஸ்லிம்களும் ஒரு
சிலர் தற்கொலை செய்வதை படிக்கின்றோம். முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் உறுதி இல்லாத நிலையால் மன
அழுத்தம் ஏற்படுகின்றது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என
அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் ஏற்படக் காரணங்களும், தீர்வுகளும்:
1.
எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்:
ஒரு
பள்ளியில் படித்த இரு
மாணவர்கள் ஒருவர் டாக்டர் ஆவதும், மற்றொருவர் மளிகைக் கடையில் வேலை
செய்வதும் இயல்பான செயல்களே! டாக்டரைப் பார்த்து, வேலை
செய்பவர் பொறாமைப் படுவதால் இவருடைய உள்ளம், இறைவன் ஏன்
நமக்கு அந்தப் பதவியைத் தரவில்லை? என்று படைத்த இறைவனையே குறை
காண்கின்றான். இல்லை இவன்
தன்னையே வஞ்சிக்கின்றான். மன
நிம்மதி இழந்து கவலைகள் பீடிக்கின்றது. இதில் பள்ளியில் அனைவருடைய எதிர்பார்ப்பும் டாக்டர் ஆகிவிடுவதே; சிலர் கூலி
வேலைக்குச் செல்லும் போது
எதிர்பார்ப்பு ஏமாற்றமாக அவர்களுக்குத் தோன்றுகிறது.
தீர்வு : குர்ஆனின் வசனம்:
اِنَّ رَبَّكَ يَبْسُطُ
الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا
بَصِيْرًا
நாடியவருக்கு விசால மாகவும் நாடியவருக்கு சுருக்கியும் உணவை
வழங்கு கின்றான். அல்லாஹ் அனைத்தையும் கண்காணித் தவனாக இருக்கின்றான் 17:30
என்ற வசனம் தான்
மனதை ஆற்றுப்படுத்தும்.
2.
எதிர்பாராத நிகழ்வுகள்:
குறிப்பாக விபத்துக்கள், தாய்,
தந்தை மரணம், மனைவி மரணம், கொடுமையான புற்றுநோய் போன்ற செய்திகள் கேள்விப்பட்டு மனம்
கலங்கு கிறது. திடீர் என்று கேள்விப்படுவதால் மனஅழுத்தம் க்கு
ஆளாதல்.
தீர்வு: அல்லாஹ்வின் களாகதிரை-விதியை நம்புவது அவன்
ஏற்படுத்திய ஆயுள் தவணையைப் பரிபூரணமாக நம்பிவிட்டால் மனம்
அழுத்தத்தை விட்டுத் தப்பிவிடலாம். நபி(ஸல்) கூறினார்கள். “”பலமிக்க இறை நம்பிக்கையாளன் பலம் குன்றிய இறை நம்பிக்கையாளனை விடச் சிறந்தவன். அல்லாஹ்வுக்கு மிகவும் நேசமானவனும் ஆவான். ஆனால் இருவரிலும் நன்மை இருக்கின்றது. உங்களுக்குப் பயனுள்ள பணியில் ஆர்வம் கொள் ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டால் “”நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி ஆகி இருக்காது” என்று கூறாதீர்கள். மாறாக (கத்தரல்லாஹ் வமா ஷாஅ ஃபஅல) அல்லாஹ் ஏற்படுத்திய விதி, அல்லாஹ் நாடியதைச் செய்து விட்டான் எனக் கூறுங்கள். ஏனெனில் (லவ்) “ஆல்’ எனும் நிபந்தனைச் சொல் ஷைத்தானின் செயலை ஆரம்பமாக்கி விடுகிறது”.
நூல்:முஸ்லிம்.
நடந்து விட்டவற்றை அல்லாஹ்வின் தீர்வாக விதியை ஏற்றுச் செயல்படுவதே மன
அமைதியைத் தரும்.
