அல்லாஹ் போதுமானவன் . (வாழ்வில் முழு நம்பிக்கைக்கான அடிப்படை)
அல்லாஹ்
போதுமானவன் .
(வாழ்வில்
முழு நம்பிக்கைக்கான அடிப்படை)
அன்பிற்குரிய
சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரகாத்துஹு.
இந்த
முக்கியமான தலைப்பில் உங்கள் மத்தியில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்
தருகிறது. இன்று நாம் பேசப் போகும் தலைப்பு, வெறும் வார்த்தைகளல்ல, இது ஒரு முஸ்லிமின்
வாழ்க்கையின் மையப்புள்ளி.
நம்முடைய
ஈமான் (நம்பிக்கை),
தக்வா
(இறையச்சம்) மற்றும்
தவாக்குல் (இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தல்)
ஆகியவற்றின்
ஆணிவேர் "அல்லாஹ் போதுமானவன்" என்ற இந்த மகத்தான சிந்தனையில்தான் அடங்கியிருக்கிறது.
இந்தக் கொள்கை, நாம் உலக வாழ்வில்
சந்திக்கும் ஒவ்வொரு சிக்கலுக்கும், கவலைக்கும், பயத்திற்கும் ஒரு சரியான தீர்வைக்
கொடுக்கிறது. இது நமக்கு மன அமைதியையும், ஆற்றலையும், தைரியத்தையும் வழங்குகிறது. குர்ஆன் அடிப்படையிலான கருத்து: இந்த வசனம்
குர்ஆனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது, இது இறைநம்பிக்கையின் முக்கியத்துவத்தை
வலியுறுத்துகிறது.
நம்பிக்கை மற்றும்
பொறுப்பேற்பு:
வாழ்க்கையின்
அனைத்து சவால்களிலும் அல்லாஹ்வே போதுமானவன் என்ற நம்பிக்கை, மனிதர்கள் தங்கள்
முயற்சிகளைச் செய்துவிட்டு, இறுதிப் பொறுப்பை அல்லாஹ்விடம் ஒப்படைக்க வேண்டும்
என்பதை உணர்த்துகிறது.
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا
إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் முஃமின்களாக
இருந்தால் அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருங்கள். (அல்குர்ஆன் 5 : 23)
இதற்கு
இப்படி பொருள்எடுத்துக்கொள்ளக்கூடாது. அதாவது எதையும் நான் செய்யமாட்டேன். நான் அல்லாஹ்வை
மட்டுமே சார்ந்து இருப்பேன் என்றும், அல்லாஹ் நம் மீது கடமையாக்கிய அந்த காரணங்களை
கையாளாமல் தவறான முறையில் சார்ந்து இருப்பது அல்ல. நோயாளி மருந்தை உட்கொள்ளவேண்டும்.
ஷிஃபா அல்லாஹ்வைக் கொண்டு தான் என்று நம்ப வேண்டும். வியாபாரத்திற்கு செல்ல வேண்டும்.
அதற்கான ஹலாலான முயற்சி செய்ய வேண்டும். எனக்கு உணவளிப்பவன் அல்லாஹ். என்னுடைய அறிவால்,
திறமையால், நான் சம்பாதித்து விட முடியாது. அல்லாஹ் எனக்கு நாடினால் தவிர.
எதிர்மறை உணர்வுகளை
எதிர்கொள்ளுதல்: ஒரு மனிதன் மனச்சோர்வு அல்லது எதிர்மறை எண்ணங்களால்
பாதிக்கப்பட்டிருக்கும்போது, அல்லாஹ்வுடைய இந்த வார்த்தைகளை நினைத்து மன அமைதி
பெறலாம்.
வாழ்க்கைப்
போராட்டங்களை எதிர்கொள்ளுதல்:
வாழ்க்கையில்
எழும் கஷ்டமான சூழ்நிலைகளில் நம்பிக்கையின்றி தவிப்பவர்கள், அல்லாஹ்வுக்கே
முழுமையான பொறுப்பை ஒப்படைத்து, அவனின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்படலாம்.
