மார்க்கத்தை கற்க வெட்கப்படாதீர்கள்!தாய்மார்களே!
வெட்கப்படுபவனும், பெருமை கொள்பவனும் ஒருபோதும் கல்வியை கற்றுக் கொள்ள மாட்டான்! (ஹதீஸ்) பெண்களில் சிறந்தவர்கள் அன்ஸாரி (மதீனாவாசிகளான) பெண்கள். அவர்கள் மார்க்கத்தை விளங்கிக்கொள்வதற்கு வெட்கப்பட்டதே கிடையாது” என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்) அன்றைய பெண்கள், மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அதை விளங்குவதற்கு முயற்சித்தார்கள். நாம் செய்யும் கடமைகளில் அமல்களில் ஏதும் தவறுகள் ஏற்பட்டுவிடுமோ எனப்பயந்து சொல்வதற்கு வெட்கப்படும் விடயங்களிலும் கூட மார்க்கம் என்ற ஒரே காரணத்தால் வெட்கத்தை ஒரு புறம் தள்ளி விட்டு மார்க்கச் சட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு முனைந்தார்கள். அன்ஸாரிய ஸஹாபிப் பெண்மணிகள் வாழ்க்கை வரலாற்றை தெளிவுபடுத்துவதற்கு இரு சம்பவங்களை முன் வைக்கின்றேன். அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வருகை தந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹுதஆலா உண்மையைக் கூறுவதற்கு வெட்கிக்கமாட்டான் எனச் சொல்லிவிட்டு ஒரு பெண் கனவில் இஸ்க...