உலகம் இரண்டின் இழுவை ..
🕊️ உலகம் இரண்டின் இழுவை 🕊️
════❁✿❁════
🔹 சில நேரங்களில் வாழ்க்கை நம்மை இரண்டு பக்கங்களாக இழுக்கிறது,
🔸 ஒரு பக்கம் பெற்றோரின் விருப்பம்... மற்றொரு பக்கம் மனைவி மற்றும் பிள்ளைகளின் உரிமை,
🔹 யாரையும் காயப்படுத்த விரும்பாத ஒரு மனிதன், நடுவில் நின்று அமைதியாக உடைந்து கொண்டிருக்கிறான்.
🔸 ஆனால் ஒரு முஸ்லிமின் முடிவு உணர்ச்சியின் அடிப்படையில் இருக்கக்கூடாது;
அல்லாஹ்வின் கட்டளையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
🔹 பெற்றோருக்கு நன்மை செய்வது ஒரு பெரிய வணக்கம்,
🔸 மனைவி, பிள்ளைகளின் உரிமைகளை நிறைவேற்றுவதும் அல்லாஹ் விதித்த கடமையாகும்.
🔹 இரண்டையும் சமநிலைப்படுத்துபவரே உண்மையான வெற்றியாளர்,
🔸 இந்த ஒரு கட்டத்தில் மட்டும் வெற்றி அடைந்து விட்டால்,
🔹அவர் முழு குடும்பவியல் வாழ்வில் வெற்றி அடைந்து விட்டார்...!
🔸 அல்லாஹ் கூறுகிறான் :
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ﴾
"நிச்சயமாக அல்லாஹ் நீதியையும் நன்மையையும் கட்டளையிடுகிறான்."
(ஸூரத்துன் நஹ்ல் 16:90)
🔹 யாருடைய அநீதியாலும் அல்லாஹ்வை மகிழ்விக்க முடியாது,
🔸 யாருடைய மகிழ்ச்சிக்காகவும் அல்லாஹ்வின் எல்லைகளை மீறக்கூடாது,
🔹 சில சமயங்களில் மௌனமாக இருப்பது தீர்வு அல்ல,
🔸 நீதியாக இருப்பதே தீர்வு,
🔹 உன் இதயம் இரண்டாக கிழிந்தாலும்,
🔸 உன் தீர்ப்பு அல்லாஹ்வின் ஷரீஅத்தை விட்டு விலகாதிருக்கட்டும்,
🔹 அல்லாஹ்வை மகிழ்வித்தவன்,
🔸 இறுதியில் மனிதர்களின் இதயங்களையும் அல்லாஹ்வே இணைத்துவிடுவான்.
════❁✿❁════
🔹 பெற்றோர் தரப்பில் ஏற்படும் உளவியல் தவறுகள் ;
🔸 "நாங்களா? இல்லை அவளா?" என்ற தேர்வு செய்ய வைப்பது.
🔹 மகனின் அன்பை, மனைவியுடன் போட்டியாகப் பார்ப்பது.
🔸 திருமணத்திற்குப் பிறகும், மகனின் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் கட்டுப்படுத்த முயற்சிப்பது.
🔹 மனைவியை குடும்ப உறுப்பினராக அல்ல; வெளி நபராக நடத்துவது.
🔸 குற்ற உணர்வை (Guilt) உருவாக்கி மகனை கட்டுப்படுத்த முயற்சிப்பது.
🔹 "நீ மாறிவிட்டாய்" போன்ற வார்த்தைகளால் மனஅழுத்தம் கொடுப்பது.
════❁✿❁════
🔸 மனைவி தரப்பில் ஏற்படும் உளவியல் தவறுகள் ;
🔹 கணவன் பெற்றோருடன் பேசுவதையே சந்தேகமாகப் பார்ப்பது.
🔸 "நான் மட்டும்தான் முக்கியம்" என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவது.
🔹 கணவனின் பெற்றோருடனான உறவை மெதுவாகத் துண்டிக்க முயற்சிப்பது.
🔸 ஒவ்வொரு கருத்து வேறுபாட்டிலேயும் "நீ உன் அம்மா பக்கம்" என்று குற்றம் சாட்டுவது.
🔹 கணவனின் மனஅழுத்தத்தைப் புரிந்துகொள்ளாமல், மேலும் அழுத்தம் கொடுப்பது.
🔸 பிள்ளைகளை குடும்ப மோதலின் கருவியாக பயன்படுத்துவது.
════❁✿❁════
🔹 அந்த மனிதனின் மனநிலை...
🔸 அவன் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சிக்கியவன்.
🔹 ஒரு பக்கம் பெற்றோரின் கண்ணீர்,
🔸 மறுபக்கம் மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு.
🔹 யாரையும் இழக்க விரும்பவில்லை,
🔸 ஆனால் அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கும்போது,
🔹 அவன் உள்ளுக்குள் அமைதியாக உடைந்து கொண்டிருக்கிறான்.
════❁✿❁════
🔹 இஸ்லாம் சொல்லும் தீர்வு,
🔸 பெற்றோருக்கு இஹ்ஸான் (நன்மை) செய்ய வேண்டும்.
🔹 மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நீதி (அத்ல்) செய்ய வேண்டும்.
🔸 அன்பு யாருக்கும் குறையக்கூடாது.
🔹 ஆனால் தீர்ப்பு அல்லாஹ்வின் சட்டத்தின்படியே இருக்க வேண்டும்.
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ﴾
🔸 "நிச்சயமாக அல்லாஹ் நீதியை ஏவுகிறான்.
"
(ஸூரத்துன் நஹ்ல் 16:90)
🤲 யா அல்லாஹ்....!
🔹 எங்கள் குடும்பங்களில் அன்பையும், நீதியையும், பரஸ்பர புரிதலையும் நிலைநாட்டி,
🔸 யாருக்கும் அநீதி செய்யாமல் வாழும் பாக்கியத்தை எங்களுக்கு அருள்வாயாக 🤲
آمين بجاه سيد المرسلين صلى الله عليه وآله وصحبه وسلم 💞
════❁✿❁════
கருத்துகள்
கருத்துரையிடுக