இன்று பெரும்பாலும் நாம் நம்மை
சார்ந்து இருக்கிறோம். நம்முடைய திறமை மீதும், அறிவின் மீதும், அனுபவத்தின் மீதும்,
இப்படியாக நம்மை சார்ந்து நமது கையில் உள்ளதை சார்ந்து இருக்கிறோம். அல்லாஹ் நம்மை
பாதுகாக்க வேண்டும்.
நம்முடைய பல குழப்பங்களுக்கு, நம்முடைய மன உளைச்சலுக்கு,
நம்முடைய தடுமாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக அறிஞர்கள் இதை கூறுகிறார்கள்.
நம்மில் பலர் எப்போதும் நமது கையில் இருக்கும் செல்வம்
குறைந்து விடுமோ, வியாபாரம் நலிந்து விடுமோ, நம்மை விட்டு பிரிந்து விடுமோ, என்று தடுமாறி
குழம்பி பல மன உளைச்சல்களுக்கு ஆளாகி விடுவதைப் பார்க்கிறோம்.
யார் அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருக்கிறாரோ
எல்லா நிலைமையிலும் அவர் அமைதியாக இருப்பார். அவரது உள்ளம் அமைதியாக இருக்கும். தவக்குலுடைய
மிகப்பெரிய நற்பாக்கியம் என்னவென்றால் அவருடைய உள்ளம் அமைதியாகி விடும். அவரது உள்ளத்திலே
அல்லாஹு தஆலா அப்பேற்பட்ட நிம்மதியை கொடுப்பான்
1. அல்லாஹ் போதுமானவன் -
திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில்
இந்த உண்மையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அல்லாஹ் (சுபஹானஹு வதஆலா) தனது தூதர்களுக்கு
இந்த உண்மையை உணர்த்தியதன் மூலம், மனிதகுலத்திற்குப் படிப்பினையை வழங்குகிறான்.
اَلَيْسَ
اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ وَيُخَوِّفُوْنَكَ
بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ وَمَنْ يُّضْلِلِ
اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ
(நபியே!) அல்லாஹ் தன் அடியானுக்குப்
போதுமானவனில்லையா, என்ன? இவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறார்கள்.
உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர்
எவருமிலர். (அல்குர்ஆன் : 39:36)
"அடியானுக்கு அல்லாஹ்
போதுமானவன் அல்லவா?"
இந்த வசனம் ஒரு கேள்வியாக இருந்தாலும்,
அதன் ஆழம் மிகப் பெரியது. நீ ஒரு மலை போன்ற துன்பத்தில் இருந்தாலும், ஒரு பெரும் சோதனை
உன்னைச் சூழ்ந்திருந்தாலும், அல்லாஹ் உனக்குப் போதுமானவன். அவனது உதவி போதுமானதாக இருக்கும்போது,
உலகத்தாரின் உதவியோ, செல்வமோ, அதிகாரமோ எதற்கு? இந்த வசனம் இறை நம்பிக்கையாளனுக்கு
நிம்மதியையும், நம்பிக்கையும் ஊட்டுகிறது.
அல்லாஹ்வின்
துணை
ஒருவர்
முழுமையாக அல்லாஹ்வை நம்பி, அவனிடம் சரணடையும்போது, அவர் எந்தப் பயமும் இன்றி
வாழலாம். அல்லாஹ் தன் அடியார்களின் பாதுகாவலன். அவர்களின் தேவைகள், துன்பங்கள்,
மற்றும் அச்சங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு அவன் போதுமானவன். திருக்குர்ஆனில்
அல்லாஹ்,
حَقًّا عَلَيْنَا
نُـنْجِ الْمُؤْمِنِيْنَ
"முஃமின்களைக்
காப்பாற்றுவது நம்மீது கடமையாகும்" (10:103) என்று கூறுகிறான். இது அவன் தனக்குத்தானே
விதித்துக் கொண்ட ஒரு மகத்தான பொறுப்பு. நாம் அவனிடத்தில் நம்பிக்கை வைக்கும்போது,
அவன் நமக்கு மறைமுகமாக உதவி செய்து நம்மைப் பாதுகாப்பான்.
