ஜும்மா நாளின் சிறப்பு

 *بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ*


*ஜும்ஆ*


1. நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9


2. குளிப்பு கடமையைப் போல் குளிக்க வேண்டும் 

(ஸஹீஹ் முஸ்லிம் 1530)


3. பல் துலக்க வேண்டும் 

(ஸஹீஹ் முஸ்லிம் 1537)


4. தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் 

(ஸஹீஹ் முஸ்லிம் 1538)


5. நறுமணம் பூச வேண்டும் 

(ஸஹீஹ் முஸ்லிம் 1537)


6. இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் 

(ஸஹீஹ் முஸ்லிம் 1540)


7. வாகனத்தில் செல்லாமல் நடந்தே பள்ளிக்கு செல்வது


யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு


(வாகனத்தில் செல்லாமல் நடந்து) அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(சூனன் நஸயீ 1364)


8. ஜும்ஆ தொழுகைக்காக இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும் குர்பானியின் நன்மை ஒட்டகம் மாடு ஆடு கோழி முட்டை என்ற வரிசையில் கிடைக்கும்

( ஸஹீஹ் புகாரி 929)


9. பள்ளிக்குல் நுழைந்த உடன் இடம் இல்லையெனில் யாரையும் நகர சொல்லாமல் யாரையும் பிரிக்காமல் தனக்கு கிடைத்த இடத்தில் நின்று அமர்வதற்கு முன் கூடுதல் தொழுகை தொழ வேண்டும் தொழாமல் அமரக் கூடாது 

( ஸஹீஹ் புகாரி 910, 911, ஸஹீஹ் முஸ்லிம் 1585)


10. இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்த உடன் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து உரையை கவனிக்க வேண்டும் 

(ஸஹீஹ் முஸ்லிம் 1556)


11. அருகில் இருப்பவரிடம் மெளனமாக இருங்கள் என்று கூறினாலும் வீண் காரியத்தில் ஈடுபட்டதாக அமைந்துவிடும் (ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்) 

(ஸஹீஹ் முஸ்லிம் 1542)


12. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.(ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்) 

(ஸஹீஹ் முஸ்லிம் 1557)


13. இமாம் உரையை கவனமாக செவி தாழ்த்தி கேட்டு விட்டு தொழுகையையும் இமாமமுடன் தொழ வேண்டும்.. 

(ஸஹீஹ் முஸ்லிம் 1556)


ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி

(ஸல்) அவர்கள்.  நீர் தொழுது விட்டீரா?

என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!' என்று கூறினார்கள். புகாரீ 931, முஸ்லிம் 1449


*மேற்கண்ட இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் ஆனால் முழு ஜூம்ஆ வையும் அடைந்ததாக அமையும் ஜூம்ஆ உடைய கூலி இன்ஷா அல்லாஹ் முழுமையாக கிடைக்கும்*


*மேலும் அடுத்த ஜூம்ஆ வரையும் மேற்க்கொண்டு மூன்று நாட்கள் மொத்தம் வரக்கூடிய 10 நாட்கள் ஏற்படக்கூடிய பாவத்திற்கு பரிகாரமாக அமையும்*


*ஸஹீஹ் முஸ்லிம் 1556


*"(ஜும்ஆ உரையின் போது) கல்லை அகற்றக்கூடியவர் (ஜும்ஆவை) வீணடித்துவிட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : இப்னு மாஜா - 1016*


*"ஜும்ஆ நாளில் யார் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்கிறரோ அவர் நகரத்தின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்கிறார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் :முஆத் பின் அனஸ் (ரலி)*

*நூல் : திர்மிதீ - 474*


*"இமாம் உரை நிகழ்த்தும் போது (பேசிக் கொண்டிருப்பவரை நோக்கி) மௌனமாக இரு என்று ஒருவர் கூறினால் வீணான காரியத்தைச் செய்தவர் ஆவார்?" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : திர்மிதீ - 470


*"சூரியன் உதயமாகும் நாட்களில்  ஜும்ஆ நாள் மிகவும் சிறந்த நாளாகும்!

*அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள்.

*அந்நாளில் தான் அவர்கள் சொர்க்கத்தில் (தோட்டத்தில்) தங்க வைக்கப்பட்டார்கள்.

*யுக முடிவுநாளும் அந்நாளில் தான் ஏற்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : திர்மிதீ - 450*


*"யாா் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை  விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் :அபுல் ஜஃது (ரலி)*

*நூல் : திர்மிதீ - 460*


*"ஜும்ஆ தொழுகை ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரையில் நிகழும் பாவங்களுக்கு பரிகாரமாகும்! ஆனால் பெரும்பாவங்களாக அவை இருக்க கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : திர்மிதீ - 198*


ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்


காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.


அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)

நூல்: முஸ்லிம் 1442


ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்


ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள்.

1. பருவ வயதை அடையாதவர்கள்.

2. பெண்கள்.

3. நோயாளி

4. பயணி


‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: அபூதாவூத் 901


ஜுமுஆ பாங்கு


ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.


நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.


அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916


உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)


உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.


ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.


ஓத வேண்டிய சூராக்கள்


முஸ்லிம் 1451, 1452, 1453


ஜுமுஆவுடைய சுன்னத்


ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.


ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449


முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக ‘அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!’ என்று இடம் பெற்றுள்ளது.


நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462


‘உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் 1457


*வெள்ளிக்கிழமையன்று நான் நோன்பு நோற்றிருந்தபொழுது என்னிடம் வந்த நபி (ஸல்) அவர்கள் "நேற்று நீ நோன்பு நோற்றாயா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். "நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உனக்கு உள்ளதா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். "அப்படியானால் நோன்பை விட்டு விடு!" என்று கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : ஜுவைரிய்யா (ரலி)*

*நூல்:புகாரி-1986*


*"ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உள்ளது" என்று கூறிய நபி ஸல் அவா்கள் அந்த நேரம் மிகவும் குறைவானதே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ''அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுது, அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை!" என்றும் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)* 

*நூல் : புகாரி - 935*


*"ஜும்ஆ நாள் வந்துவிட்டால் பள்ளியின்  ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நின்றுகொண்டு முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : முஸ்லிம் - 1416*


*"குளித்து, ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருப்பவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : அவ்ஸ் (ரலி)* 

*நூல் : நஸயீ - 1381*


*மக்களுக்குத் தொழுகை நடத்த ஒரு மனிதரை ஏற்பாடு செய்துவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச்சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிடவேண்டும் என எண்ணியதுண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)*

*நூல் : முஸ்லிம் - 1156*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001