பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு…..

                                   
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.அல்குர்ஆன் 102:8
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.அல்குர்ஆன் 4:29
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.அல்குர்ஆன் 2:195
ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)
நூல்: திர்மிதீ 2341
ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.
தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது.
இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம்
தீபாவளி கொண்டாடுகின்றோம் என்று சொல்லி முஸ்லிம்கள் பட்டாசு வெடிப்பதை காண்கின்றோம்; தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசுகளை வாங்கிக்கொடுத்தும் வெடிக்கச் செய்கின்றனர். பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் ஹராம்களைச் செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள். பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில் ஹராமாகும். காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும் ஹராமாகும். நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது. இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இதை முஸ்லிம்கள் உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
பட்டாசுகள் வெடிப்பொருட்களில் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று எதுவும் இல்லை. அனைத்து பட்டாசுகளும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது. சிறிய பட்டாசைக் கொளுத்தினாலும் அதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குடிசைகளில் பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.
ஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்கள், “இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி 11
அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம், “எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்என்று பதிலளித்தார்கள். நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்ததுஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்என்று கூறினார்கள். நான், “இதுவும் என்னால் இயலவில்லையென்றால்….?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்என்று கூறினார்கள். நூல் : புகாரி 2518

எனவே பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது. இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும். எனவே முஸ்லிம்கள் இந்த பாவத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்

.ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் வலியுறுத்துகின்றது.
நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம் வணக்கமாக ஆக்கியிருக்கின்றது.
இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது. மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.
இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.
பட்டாசு வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
125
டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார்.
(
தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.)
பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக் கொண்டே இருக்கின்றது.
அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாகக் கலக்கையில் அது மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.
ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தர ஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றதுஎன்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார்.
இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.
இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்.
இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.
மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.
பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது.
பச்சிளம் குழந்தைகள் கூட, சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மருத்துவர்களின் வெறும் ஆய்வு அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம்.
பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.
இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.அல்குர்ஆன் 4:29
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.அல்குர்ஆன் 2:195
நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா?
பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா?
ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு?
மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப் பெரும் பொறுப்பும் கடமையுமாகும்.
திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள்
பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடையூறுகளும் உள்ளன.
வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும் கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன.
இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.
பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)நூல்: புகாரி 10
வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா?
வீணாகச் செலவழிக்கும் போது, ”காசைக் கரியாக்காதே!” என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.அல்குர்ஆன் 102:8
பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும்.
ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)
நூல்: திர்மிதீ 2341
இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

.
.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001