இப்ராஹீம்
(அலை) மற்றும் சஹாபாக்களின் உதாரணம்
இந்த
நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் இப்ராஹீம் (அலை) அவர்கள். நெருப்புக் குண்டத்தில்
வீசப்பட்டபோது, அவர்கள் "ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்" (அல்லாஹ்
எங்களுக்குப் போதுமானவன்; அவன் மிகச் சிறந்த பொறுப்பாளன்) என்று கூறினார்கள். இதன்
விளைவாக, அந்த நெருப்பு அவர்களுக்குக் குளிராகவும், சாந்தமாகவும் மாறியது. இது
அல்லாஹ்வின் துணை எத்தகையது என்பதற்கான ஒரு நேரடி அத்தாட்சி.
اَلَّذِيْنَ
قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْ لَـكُمْ
فَاخْشَوْهُمْ
فَزَادَهُمْ اِيْمَانًا وَّقَالُوْا حَسْبُنَا
اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள்
(பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள்
அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது.
அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 3:173)
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் உஹது போருக்கு பிறகு
எதிரிகளெல்லாம் அவர்களை சூழ்ந்துகொண்டு தாக்க வருகிறார்கள் என்று அச்சுறுத்தப்பட்டார்கள்.
அந்த நேரத்தில் அந்த சஹாபாக்கள் கூறினார்கள்.
وَقَالُوا
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
"அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த
பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள்.
(அல்குர்ஆன் 3 : 173)
அல்லாஹ்வை முழுமையாக சார்ந்து விட்டார்கள். எந்த
எதிரிகள் பெரும் கூட்டமாக திரண்டு உஹதிலே காயப்பட்ட, பலவீனப்பட்ட அந்த சஹாபாக்களை அடுத்து
முற்றிலும் வேரோடு அழித்து விடுவோம் என்று அவர்கள் மீண்டும் மக்காவிற்கு சென்ற வழியில்
இருந்து திரும்ப வந்தார்களோ, ஹம்ராவுல் அஸது என்ற இடத்தை அடைகிறார்கள். சஹாபாக்கள்
உடைய இந்த கூற்று.
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்.
அல்லாஹ் எங்களை பாதுகாப்பதில் பொறுப்பு ஏற்பதில் மிகச் சிறந்தவன் என்று அல்லாஹ்வின்
மீது தவக்குல் வைத்து அவர்கள் புறப்படுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! சஹாபாக்களோ ஏற்கனவே பாதிக்கப்பட்டு,
காயப்பட்டு, போர் செய்வதற்கான எந்த ஒரு தயாரிப்பான நிலையில் இருக்கவில்லை. ஆனால் அல்லாஹ்வின்
கட்டளைக்கு இணங்க அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் ஆதரவு வைத்தார்கள். தவக்குல் இருந்தது.
அல்லாஹு தஆலா மறைவிலிருந்து உதவி செய்தான்.
இங்கு, மரணம் கண்ணுக்கு முன்னால்
தெரிந்தாலும், அவர்களின் ஈமான் அசைந்து கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தேவைப்பட்டது
உலக பலமல்ல, இறைவனின் பலம் மட்டுமே. இவர்களது இந்த ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவே,
அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிந்து அவர்களைக் காப்பாற்றினான்.
2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
வாழ்வில் ஒரு உதாரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் இந்த நம்பிக்கையை நமக்குத் தெளிவாகப்
புரியவைக்கின்றன.
* மக்கா வாழ்க்கையின் துன்பங்கள்:
மக்காவில் இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டவர்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் பல துன்பங்களைச்
சந்தித்தார்கள். ஒரு கட்டத்தில் மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, பொருளாதாரத்
தடையும் விதிக்கப்பட்டது. அந்தச் சூழலில், அவர்களுக்குத் துணையாக இருந்தது அல்லாஹ்
மட்டுமே. மக்கா வாசிகள் அவரைப் புறக்கணித்தபோதும், அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் வலுப்படுத்தினான்.
இது "அல் வக்கீல்" (பொறுப்பேற்பவன்) என்ற அல்லாஹ்வின் திருப்பெயரின் வெளிப்பாடு.
* ஹிஜ்ரத்தின்போது குகையில்:
மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களும்,
அபூபக்கர் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்தபோது, எதிரிகள் அவர்களைத் தேடி வந்தனர். அவர்கள்
இருவரும் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது, எதிரிகள் குகையின் வாயில் வரை வந்துவிட்டனர்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் பயந்து, "யா ரஸூலல்லாஹ்! எதிரிகள் நம்மைப் பார்த்துவிட்டால்
என்ன ஆகும்?" என்று கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் அமைதியான குரலில், "கவலைப்படாதீர்கள்
அபூபக்கரே! மூன்றாமவராக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த வார்த்தைகள், இறைவனிடமிருந்து வந்த நேரடியான
நம்பிக்கையின் வெளிப்பாடு.
எதிரிகள் குகையின் வாயிலில்
இருந்தும், அல்லாஹ்வே போதுமானவன் என்ற நம்பிக்கையால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
ü நமது
அன்றாட வாழ்வில் இந்த நம்பிக்கையை எப்படிப் பயன்படுத்துவது?
ரப்புல் ஆலமீன் கூறுகிறான்,
إِنَّ
اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்)
பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 159)
யார் அல்லாஹ்வைச் சார்ந்து
விட்டார்களோ, தங்களது காரியங்களை அல்லாஹ்விடத்தில் ஒப்படைத்து விட்டார்களோ, முயற்சிகளை
செய்வார்கள். ஆனால் ஒரு துளி கூட என்னுடைய முயற்சியால் நடந்தது என்று நம்ப மாட்டார்கள்.
முயற்சி நூற்றுக்கு நூறு செய்வார்கள். அதில் எந்த குறையும் செய்ய மாட்டார்கள். அவர்களது
அறிவு, அனுபவம் திறமை அனைத்தையும் செலவழிப்பார்கள். ஆனால் அவர்களது நம்பிக்கை அல்லாஹ்வை
மட்டுமே சார்ந்திருக்கும்.
இன்று நம்முடைய பலவீனம் எப்படி தெரியுமா? ஒரு காரியம்
நடக்கவில்லை என்றால் நான் அதை செய்தால் நடந்திருக்கும். நான் அதை மட்டும் விட்டு விட்டேன்.
நடக்காமல் போய்விட்டது என்றும், ஒரு காரியம் நடந்து விட்டது என்றால் எல்லாத்தையும்
சரியாக செய்தேன் நடந்து விட்டது என்பார்கள்.
இதற்கு என்ன பொருள்? நமக்கு தவக்குல் இல்லை என்று
பொருள். நம்மிடத்தில் தவக்குல் இருக்குமேயானால் கிடைக்காத போதும், அல்லாஹ் நாடவில்லை
எனக்கு கிடைக்கவில்லை என்றும், முயற்சிகள் எல்லாம் முழுமையாக இருந்தும் அல்லாஹ் நாடவில்லை
எனக்கு கிடைக்கவில்லை. முயற்சிகள் அனைத்தும் இருந்தன கிடைத்தன. ஆனால் என்னுடைய முயற்சியால் கிடைக்கவில்லை.
அல்லாஹ் நாடினான் கிடைத்தது என்பார்கள்.
அல்லாஹுவே போதுமானவன் என்ற உறுதியான நம்பிக்கை, ஒரு
தனிநபரின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
அல்லாஹ்
போதுமானவன்” என்ற சொற்றொடரை அடிக்கடி நம்மவர்கள் பயன்படுத்துவதை நாம்
செவியுறுகிறோம். அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற தர்ஹாக்களில் தவம்
கிடப்பதைக் காணும் போது, “அல்லாஹ் இவர்களுக்குப் போதவில்லை” என்றுதான் கருத
வேண்டியுள்ளது. ஏதோ சம்பிரதாயத்திற்காக இந்த சொற்றொடரைப் பயன்
படுத்துகிறார்களேயன்றி அதன் பொருளை அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
திருக்குர்ஆனின் போதனைகளை அவர்கள் உணர்ந்திரந்தால் இந்த நிலைமைக்குத்
தங்களை ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். ‘அல்லாஹ் போதுமானவன் அல்ல’ என்ற நம்பிக்கையில்
வாழ்பவர்களைப் பற்றித் திருக்குர்ஆனின் சில வசனங்களைப் பார்ப்போம்!
قُلْ اَ
تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا
ؕ وَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
“அல்லாஹ்வை விடுத்து, உங்களுக்கு எந்த நன்மையோ தீமையோ செய்ய இயலாதவர்களை
நீங்கள் வணங்குகிறீர்களா? (அல்குர்ஆன் 5:76)
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ
لَا يَضُرُّكَۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ
உமக்கு எவ்வித நன்மையையும், தீமையையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ்
அல்லாதவர்களை நீர் பிரார்த்திக்கக் கூடாது! நீர் அவ்வாறு செய்தால், அப்போது
அக்கிரமக்காரர்களில் ஒருவராக நீர் ஆகி விடூவீர்! (அல்குர்ஆன் 10:106)
قُلْ
فَمَنْ يَّمْلِكُ لَـكُمْ مِّنَ اللّٰهِ شَيْـٴًــــا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ
اَرَادَ بِكُمْ نَفْعًا
“அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீமை செய்ய நாடினாலும் அல்லது, அவன் உங்களுக்கு
யாதொரு நன்மை செய்ய நாடினாலும் (அதில்) எதையும் உங்களுக்கு தடுத்து நிறுத்துபவன்
யார்?”
(அல்குர்ஆன் 48:11)
قُلْ اِنِّىْ
لَاۤ اَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا
“உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய நிச்சயமாக நான் ஒரு சிறிதும்
சக்தியற்றவன்” என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
قُلْ اِنِّىْ
لَنْ يُّجِيْرَنِىْ مِنَ اللّٰهِ اَحَدٌ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا
ۙ
“நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை இரட்சித்துக் கொள்ள
மாட்டான். அவனையன்றி அண்டும் இடத்தை நான் பெற முடியாது” (என்று) நபியே! கூறுவீராக!
(அல்குர்ஆன் 72:22)
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ
لَهٗۤ اِلَّا هُوَؕ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால் அதனை நீக்குவோர், அவனையன்றி
வேறெவருமில்லை. (அவ்வாறே) உமக்கு யாதொரு நன்மை நேரிடினும் (அதைத் தடுத்துவிடக்
கூடியவன் எவனுமில்லை) (அல்குர்ஆன் 6:17)
قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ
الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا
يُوْحٰٓى اِلَىَّ ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ؕ اَفَلَا
تَتَفَكَّرُوْنَ
6:50. (நபியே!) நீர்
கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின்
பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று
நான் உங்களிடம் கூறவில்லை.
மறைவானவற்றை நான்
அறியமாட்டேன்; நிச்சயமாக நான்
ஒரு மலக்காக
இருக்கின்றேன் என்றும்
நான் உங்களிடம் சொல்லவில்லை;
எனக்கு (வஹீயாக)
அறிவிக்கப்பட்டதைத் தவிர
(வேறு எதையும்)
நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர்
கூறும்: “குருடனும் பார்வையுடையவனும்
சமமாவாரா? நீங்கள்
சிந்திக்க வேண்டாமா?
“அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன; என்று நான் கூற மாட்டேன்.
மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். “நிச்சயமாக நான் ஒரு மலக்கு” என்று உங்களிடம்
நான் சொல்லவும் மாட்டேன்” என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 6:50)
"அல்லாஹ் போதுமானவன்"
என்ற கொள்கை வெறுமனே பிரார்த்தனையில் மட்டும் இருக்க வேண்டிய ஒன்றல்ல, அது நமது ஒவ்வொரு
செயலிலும், எண்ணத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.
* வருமானம் மற்றும் பொருளாதாரக் கவலைகள்:
வாழ்க்கை செலவுகள், கடன், வேலை இழப்பு போன்ற பயங்கள்
நம்மைச் சூழ்ந்துள்ளபோது, நமது மனதை அமைதிப்படுத்த ஒரே வழி, அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களுக்கும்
"அர்-ரஸ்ஸாக்" (வழங்குபவன்) என்ற உறுதியான நம்பிக்கை. நாம் நமது முயற்சிகளைச்
செய்வோம், ஆனால் அதன் விளைவை அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்.