சமூகக் காரணிகள்
(Social Factors)
நாம்
வாழும் சமூகம் பொருளாதார ஏற்றத் தாழ்வு கள்
நிறைந்த சமூகம். அண்டை வீட்டினரால் உறவினர்களால், தொழில் போட்டிகளால் பல்வேறு வகையில் மன
அழுத்தம் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டில் நம்
காது கிழிய ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒலியை பெருகச் செய்வது (அல்லது) நம்மைக் கோபமூட்ட நமக்குப் பிடிக்காதவற்றைச் செய்வதால் மன
நிம்மதி கெட்டு எரிச்சல் அடைந்து விடுகின்றோம் இந்த
தகாத காரியங்களால் மன
நிம்மதி இழக்க வேண்டியது தான்.
தீர்வு : اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُؕ
அல்லாஹ் குர்ஆனில் கூறும் வசனம் 13:28-ல்
நம்பிக்கைக் கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க. அல்லாஹ்வின் நினைவால் தான்
உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்
லாஹ்வை நினைவு கூற
பள்ளிச் சென்றால் மன
நிம் மதி
கிடைப்பதற்குப் பதில் நிம்மதி இழக்கும் நிலை
ஏற்படுகிறது பாவிகளின் செயலால். இப்படிப்பட்ட சமூ
கக் காரணங்கள் மலிந்தே கிடக்கின்றன. பொறுமை யையும், சகிப்புத் தன்மையையும் தவிர
வேறு எதுவும் பயனளிக்கப் போவதில்லை.
இந்த
வசனம்
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ
وَالْخَيْرِ فِتْنَةً ؕ وَاِلَيْنَا تُرْجَعُوْنَ
.21:35 அனைத்து மனப் பிரச்சனை களுக்கும் அருமருந்து “”ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகவே இருக்கிறது. தீமையைக் (துன்பங்களை) கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் சோதிக்கின்றோம். நீங் கள் நம்மிடமே திரும்புவீர்கள். எந்த மனிதரும் மேற்கண்ட வசனத்திற்கு விதிவிலக்கில்லை.
துன்பங்கள் நிகழ்ந்து விட்ட உடனே
மனம் கலங்கிய உடன்
அடுத்த விநாடி ஒரு
மூமின் இந்த
வார்த்தைச் சொன்னால் அவனது ஆழ்மனம் Subconsious mind மன அழுத்தத்திலிருந்து சிறிது சிறிதாக விடுதலை ஆகிவிடுகின்றது.
நபி(ஸல்) கூறினார்கள்.“”திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். திண்ணமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் ஆவோம். யா அல்லாஹ்! எனது துன்பத்தில் எனக்குக் கூலி வழங்குவாயாக! மேலும் இதற்குப் பகரமாக இதனினும் சிறந்த இலகுவை வழங்குவாயாக!”
நூல் :முஸ்லிம்.
குடும்ப உறவுகளும், பொறுப்புகளும் :
இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலோர் அயல்நாட்டு வாழ்வால் இரு
உலக வாழ்வின் நஷ்ட
வாளிகளாக மாறி
விட்டார்கள். பணம்
வாழ்வதற்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாழ்வதற்குத்தான் பணம்
அவசியம்; பணத்தைப் பெற்று வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். வெளிநாட்டு வாழ்க்கைக்கான நிர்பந்தம் என்ன?
