ரமளானுக்குப் பின்…..
وَّيَرْزُقْهُ
مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ
حَسْبُهٗ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ قَدْ جَعَلَ اللّٰهُ
لِكُلِّ شَىْءٍ قَدْرًا
மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். திண்ணமாக, அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான்.
(அல்குர்ஆன் : 65:3)
இப்னு ரஜப் அறிவிக்கிறார்கள்: கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள், “ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, ரமலான் முடிந்ததும் பாவமான கீழ்ப்படியாமைக்குத் திரும்புவேன் என்று தனக்குள் சொல்லிக் கொள்பவரின் நோன்பு நிராகரிக்கப்படுகிறது.”
*வயிறு காலியாக இருந்தபோது*
*பள்ளிவாசல் நிறைந்திருந்தது*
*இப்போது வயிறு நிறைந்துவிட்டது*
*பள்ளிவாசல் காலியாகிவிட்டது...*
*ரமலான் மட்டும் தான் முடிந்துள்ளது*
*அல்லாஹ்வின் கடமைகள் அல்ல*
*சரியாக தொழும் பாக்கியம் அல்லாஹ் நம்*
*அனைவருக்கும் தருவானாக ஆமீன்*
ரமளான் மாதம் நம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்லும் போது நமக்குக் கவலை ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் அருள் கடந்து செல்லும்போது, அல்லது எடுக்கப்படும்போது கவலை வரவேண்டும். ரமளான் சாதாரணமான மாதம் அல்ல. தொழுகையில் கவனமில்லாமல் இருந்த நம்மை ஜமாஅத்துடன் ஆர்வத்தோடு தொழ வைத்தது ரமளான். குர்ஆனுடனான நம் தொடர்பை அதிகப்படுத்தியது ரமளான். நம்மிடம் ஏராளமான மாற்றங்களைத் தந்தது, இன்னும் தந்துகொண்டிருக்கும் மாதம் ரமளான்.
ரமளானில் ஒரு மாதம் பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எனவே ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். ‘ரமளான் மாதத்தை ஒருவன் அடைந்து, அவனுடைய பாவம் எதுவும் மன்னிக்கப்படாவிட்டால், அவனுக்கு நாசம் உண்டாகட்டும்’ என்ற ஜிப்ரீல்(அலை) அவர்களின் துஆவிற்கு நபி(ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள். பாவத்திலிருந்து மீண்டவர்களாக, பாவமன்னிப்புப் பெற்றவர்களாக நாம் மாறவேண்டும்.
ரமலான் வந்தது வந்த வேகத்திலே வேகமாக சென்று விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அப்படியானால் இந்த ரமலான் என்னை எவ்வாறு பக்குவப்படுத்தியது. இந்த ரமலான் மூலமாக என்னை எவ்வாறு இறையச்சம் உடையோராக அமைத்துக் கொண்டேன்.என்பதை ஒரு தரம் திரும்பி பார்ப்பதே இதன் நோக்கமாகும்.
*அல்லாஹ் நம் மீது இந்த நோன்பை கடமையாக்கிய நோக்கம் இந்த நோன்பின் மூலமாக உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதேயாகும். இறையச்சம் என்பது நாம் அன்றாடம் செய்யும் நல்லமல்கள் மூலமாக தான் பெற்றுக் கொள்ள முடியும். நபியவர்கள் காட்டித் தந்த நல்லமல்களை சரியாக தொடராக செய்து வந்தால் இந்த இறையச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்*.
ரமழானுக்கு என்று தனிப்பட்ட விசேஷமான எந்த அமல்களும் கிடையாது. ரமலானுக்கு முன் பர்ளான தொழுகைகள், பர்ளுக்கு முன், பின் சுன்னத்துகள் இருந்தன ரமலானிலும் அவைகள் இருந்தன, ரமழானுக்கு முன் குர்ஆன் ஓதப்பட்டன, ரமழானிலும் குர்ஆன் ஓதப்பட்டன, ரமழான் அல்லாத காலத்திலும் இரவு தொழுகை தொழுப்பட்டன, ரமழானிலும் அவைகள் தொழப்பட்டன, இப்படி ரமழானுக்கு முன் இருந்த அமல்களை தான் நாம் தொடராக செய்து வந்தோம்.
ரமழானில் சொல்லப்பட்ட முழு பயனையும் அடைய வேண்டும் என்பதற்காக வழமையான அமல்களை சரியாக, தொடராக, நிறைவாக நேரத்திற்கு செய்யக் கூடிய நிலையை நாம் அமைத்துக் கொண்டோம். இந்த அமல்கள் மூலம் ரமழானில் இறை அன்பை பெறக் கூடிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் நமக்கு அருளினான். ரமழானில் நிறைவாக அமல்களை செய்ததின் காரணமாக பலவிதமான பரக்கத்தை அல்லாஹ் நமக்கு அருளியிருந்தான். இறையச்சம் உடையவர்களுக்கு அல்லாஹ் பல வழிகளில் ரிஸ்க்குகளை வழங்குகிறான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் மூலமாக நாம் அறியலாம்.
وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا
“எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்” அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் -திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். -65:03
இந்த வசனத்தின் மூலம் இறையச்சம் உடையோருக்கு தேவையான ரிஸ்கை வழங்குகிறான். அப்படியானால் அந்த இறையச்சத்துக்கான அடிப்படை அம்சம் நாம் தினமும் செய்யும் அமல்களாகும். அதனால் தான் ரமலானில் நாம் செய்த அமல்களுக்காக தொடரான அருள்வளத்தை அல்லாஹ் வழங்கினான்.
எனவே ரமழான் முடிந்தாலும் நாம் நமது அமல்கள் விசயத்தில் சரியானகவனம் செலுத்தினால் நிச்சயம் அல்லாஹ்வின் அருள் தொடராக நமக்கு கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பாக இரவு தொழுகை விசயத்தில் அதி முக்கியம் செலுத்துங்கள்.அந்த நேரத்தில் பரகத் பொருந்திய நமது ரப்பு அடிவானத்திற்கு இறங்கி வருகிறான். நம்மோடு பேசுகிறான். எனவே அந்த சந்தர்ப்பத்தை இழந்து விடாதீர்கள். ரமழானில் கடைசி இரவு எழுந்து பயிற்சி எடுத்தோம் அந்த பயிற்சியை நடைமுறைப்படுத்த தவறாதீர்கள்.
ரமழானில் அதிகமாக குர்ஆனை ஓதினோம். தொடராக நாளாந்தம் வீடுகளில் குர்ஆனை ஓதக் கூடிய வழமையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்கு தொடராக கிடைக்கும்.
ரமழானில் ஆண்கள் பர்ளான தொழுகைகளை உரிய நேரத்திற்கு பள்ளிக்கு போய் தொழக் கூடிய நிலையும், பெண்கள் வீட்டில் உரிய நேரத்தில் தொழக் கூடிய நிலையும் காணப்பட்டன. எனவே பர்ளான தொழுகைகளை ஆண்களும், பெண்களும் உரிய நேரத்தில் தொழக் கூடிய நிலையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அல்லாஹ்வுடைய அருள் தொடராக உங்களுக்கு கிடைக்கும்.
ரமழான் காலத்தில் பிறரின் குறைகளை துருவி, துருவி ஆராய்ந்து பார்க்காமல் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொண்டோம். இனி வரும் காலங்களிலும் அந்த நல்ல பழக்கத்தை தொடராக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ள முடியும்.
ரமழானில் பாவமான காரியங்களை விட்டும் ஓதுங்கி இருந்தோம். இனிவரும் காலங்களிலும் பாவங்களை விட்டு ஒதுங்கி இருந்து அல்லாஹ்வின் அருளை தொடராக பெற்றுக் கொள்வோம். ரமழானில் எல்லாருடனும் அன்பாக பழகினோம். இனி வரும் காலங்களிலும் பிறருடன் அன்பாக பழகி தொடராக அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழானில் ஏழைகளுக்கு அதிகமாக ஸதக்காகள் கொடுத்து வந்தோம். இனி வரும் காலங்களிலும் அந்த நல்ல பழக்கத்தை தொடராக செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழானில் பிறரை நோன்பு திறக்க வைக்கும் பணிகளில் ஈடுபடுத்தினோம். இனி வரும் காலங்களிலும் பிறரை பசியார வைத்து தொடராக அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழான் காலத்தில் வசதிபடைத்தவர்கள் தனது சொத்துகளுக்கு உரிய முறையில் ஸகாத்துகளை சரியாக கணக்கு பார்த்து கொடுத்தார்கள். அதே போல ஒவ்வொரு வருடமும் தனது ஸகாத்தை சரியாக கொடுத்து தொடராக அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழானில் ஒரு மாதம் காலம் நோன்பு பிடித்து பயிற்சி எடுத்தோம். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுன்னத்தான நோன்பை பிடித்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம். ரமழானில் காலை மாலை திக்ருகளை தொடராக நிறைவேற்றினோம். இனி வரும் காலங்களிலும் காலை மாலை திக்ருகளை நாளாந்தம் சொல்லி அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்வோம்.
ரமழானில் இப்படியான அமல்கள் மூலம் தான் பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் பலவிதமான அல்லாஹ்வின் அருளை நேரடியாக பெற்றுக் கொண்டோம். எங்களது இப்தார் உணவிலும், ஸஹர் உணவிலும் யாருக்கும் எந்த குறைபாடு இல்லாமல் திருப்பதியாக கிடைத்தது. மேலும் நேரத்தில் தாராளமாக பரகத் இருந்தது, மேலும் தொழிலில் எந்த சிரமும் யாருக்கும் இருக்கவில்லை. இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அல்லாஹ்வின் அருள் காணப்பட்டது என்றால், அது நாம் உரிய நேரத்தில் செய்த ஒவ்வொரு அமல்களுக்காக அல்லாஹ் தந்த பிரத்தியேகமான பரகத்தாகும்.
எனவே ரமழானில் எப்படி உரிய நேரத்தில் அமல்களை செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொண்டோமோ, அதே போல இனி வரும் காலங்களிலும் தொடராக உரிய நேரத்தில் அமல்களை செய்தால் நிச்சயம் அல்லாஹ்வின் அருள் தொடராக நமக்கு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்வோம்
ரமளானுக்காகவா? இறைவனுக்காகவா?
ரமளானீன் என்றால் ரமளான் மாதத்தில் மட்டும் அமல் செய்பவன் என்று பொருள். ரப்பானீன் என்றால் அல்லாஹ்வுக்காக ரமளான் மாதத்திலும், பிற மாதங் களிலும் அமல் செய்பவன் என்று பொருள். நம்மில் பலர் ரமளான் மாதத்தில் மட்டுமே நல்லறங்கள் செய்யும் சீசன் வணக்கசாலிகளாக இருக்கின்றார்கள். ரமளானில் நாம் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா என்று தெரிந்து கொள்வதற்கான ஒரு வழி, ரமளானுக்குப் பிறகும் அதே போன்ற ஆர்வத்தோடு அமல் செய்கிறோம் என்றால், நிச்சயமாக நம்முடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று அர்த்தம். குறைந்தபட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல், நம்முடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவில்லை என்று விட்டு விடக்கூடாது.
அல்லாஹ் ஒரு மனிதனுக்குச் சிறப்பானதை நாடுகின்றான் என்றால், ஒரு நற்செயலை அந்த மனிதன் செய்யும்போது, அல்லாஹ் அதைத் தொடர்ச்சியாகச் செய்ய வைக்கிறான். ஏனென்றால், நாம் செய்யும் நற்செயலை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அல்லாஹ் அதைக் காட்டுகின்றான். ரமளானுக்குப் பின்னும் இதே ஆர்வம் நம்மிடம் இருக்க வேண்டும். அதனால்தான், ரமளானுடைய தொடர்ச்சி விட்டுப் போகாமல் இருப்பதற்கு ஆறு நோன்புகளை வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இரண்டு நபர்கள் தண்ணீருக்கு அடியில் தஸ்பீஹ் செய்து இறைவனைத் துதிக்கின்றார்கள். வானவர்கள் ‘ஒரு குரல் ஏற்கனவே கேட்டதாகவும் மற்றொரு குரல் புதிதாக இருக்கிறது, அது முன்பு கேட்டதே இல்லை’ என்று கூறுகிறார்கள். யூனுஸ்(அலை) அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது தொடர்ச்சியாகத் துஆ செய்து கொண்டிருந்தார்கள். ‘இந்தக்குரல் தொடர்ச்சியாகக் கேட்ட குரலாக இருக்கிறது, எனவே இவரை வெளியேற்றி விடு’ என்று இறைவன் கூறினான். மற்றொரு குரலை இதுவரை கேட்டதே இல்லை, மேலும் அவன் தஸ்பீஹ் செய்வது இல்லை. இறைவனை நிராகரித்து அவனுக்கு மாறு செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்படும்போது இறைவனை அழைத்தான். ஆனால் இறுதி நேர இறைநம்பிக்கை பயனளிக்கவில்லை.
وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ
‘ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார் களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்! (பதில் கூறப்பட்டது:) இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய்’(திருக்குர்ஆன் 10:90,91)
நம்முடைய அமல்கள், திக்ருகள், துஆக்கள் நமக்குப் பலனளிக்க வேண்டும் என்றால், அவை அனைத்தையும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். ரமளானில் நற்செயல்கள் செய்கிறோம், ஆர்வமாக ஓதுகிறோம், துஆச் செய்கிறோம், அப்படியே மூட்டை கட்டி வைத்துவிடு கிறோம். அடுத்து ஆண்டு ரமளானுக்குத்தான் தூசி தட்டி புதுப்பிக்கிறோம். இவ்வாறு இருந்தால் ரமளானின் மூலம் நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மாற்றங்களைப் பெற முடியாது. மாற்றங்களைப் பெற்று ரமளானின் நோக்கத்தை அடைய வேண்டும் என்று சொன்னால் ரமளானுடன் நமது நற்செயல்களை முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து நல்லறங்கள் புரிய வேண்டும். பயிற்சி பழக்கமாக வேண்டும். அதுவே மாற்றத்திற்கான வழி.
3.குர்ஆனோடு தினமும் தொடர்பில் இருக்க வேண்டும்.🙇♂️
4.தான, தர்மங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும்.🫂
5.திக்ருகளை அதிகமதிகம் செய்ய வேண்டும்.☝🏻
6.வீண் தர்க்கம் மற்றும் வீண் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது.🗣️
7.பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாமல் மௌனம் காக்க வேண்டும்.👀
8.ஹராமான(face book & insta)காரியங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.🙅♂️
9.இஷாவுக்குப்பின் குறைந்தது வித்ரை மாத்திரமாவது தொழ வேண்டும்.🙂
கருத்துகள்
கருத்துரையிடுக