* உடல்நலக் குறைவு மற்றும் நோய்கள்:
நோய் ஏற்படும்போது, முதலில் மருத்துவரை அணுகுவது
நமது கடமை. ஆனால், அந்த மருத்துவரிடம் நோய் குணமடைவதற்கான சக்தி இருக்கிறதா? இல்லவே
இல்லை. அவனுக்கு அந்த சக்தியைக் கொடுத்தவன் அல்லாஹ் மட்டுமே. இப்ராஹிம் (அலை) கூறியதுபோல,
"நான் நோயுற்றால், அவனே
என்னைக் குணப்படுத்துகிறான்" (26:80). இந்த நம்பிக்கையுடன்
சிகிச்சை பெறும்போது, நம் மனது அமைதியடையும்.
* தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள்:
ஒருவர் நம்மை ஏமாற்றும்போது, நமக்குத் துரோகம்
செய்யும்போது, நமது மனது நொறுங்கிவிடுகிறது. அப்போது நாம் இறைவனிடம் நமது தேவைகளை முறையிட
வேண்டும். மக்கள் நமக்குத் துரோகம் செய்தாலும், அல்லாஹ் ஒருபோதும் நம்மை ஏமாற்றுவதில்லை.
وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ
ؕ
எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ,
அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன்
v எப்படி இந்த நம்பிக்கையை வளர்ப்பது?
இந்த நம்பிக்கையை வெறும் சொற்களாக
இல்லாமல், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலக்கச் செய்ய நாம் சில காரியங்களைச்
செய்ய வேண்டும்.
* தவாக்குல் (Tawakkul) பயிற்சி:
தவாக்குல் என்பது சோம்பேறித்தனமல்ல. ஒரு மாணவன்
பரீட்சைக்காக முழுமையாகப் படித்துவிட்டு, அதன் பிறகு அதன் வெற்றியை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது
தவாக்குல்.
ஒரு விவசாயி நிலத்தை உழுது, விதைத்து, அதன் பிறகு
மழைக்கான உதவியை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பது தவாக்குல்.
நமது கடமைகளைச் செய்துவிட்டு, அதன் விளைவை அல்லாஹ்விடம்
ஒப்படைப்பதே தவக்குல்.
இந்தத் தவக்குலுடைய நன்மைகளை,
நாளை மறுமையில் சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு கூட்டம் என்று 70 ஆயிரம் மக்களை நாளை
மறுமையில் ரப்புல் ஆலமீன் எந்த விதமான கேள்வி கணக்கும் இன்றி அனுப்புவான். அவர்களுக்கு
எந்த சிரமமும் அங்கே இருக்காது. அவர்கள் யார் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்;
هُمُ
الَّذِينَ لاَ يَتَطَيَّرُونَ، وَلاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَكْتَوُون، وَعَلَى رَبِّهِمْ
يَتَوَكَّلُونَ
அவர்கள் தங்களுடைய ரப்பின்
மீது முழுமையாக சார்ந்திருப்பார்கள். எல்லா காரியங்களிலும் அவனையே அவர்கள் நம்பி இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்:
புகாரி, எண்: 5752
தவக்குல் (அல்லாஹ்வின் மீது
நம்பிக்கை வைத்தல்) பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முக்கியமான இரண்டு
ஹதீஸ்கள்:
'தவக்குல்' என்பது ஒரு முஸ்லிமின்
வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். இது, உலகக் காரியங்களுக்காக ஒருவர் தமது முயற்சிகளை
மேற்கொண்ட பிறகு, அவற்றின் இறுதி முடிவை அல்லாஹ்விடம் முழுமையாக ஒப்படைத்து, அவனது
ஏற்பாட்டின் மீது திருப்தியடைவதைக் குறிக்கிறது.