கடன் பளுவால் நெருக்கடி; இதனால் மானம் மரியாதை போய்விடும், என்னால் உயிரோடு இருக்க முடியாது என்ற
நிலை வரும் போது
கணவன் மனைவியிடம் “”நம்
கடனை அடைத்து விட்டு வந்து விடுகின்றேன்” என்று கூறி
மனைவியிடம் அனுமதிப் பெற்று செல்வதில் தப்பில்லை. இன்றைய மனைவி மார்கள் கணவன்மார்களிடம் “”நீங்கள் கட்டாயம் வெளிநாடே போய்
ஆகனும்; இல்லாவிட்டால் குடும்பத்தில் பெரிய சண்டைச் சச்சரவுகள் வந்து விடும்” என
நச்சரிக்கின்றாள். கணவன் தரும் சாதாரணத் தொகையைக் கொண்டு உள்ளூரில் வாழ்வதால் அவளுடைய கெளரவம்(?) பாதிக்கப்படு கிறதாம். அவளுடைய அக்காள் கணவர் கார்
வாங்கி விட்டார், அவளுடைய 2வது
அக்கா கணவர் அக்கா விற்கு நெக்லஸ் வாங்கி கொடுத்தார், மூன்றாவதாகிய நான்
என்ன சுகம் பெற்றேன். ஒன்றுமில்லையே! 4வது
என் தங்கை கணவர் துபையிலிருந்து கார்கோவில் மாதம் ஒருமுறை சமான்களை அனுப்புகிறார்.
இப்படிப்பட்டப் பலகீனமான நம்பிக்கையுள்ளப் பெண்களால் வேறு
வழியின்றி கணவனின் பொறுப்பில் மனைவி அமர்ந்து ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் குடும்பமே சிக்குகின்றது. நீங்கள் எதை
வேண்டுமானாலும் சொல்லுங்கள்; செல்வம் என்று வரும்போது மார்க்கம் துடைத்தெறியப்படுகின் றது.
“”பெண்கள், ஆண்களை நிர்வாகம் செய்யக் கூடியவர்கள்”. இதனால் மன
நிம்மதி இழந்து, சுய
இன்பம் என்ற
தவறான வழிமுறை, தூக்கமின்மை. தாயின் வளர்ப்பிலேயே வளர்ந்த மக்கள் அவருக்கு கட்டுப்படுவதுமில்லை.
அல்லாஹ் நமக்குத் தந்ததைப் பொருந்தி இருந்தால் எளிய
வாழ்க்கை, ஈருலக பாக்கியம், உடல்
ஆரோக்கியம் அனைத்தும் கிடைத்திருக்கும். எல்லாம் நஷ்டப்படுவதை யார்
விரும்புவார்கள்? ஷைத்
தான்களும் அவனது நண்பர்களுமே.
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا
فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (4:34)
தீர்வு
: பொறுப்புகளை குடும்பத் தலைவரிடம் ஒப்படைத்து அவரின் கட்டளைகளைப் படி
கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது குடும்ப உறவு
சீர்பெறும்.
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ
اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
இன்னும் எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரிடமிருந்தும் எங்கள் சந்ததிகளிலி ருந்தும் எங்களுக்கு கண்களின் (குளிர்ச்சியைத்) தந்து அருள்வாயாக! அன்றியும் பயபக்தியுடையவர் களுக்கு எங்களை வழிகாட்டியாகவும் ஆக்கு வாயாக!” என்றும் கூறுங்கள்25:74 .
وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ
اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ
مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ
يَّتَفَكَّرُوْنَ
. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:21
மனைவிகள் மூலம் அமைதியைப்(லிதஸ்குனூஹா) பெறுவதற்காக அல்லாஹ் சொல்லும்போது, தாம்பத்யம் இல்லாத வாழ்வால் அவளும், அவனும் உடல்
ரீதியாக நோய்
களுக்கு ஆளாகின்றனர். மனநோய், இதய
நோய், ஹார்மோன்களில் செயல்பாடுகள் மாறுதல் தூக்க மின்மை, இவை
ஏற்படுகின்றன.
ஏற்படும் மாற்றங்கள்:
1.
எதையோ இழந்தது போன்ற உணர்வு
2.
தோல்வி பயம்
3.
தன்னை தாழ்வாகக் கருதுவது
4.
உணர்ச்சி வசப்படுதல்
5.
பிறரின் கருத்துக்களைத் தள்ளி வைப்பது
7.
தூக்கமின்மை
8.
கழிவறையில் நீண்ட நேரம் எதையோ சிந்திப்பது
8.
தனிமையை நாடுதல்
9.
