இஸ்லாம் கூறும் வியாபாரம்
மேலும் அலாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியத் தடை செய்துள்ளான்." ( 2: 275 ) "உழைப்பில் சிறந்தது கைத்தொழிலும், நேர்மையான வியாபாரமுமாகும்." (அஹ்மத்) இஸ்லாமிய சட்டமென்பது, இபாதாத், முஆமலாத், ஜினாயாத், ஹுதூத் முதலாம் மனித் வாழ்வின் சகல துறை சார்ந்த நடவடிக்கைகளையும் விளக்குகின்றது. இபாதாத் தனி மனிதனோடு தொடர்புள்ளதாகவும் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் அவனோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால் முஆமலாத் எனும் வார்த்தையால் குறிக்கப்படும் கொடுக்கல்-வாங்கல், தொழில்சார் நடவ்டிக்கைகளைப் பொறுத்தவரையில், அவை தனிமனிதனுடன் மாத்திரமன்றி அவன் வாழும் சமூகத்துடனும் தொடர்புடையதாக இருக்கின்றன. இந்தவகையில் முஆமலாத் பற்றிய விளக்கம் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்திலுள்ள வாணிபச் சட்டங்களை அறியாது வியாபாரத்தில் ஈடுபடுவது ஆபத்தானதாகும். உமர் (ரழி) அவர்கள் சில வேளைகளில் சந்தைக்கு வருகை தந்து தனது சாட்டையினால் சில வியாபாரிகளை அடித்து கீழ் வருமாறு கூறுவாகள். "வர்த்தகச் சட்டங்களைப் பற்றிய விளக்கம் உள்ளவரைத் தவிர...