1. பறவைகளைப் பற்றிய ஹதீஸ்
(உணவளித்தல்)
உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு
அன்ஹு) அறிவிக்கிறார்கள்:
"நீங்கள் அல்லாஹ்வை, அவனுக்குச்
சேர வேண்டியவாறு தவக்குல் (முழு நம்பிக்கை) வைத்தால், அவன் பறவைகளுக்கு உணவளிப்பதைப்
போல உங்களுக்கும் உணவளிப்பான். அவை காலையில் பசியுடன் வெளியே சென்று மாலையில் வயிறு
நிரம்பித் திரும்புகின்றன."
(ஆதாரம்: ஸுனன் அத்திர்மிதி,
இப்னு மாஜா)
விளக்கம்:
இந்த ஹதீஸ், சும்மா உட்கார்ந்து
எதுவும் செய்யாமல் இருப்பதை ஊக்கப்படுத்தவில்லை. மாறாக, பறவைகள் காலையில் வெளியே செல்கின்றன
(அதாவது முயற்சி செய்கின்றன), ஆனால் அவற்றின் உணவு கிடைக்குமா என்று கவலைப்படுவதில்லை.
அதுபோல, மனிதனும் தன் முயற்சியைச் செய்துவிட்டு, தனது வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல்,
அல்லாஹ்வின் ஏற்பாட்டின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
2. ஒட்டகத்தைக் கட்டுவதைப்
பற்றிய ஹதீஸ் (முயற்சியும் நம்பிக்கையும்)
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு
அன்ஹு) அறிவிக்கிறார்கள்:
ஒரு கிராமவாசி நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனது ஒட்டகத்தைக் கட்டாமல் விட்டுவிட்டு
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா (தவக்குல் வைப்பதா)? அல்லது கட்டிவிட்டு நம்பிக்கை
வைப்பதா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள், "அதனைக் கட்டு! அதன் பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை!"
என்று கூறினார்கள்.(ஆதாரம்: ஸுனன் அத்திர்மிதி)
விளக்கம்:
இதுவே தவக்குலின் சரியான வழிமுறையை
விளக்குகிறது. முயற்சிப்பது (ஒட்டகத்தைக் கட்டுவது) என்பது மனிதனின் கடமை. அந்த முயற்சிக்குப்
பிறகு கிடைக்கும் பலனை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது (தவக்குல் வைப்பது) என்பது இறை நம்பிக்கையின்
கடமை. அதாவது, தவக்குல் என்பது சோம்பேறித்தனமல்ல; அது முயற்சிக்குப் பின் வரும்
மன அமைதி.
சுருங்கச்
சொன்னால், தவக்குல் என்பது: உன் கைகள் வேலை செய்யட்டும், ஆனால் உன் இதயம் அல்லாஹ்வைச்
சார்ந்திருக்கட்டும்.
v பிரார்த்தனையில்
ஆழம்:
ஹஸ்புனல்லாஹு
வ நி மல் வக்கீல் என்பது பல முஸ்லிம்கள் அல்லாஹ்விடமிருந்து உதவி
மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் போதெல்லாம் ஓதும் ஒரு சக்திவாய்ந்த மற்றும்
ஆறுதலான துஆ (பிரார்த்தனை) ஆகும்.
நாம் நமது ஒவ்வொரு தேவையையும், கவலையையும் அல்லாஹ்விடம்
முறையிட வேண்டும். காலையில் எழும்புவது முதல் இரவில் உறங்குவது வரை நமது அனைத்து செயல்களிலும்
அவனது உதவியை நாட வேண்டும்.
v அல்லாஹ்வின்
திருப்பெயர்களை அறிதல்:
அல்லாஹ்வின் பண்புகளை நாம் அறியும்போது, அவனது
ஆற்றல், ஞானம், இரக்கம், வல்லமை ஆகியவற்றை நாம் உணர்கிறோம். "அல்-கவி" (வலிமையுள்ளவன்),
"அல்-காதீர்" (ஆற்றல் மிக்கவன்), "அர்-ரஹீம்" (அளவற்ற அன்புடையோன்)
போன்ற பெயர்களை நாம் அறியும்போது, அவனது உதவி போதுமானதாக இருக்கும் என்பதில் நமக்கு
நம்பிக்கை அதிகரிக்கும்.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே,
"அல்லாஹ் போதுமானவன்"
என்ற இந்த மகத்தான கொள்கை ஒரு முஸ்லிமின் வாழ்வின் மிகச் சிறந்த பொக்கிஷம். இது உலகப்
பிரச்சனைகள், தனிப்பட்ட கவலைகள், எதிர்கால அச்சம் என அனைத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறது.