பசியின்மை (அ)
அகோரப் பசி
10.
ஆடைகளைச் சுத்தமாக இல்லாத நிலையில் அணிவது.
மேற்கண்ட குறிகள் Stress
உடலில் ஏற்பட்டதற் கான
அடையாளம்.
நீங்கள் செய்ய வேண்டியவை:
1.
அல்லாஹ்வின் மீது
பூரண நம்பிக்கை வைப்பது; உங்கள் நம்பிக்கையின் உறுதிக் கேற்ப சோதனைகள் அமையும், அவனையே சார்ந்து வாழ்வது.
2.
மறுமையில் சரியான தீர்ப்பை அல்லாஹ் வழங்குவான்; எந்த
ஆத்மாவும் மற்றொரு ஆத்மா விற்கு உதவி
செய்திட முடியாத நாள்-அந்த நாளின் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே; அவன்
ஒருபோதும் அநீதி செய்ய மாட்டான் என்று நம்புவது. நம்முடைய இழப்புகள் எதுவாக இருந்தாலும் அந்த
நாளில் கிடைத்து விடும் என
நம்புவது.
3.
கடுமையான நோய்,
தூக்கமின்மை உள்ளவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வது 13:28ன்படி அமைதி கூரும்போது இரத்த அழுத்தம், பக்க
வாதம், இதய
நோய்கள் நமக்கு ஏற்பட வாய்ப்புகள் மிக
மிகக் குறைவு.
4.
நீங்களே உங்கள் வேலைகளைச் செய்துப் பழகுங்கள்; துணி
துவைப்பது முதல் அயன்
செய்யும் வரை
உதவிக்கு யாரையும் அழைக்க வேண்டாம்.
5.
நல்ல நண்பர்களுடன் மனம்
விட்டுப் பேசும்போது மனசில் உள்ள
காயங்கள் ஆறிவிடும். மனச்
சுமை இறங்கிவிடும்.
6.
காலையிலும், மாலையிலும் சூரிய உதயத்திற்கு முன்னும் மறைவதற்கு முன்னும் அல்லாஹ்வை திக்ரு செய்திடுங்கள். நபி(ஸல்) கூறினார்கள். “எவர்
காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் ஸுப்ஹானல்லாஹி வ
பிஹம்திஹி (அல்லாஹ்வைப் புகழ்வதுடன் அவன்
தூயவன் என்றும் துதிக்கிறேன்) என்று ஓதுவாரோ அவரது “அமலை’
விடவும் சிறந்த அமலை
மறுமை நாளில் யாரும் கொண்டு வரமுடியாது. அவர்
சொல்லியது போன்று சொன்னவரையோ அதனினும் அதிக
மாகச் சொன்னவரையோ தவிர!” நூல்:
முஸ்லிம். (ர.அ.) 5222
7.குர்ஆனை ஓதுவது மன
அழுத்தம் மற்றும் இடையூறுகளை சமாளிக்க உதவும். அது
உங்கள் ஆன்மாவிற்கு அமைதியை அளிக்கிறது.
8. உங்களால் முடிந்த அளவு
தர்மம் செய்யுங்கள்! உங்களால் ஏழைகளுக்கு பணத்தை வழங்க முடியாவிட்டாலும், மற்றவர்களுக்கு உடல்
ரீதியாகவும் அல்லது உணர்ச்சி ரீதியாகவும் உதவுவது
9. ஷைத்தானை உங்கள் மனதுடன் விளையாட விடாதீர்கள். மாறாக புதிய இலக்குகளை நிர்ணயித்து அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். அவர்
உங்களையும் உங்கள் கஷ்டங்களையும் மறக்க மாட்டான் எனவே
உங்கள் பாதையிலிருந்து விலகாதீர்கள்.
10. இறுதியாக, பொறுமையாக இருக்க மறக்காதீர்கள். பொறுமை, தன்னடக்கம், விடாமுயற்சி, சகிப்புத்தன்மையுடன் இருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக