இஸ்லாமிய பார்வையில் நீதிபதிகள்
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ
وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ ؕ اِنْ
يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا فَلَا تَتَّبِعُوا
الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ
كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்:4:135)
இஸ்லாம், ஆன்மீகத்தை மட்டும் போதித்து விட்டுச் சென்று விடாமல், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் சட்டமாகச் சொல்லி விட்டுப் போகாமல் மக்களை வழிநடத்துகின்ற, மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமான முறையில் வழிகாட்டுகின்றது.
நீதிபதிகள் என்றால் யார்? நீதிபதிகள் கடமைகள் என்ன? நீதிபதிகள் தகுதி என்ன? நீதிபதிகள் செய்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் என்ன? நீதிபதிகள் மக்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
நீதி ப்பொறுப்பை சரிவர நிறைவேற்றாத நீதிபதிகள் நிலை என்ன? என்று சொல்லி நாம் என்னென்ன அளவுகோலைத் தீர்மானித்து வைத்திருக்கின்றோமோ, கேள்விக்கணைகளைத் தொடுத்து வைத்திருக்கின்றோமோ அவை அத்தனைக்கும் தெளிவான, அற்புதமான பதிலைத் தருகின்றது
இன்று பரவலாக பேசப்படும் செய்திகளில் ஒன்றுதான்
''நீதி'' அந்த நீதி இந்தியாவில் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் . பணக்காரர்களுக்கு ஒரு நீதி! நடுத்தரவாதிகளுக்கு ஒரு நீதி! ஏழைகளுக்கு ஒரு நீதி! முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் இந்தியாவில் அநீதிகள் தான் இழைக்கப்பட்டு வருகிறது. அப்பாவி முஸ்லிம்களை காவல்துரைகள் பிடித்துக் கொண்டு போய் , அவர்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள் அல்லது அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். இதுதான் இப்பொழுது நடந்துக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் செத்துவிட்ட நீதியை யார் உயிர்ப்பிப்பது ..?
இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் சட்டம் வந்தால் நிச்சயமாக இந்தியாவில் நீதி மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதில் ஒரு துளிக் கூட ஐயம் இல்லை.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவுக் கொண்டாட்டத்தில் நாடு மூழ்கியிருந்த போது, பாலியல் குற்றவாளிகளையும், கொலை யாளிகளையும் விடுதலை செய்திருக்கிறது குஜராத் அரசு. கர்ப்பிணி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வாளிகளை, ஏதோ சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போல மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, லட்டு கொடுத்து வரவேற்றது தேசத்தையே வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது!
கைக்குழந்தையும் கொடூரக் கொலை!
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகளின் ரணம் இன்னும் ஆறவில்லை. அப்போது, குஜராத் முதல்வராக மோடி இருந்தார். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்து, 59 கரசேவகர்கள் உயிரிந்தனர். அந்த ரயிலுக்குத் தீவைத்ததாகச் சொல்லி, குஜராத் முழுவதும்
இஸ்லாமியர்கள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான படுகொலைகள், எண்ணிலடங்கா தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைச் சம்பவங் கள் நடைபெற்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பில்கிஸ் பானோ. தஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான பில்கிஸ் பானோ, அப்போது ஐந்து மாத கர்ப்பிணி. கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 30 பேர்கொண்ட கும்பல், பில்கிஸ் பானோ குடும்பத்தினர்மீது காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்தியது. தாய், சகோதரிகள் உட்பட ஏழு உறவினர்கள் பில்கிஸ் பானோவின் கண்ணெதிரிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
பின்னர், பில்கிஸ் பானோவின் கையில் இருந்த மூன்று வயதுப் பெண் குழந்தையைப் பறித்து, தரையில் ஓங்கி அடித்தது அந்தக் கும்பல். தலை சிதறி இறந்தது அந்தக் குழந்தை. பில்கிஸ் பானோவை நிர்வாணப்படுத்தி, கூட்டாக அவர்கள் வேட்டையாடினர். “கர்ப்பமாக இருக்கிறேன்... என்னை விட்டுவிடுங்கள்” என்ற பில்கிஸ் பானோவின் கதறல், மதவெறி போதையில் இருந்த அந்தக் கும்பலின் காதில் விழவில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக வீசப்பட்ட பில்கிஸ் பானோ, ஓர் ஆதிவாசிப் பெண்ணின் உதவியால் உயிர்பிழைத் தார். அந்தக் கொடூரக் கும்பல் மொத்தம் 14 பேரை படுகொலை செய்தது.
காவல் நிலையத்துக்குச் சென்று பில்கிஸ் பானோ அளித்த புகார், முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அவருக்கு உதவ சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன. அவர்களின் உதவியுடன் சட்டப் போராட்டத்தை நடத்தினார். அதன் விளைவாக, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2008-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உறுதிசெய்தது. அதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், பில்கிஸ் பானோவுக்கு ரூ.5 லட்சம் வழங்க குஜராத் அரசு முன்வந்தது. அதை நிராகரித்த அவர், உச்ச நீதிமன்றத்தை நாடினார். ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசுப் பணி, வீடு ஆகியவற்றை வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
விடுவித்த குஜராத் அரசு!
சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்று குற்றவாளிகளில் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளியின் வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு, கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை (Remission Commission) அமைத்த அரசு, அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, குற்றவாளிகள் 11 பேரையும் ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்தது. எல்லாம் மூன்று மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன. மாநில அரசுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த விடுதலை நடந்திருப்பதாக குஜராத் அரசும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் சொல்கின்றன.
`இதே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாம்’ என்று சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து சொல்லிவந்தனர் என்றாலும், தமிழ்நாடு அரசு அத்தகைய முடிவை எடுக்கத் தயங்கியது; மத்திய அரசின் ஒத்துழைப்பும் அதற்கு இல்லை. ஆனால், குஜராத் மாநில அரசு உறுதியான முடிவை எடுத்திருக்கிறது. அதேநேரத்தில், `கூட்டுப் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களை இழைத்தவர்களுக்கு இத்தகைய சலுகை பொருந்தாது’ என்று சிலர் வாதிடுகிறார்கள்.
கேள்விக்குள்ளாகும் நடுநிலை!
அடுத்த சில மாதங்களில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால், இந்த விடுதலையின் பின்னணியில் அரசியல் கணக்கு இருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. அதற்கு வலு சேர்ப்பதுபோல சில காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. பா.ஜ.க-வின் கோத்ரா தொகுதி எம்.எல்.ஏ-வான ரௌல்ஜி, “இந்த 11 பேரில் சிலர் சுத்த சன்மார்க்க பிராமணர்கள்” என்று நற்சான்று வழங்கியிருக்கிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் 11பேரும்மாலைஅணிவித்துகௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்..
2012-ம் ஆண்டு, டெல்லில் நிர்பயா கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்தது. 2022-ல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மலர்மாலையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
எங்கே செல்கிறது இந்தியாவின் மதவாத அரசியல்?!
…………………………………………………………………………………
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் சொர்க்கத்திற்கும் மற்ற இருவர் நரகத்திற்கும் செல்வர். உண்மையைப் புரிந்து அதனடிப்படையில் தீர்ப்பளிப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார். உண்மையைப் புரிந்தபின் அநியாயமாகத் தீர்ப்பளித்தவர் நரகத்திற்குச் செல்வார்.
(உண்மையை) அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பளிப்பவர் நரகத்திற்குச் செல்வார்.
இதை புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அபூதாவுத்.
தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் அதிகப்படியான அலட்சியத்தையும், கவனக்குறைவையும், அராஜகப் போக்கையும் காண முடிகின்றது. இஸ்லாம் என்பது பிற மதக் கொள்கை, கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப் பெரிய வித்தியாசத்தோடு தனித்து நிற்கின்றது. அந்த வரிசையில் நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இஸ்லாம் ஏராளமான இடங்களின் அழுத்தந் திருத்தமாகவும், ஆழமாகவும் உள்ளங்களில் பதிய வைக்கின்றது. அநீதிக்கு சாட்சியாக இருப்பவர்களையும், அநியாயத்திற்குத் துணை போகின்றவர்களையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மனித சமுதாயத்துக்கிடையில் எழும் பிரச்சனைகள், தகராறுகளை விசாரித்து அவர்களுக்கு நீதி வழங்க நீதிபதிகளை ஏற்படுத்தும் முறை ஆதிகாலம் தொடுத்த ஒன்றுதான்.
ஆனால் நீதிபதிகள் தனியார் குருக்கீட்டாலோ, பண ஆசையினாலோ வேலியே பயிரை மேய நடந்து கொள்வது சமீபகால சாபக் கேடாகும்.
மனசாட்சிக்குப் பயந்து, அநீதி இழைக்கப்பட்டுவோரின் பார்வைக்கு அஞ்சி, சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எரிந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கும் ஒரே நீதிதான் என்ற வகையில் நீதிப்பரிபாலனம் செய்து கொண்டிருந்த நீதிக்காலம் மலையேறிப் போய்விட்டது.
நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுவதால், அநீதி குன்றின் மீதேறி நின்று கை கொட்டிச்சிரிகின்றது. அநீதி பெருகப் பெருகப் நாட்டில் குழப்பங்களும்,
கலகங்களும் மின்னல் வேகத்தில் வெடித்துச் சிதறிவருகின்றன . இஸ்லாம் சொல்லித்தரும் முறையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தால்,
பழைய பொற்காலத்தைக் கண்முன் காணலாம்.
முதலில்,
நீதிபதி ஆசனத்தில் அமர்பவர், இயற்கையிலேயே இறைவனை அஞ்சி நடப்பவராக, சமய சந்தர்ப்பத்துக்கு மாறாதவராக
, சிறந்த பக்திமானாக இருக்கவேண்டும்.
நபிகளாரைவிட ,
நீதிபதி சிறந்த இல்லை எனலாம். ஆனால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுமிடத்து..''நபியே! நீங்கள் மக்களுக்கு தீர்ப்பு வழங்கினால் நீதமுடன் தீர்ப்பு வழங்குங்கள்!'' என எச்சரிக்கின்றான்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உண்மை நீதிபதிகளுக்கு அடையாளமாக நபி தாவூது [அலை]
நபி சுலைமான் [அலை] அவர்களிடம் வந்த ஒரு வழக்கையும், அதற்கு அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் கூறுகின்றான்.
1. நீதி வழங்க கையூட்டும் எதுவும் வாங்கக் கூடாது! என்பதாகும்.
கையூட்டும் வாங்கிக் கொண்டு நீதி வழங்கினால் நீதி சேர வேண்டியவருக்கு சேராது என்பது அனைவருக்கும் அறிந்த பேருண்மையாகும்.
அவர்கள் கையூட்டும் வாங்காதிருக்க வழி , நீதிபதிகள் தன்னிறைவு கொள்ளுமளவு வாழ்க்கைப்படி அளிக்க வேண்டும்.
அதற்கு மேலும் அவர்கள் வாங்கினால்,
அவர்களை உடனடியாக எந்த இரக்கமும் காட்டாமல் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
2. மக்களை அஞ்சாமல் மாபெரும் வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டும் அஞ்ச வேண்டும் என்பதாகும்.
நீதிபதிகள் தீர்ப்பு வாசிக்கும் பொழுது அந்த நீதிதேவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அதில் அநீதி இருக்குமானால்,
அல்லாஹ் தங்களுக்கு தண்டனை வழங்கிவிடுவான் என்ற அச்சம் இருக்கவேண்டும். சத்தியத்தை வாசிக்கும் பொழுது , அதன் விளைவாக எவ்வளவு பெரிய தீங்கு விளையும் என்றிருந்தாலும், அச்சத்தியத்துக்கு ஒரு போதும் துணைபோகக் கூடாது. மனிதர்களை அஞ்சி தீர்ப்பு வழங்குவது நியாயத்தர்ப்பு மக்களின் வயிற்றிலடிப்பதாகும்.
நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவதனால்,
அவர்களுக்கு கெட்ட ஆபத்துகள் ஏற்படும் என்றால் அவர்களுக்கு தக்க பாதுகாப்புத்தருவது அரசின் கடமை.
3. அற்ப ஆசைகளுக்கு அடி பணியக்கூடாது என்பதாகும்.ஏனென்றால்
, வேண்டாத ஆசைகள் வளர வளரத்தானே அதை நிறைவேற்றிக் கொள்ள தீய வழிகளைக் கையாள நேரிடும். பண முதலைகளின் பண மூட்டையைக் கண்டதும் பல்லிளிக்க நேரிடும்? எனவே அளவு கடந்த ஆசை நீதிபதிகளுக்கு கூடாது.
நீதிபதிகள் தம்மிடம் வழக்காடுபவர்களை தமது குடும்பத்தவராக மதிக்க வேண்டும்.
தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் எந்தவொரு தீர்ப்பை விரும்புவார்களோ அதையே மற்றவருக்கும் விரும்புதல் வேண்டும்.
மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இன்பமடைவோரில், ''தமக்கும் வழங்கும் தீர்ப்பு போன்றே மற்றவருக்கும் வழங்கும் நீதிபதிகள் இருப்பர் '' என்று நபி பெருமானார் [ஸல்]
நவின்றுள்ளார்கள்.
பொதுவாக நீதி வழங்குவோருக்கு ஆட்சியிலிருப்போரின் நெருக்கடிகளும்,
மிரட்டல்களும் இருந்து வருவது தொடர்கதையாகும்.
ஆட்சியாளர்கள், நினைத்ததை சாதிக்க தப்பை மறைக்க, ஊழல் அம்பலம் ஏறாமளிருக்க நீதிபதிகளை கருவிகளாக பயன்படுத்திக் கொள்வது உண்டு. ஆனால் நீதிபரிபாலனம் புரிவோர் அவர்களுக்கு சிறிதேனும் அசைந்து கொடுக்ககூடாது.
இன்று நடந்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவ ஆட்சியை நடுத்தர மக்களாகிய அன்பு சகோதரரர்கள் இந்துக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ! முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கக் கூடிய சதிகளுக்கு, சூழ்ச்சிகளுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்! உங்களுக்கும் ஒருநாள் இதுப் போன்று நடக்கக் கூடும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்துக்களும் , முஸ்லிம்களும் என்றும் எப்போதும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள் . அவர்கள் எல்லோரும் சகோதரர்களே!
وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ
فَلَنْ يَّضُرُّوْكَ شَيْــٴًـــا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ
بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
நீர் தீர்ப்பளித்தால் அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன்:5:42)
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நீதியைப் பற்றி கூறிய அனைத்து உபதேசங்களையும் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைபிடிப்போமாக.!
கருத்துகள்
கருத்துரையிடுக