இந்த நம்பிக்கையுடன் வாழ்வோம்.
நமது எல்லாப் பொறுப்புகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து, நமது முயற்சிகளில் முன்னேறுவோம்.
இந்த நம்பிக்கை நமது வாழ்க்கையில் அமைதியையும், பாதுகாப்பையும், வெற்றிகளையும் கொண்டுவரும்.
ü அன்றாட வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள சில வழிகள் பின்வருமாறு:
கூடுதல் பலம் மற்றும் அமைதிக்காக ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப்
பிறகும் ஓதுங்கள் .
துன்பம் அல்லது பதட்டமான சூழ்நிலைகளில் எப்போது
வேண்டுமானாலும், உங்களுக்குத் தேவையான பல முறை
சொல்லுங்கள். நீங்கள் கவலையாகவோ, பதட்டமாகவோ அல்லது அதிகமாகவோ உணர்ந்தால் இந்த துஆ
மிகவும் அமைதியைத் தரும்.
ü இஸ்லாத்தில் இது ஏன் மிகவும் விரும்பப்படும் பிரார்த்தனையாக இருக்கிறது
என்பதற்கான காரணம் :
தவக்குலை அதிகரிக்கிறது: இதைச் சொல்வதன் மூலம், நாம் சரணடைந்து அல்லாஹ் உடைய திட்டம் மற்றும் ஞானத்தைச்சார்ந்துஇருக்கிறோம்,இது,குறிப்பாககடினமான
காலங்களில் நமது ஈமானை மேம்படுத்துகிறது.
மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது: அல்லாஹ் நம் விஷயங்களைக் கவனித்துக்கொள்கிறான் என்பதை அறிவதில் ஒரு
அமைதியான விளைவு இருக்கிறது, இது பயங்கள் மற்றும் கவலைகளைக் கடக்க உதவுகிறது.
தீமைகளைத் தடுத்தல்: இந்த துஆ அல்லாஹ்வின் மகத்துவத்தையும், அவன் நம்மை எவ்வாறு
பாதுகாக்கிறான் என்பதையும் நினைவூட்டுவதாகும். நாம் அவனை நம்பும்போது, அவனுடைய
அருளைத் தேடுகிறோம், ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்கிறோம்.
நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் அதிகரிக்கிறது: இந்த துஆவை உச்சரிப்பது பொறுமையாக இருக்கவும், அவனுடைய அருளைடோடு
இணைந்து பலத்தை அளிக்கவும் நமக்கு உதவுகிறது.
நிலைத்தன்மையையும் தெளிவையும் தருகிறது: இந்த வேண்டுகோள் நம்மை மீண்டும் சமநிலைப்படுத்துகிறது மற்றும் எதிர்பார்ப்புகளின் ஆசையைகுறைக்கிறது: அல்லாஹ்வின் பாதுகாப்பின் திறனை நம்புவது போதுமானது.
காலை மற்றும் மாலை வழக்கம் : இந்த துஆவுடன் உங்கள் நாளைத் தொடங்கவும். இது உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ்வின் முன்னால் உங்களை நிலைநிறுத்தி கவனம் செலுத்த உதவும்.
முக்கியமான பணிகளுக்கு முன் : ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது, ஒரு முக்கியமான அடியை
எடுக்கும்போது அல்லது எந்தவொரு பெரிய பணியையும் தொடங்கும்போது, அல்லாஹ்வின்
உதவியையும் பெற அதை ஓதுங்கள்.
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நம்
அனைவரையும் அவனது பாதுகாப்பில் வைத்திருக்கவும், அவனது மீது முழு நம்பிக்கை வைத்து
வாழவும் நமக்கு அருள் செய்வானாக.
கருத்துகள்
கருத்துரையிடுக