இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறைவழியில் செலவு செய்தல்

இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நிரந்தரமில்லை, ஏனெனில் இது அழிந்துவிடக் கூடியது.        அல்லாஹ் சொல்கிறான்:  "நன்கு அறிந்து கொள்ளுங்கள்: இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்களிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முற்படுதலுமேயன்றி வேறில்லை. அதற்கான உவமை: மழை பொழிந்திடும் போது அதன் மூலம் விளைகின்ற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைவது போன்றதாகும். பின்னர், அதே பயிர் காய்ந்துவிடுகின்றது. அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர் பதராகி விடுவதையும் நீர் பார்க்கலாம். (இதற்கு மாறாக) மறுமை எத்தகைய இடமெனில், அங்கு கடும் தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் இருக்கின்றன. ஆனால், உலக வாழ்க்கை ஓர் ஏமாற்றுச் சாதனமே தவிர வேறெதுவுமில்லை"  (57:20) எனவே மறுமை வாழ்க்கைதான் நிரந்தரமானது. இவ்வுலகில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் வசதி ஒரு அமானிதாகும். அதை நாம் சரிவர பயன்படுத்தவேண்டும். ஏனெனில் அதைப் பற்றிய கேள்விகள் மறுமையில் கேட்கப...