வட்டி ஓர் மா பாவம்!
வட்டி ஓர் மா பாவம்!
-ஜலீல் மதனி.
வட்டி மாபெரும் குற்றம். இது சைத்தான் தீட்டிய திட்டம். இதை வாங்கியவன் அடைவான் நட்டம். இது இறைவன் போட்ட சட்டம்.
வட்டி என்றால் என்ன? என்பதைப்பற்றி நம்மில் அறியாதவர் யாருமில்லை. ஆனால், வட்டியைப் பற்றியும் அதன் தாக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதைப்பற்றியும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?, என்றால் “இல்லை” என்ற பதில் தான் பலமாக எதிரொலிக்கிறது.
வட்டிக்கு வாங்கி தொழில் செய்து குறுகிய காலத்தில் குபேரனாக மாற எண்ணி குழிக்குள் வீழ்ந்த யானையைப்போல், தங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு திண்டாடுகின்ற எத்தனையோ மனிதர் களை நமது சமுதாயத்தில் தினம்தினம் காண முடிகிறது. நம்; ஒவ்வொருவருமே தனக்குத் தெரிந்த சம்பவம் பலதை உதாரணங்களாகக் கூறமுடியும் என்கின்ற அளவிற்கு சம்பவங்கள் மலிந்து கிட க்கின்றன. இருப்பினும் கூட நெருப்பின் பக்கம் செல்லாதே எனத் தடுத்தும் அதில் போய் வீழ்ந்து தன் உயிரையே மாய்;த்துக் கொள்ளும் புற்றீசல் போல் எத்தனையோ படிப்பினைகளையும் சம்பவங்களையும் கண்டும் கேட்டும் கூட சமுதாயத்தில் வட்டித்தொழில் புரையோடிய புற்றுநோயாக தலைத்தோங்கி வள ர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. காரணம் என்னவென்று சற்று சிந்திப்போமானால் உலக ஆடம்பரத்;தின் மேலுள்ள மோகமும் பேராசையும் , அல்லாஹ்வைப் பற்றிய அவனது நரக நெருப்புக்குப் பயமற்ற சைத்தானிய ஊசலாட்டங்களுக்கு அவன் ஆளாகிப் போனதுமே என்பதை தீர ஆராயும்போது விளங்கமுடியும்.
வட்டி மிகப் பெரியதொரு பொருளாதார சுரண்டலாகும். வலியோர் எளியோரை அடிமைப்படுத்தி தன் விருப்பப்படி அவர்களை சுதந்திரமற்ற கைக்கூலிகளாக தம்மிடம் சிக்க வைக்க இஸ்லாத்திற்கு முற்பட்ட காலம் தொட்டே யூதர்கள் வட்டியை தமது மாய வலையாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. இன்றும் கூட வல்லரசு நாடுகளும் பொருளாதார வளர்ச்சிகண்ட நாடுகளும் வறிய நாடுகள் தமக்குப் போட்டியாக முன்னேறிவிடக் கூடாது என்பதற்காக பொருளாதார உதவி எனும் பெயரில் வட்டியை வளங்கி பின் அந்நாட்டின் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை தமது வட்டித் தொகையான வசூலித்து கடைசிவரைக்கும் அந்நாட்டை முன்னேற விடாது தடுத்து அந்நாடே வட்டிக்கடன் தேவையில்லையென முடிவெடுத்தாலும் கூட அந்நாட்டில் சாதி,மத கலவரத்தையோ, உள்நாட்டு யுத்தத்தையோ அல்லது தீவிரவாதத்தையோ திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கி வட்டிப் பாதளத்திலிருந்து அந்நாடுகள் வெளியேறவே விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன எனும் அரசியல் உண்மை அதிகமானோருக்குத் தெரியாது.
வட்டிக்குப் பணம் எடுப்போரின் வகைகள்:
கடைக் காரர்க்ள மற்றும் அங்காடி வியாபாரிகள்:
இவர்கள் தங்களில் அன்றாட வியாபாரத்தேவைக்காக, சந்தைப் போட்டியினை சமாளித்து. தங்களது கடை, மற்றும் வியாபாரத் தளங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மற்ற வியாபாரிகளின் முன்னிலையில் தான் தாழ்ந்தவனாக மதிப்பிடப்படாது டாம்பீகமாகக் காட்டும் போலி பகட்டுக்காகவும்
வரட்டு கௌரவத்திற்காகவும் வட்டிக்குப் பணம் வாங்கி வியாபாரம் செய்கின்றனர். இன்று நமது நாட்டில் பெரும்பாலான சிற்றுண்டிச் சாலைகள், மளிகைக்கடைகள், ஆடை மற்றும் பரிசுப் பொருள் விற்பனையகங்கள் ஆகியவை தினமும் “வட்டி கட்டினால்தான் கடை நடத்தமுடியும்” என்ற நிலையிலேயே உள்ளன..
இதுமட்டுமின்றி, தனது சொந்த பந்தங்களின் மத்தியில் தனது கௌரவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பேராசையால் கடை திறந்த சில மாதங்களிலேயே பல ஆயிரங்களைத் தவறான வழியில் வட்டிக்கு வாங்கி செலவழித்து தனது கடைகளை மேம்படுத்துவர் இதன் பின் ஏற்படும்; கடை வாடகை வீட்டுவாடகை, பிள்ளைகளின் படிப்பு, வாகனம் இப்படி என்னற்ற செலவுகளால், கிணற்றில் விழுந்த பூனையைப்போல் வெளியேற வழிதெரியாது விழிபிதுங்கி, செய்வதறியாது திணறுகின்றனர்.
இவ்வாறு வியாபாரம் செய்வோரில் நேர்மையற்றோர் காலப்போக்கில், வட்டி நெருப்பின் வெப்பம் தாளாமல் தங்களின் இரவோடு இரவாக கடையை காலிசெய்து விட்டு கடன் காரர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு கட்டாருக்கோ துபாய்க்கோ காணாமல் போகின்றனர். போக்கியமுள்ள சிலர் யாருக்கேனும் ஸ்தாபனத்தை கிடைக்கின்ற விலைக்கு விற்று, வட்டிக்கடனை முடிந்தளவு அடைத்துவிட்டு, வேறு ஏதேனும் கடைகளில் சேர்ந்து வேலைசெய்து பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
புதிதாக அந்த ஸ்தாபனத்தை பொறுப்பெடுத்தவரும் ஒருசில நாட்களில் வட்டியெனும் பாதாளச் சாக் கடையை நோக்கி பயணத்தைத் துவங்குகிறார். இது அலைகள் ஓய்வதில்லை போன்ற தொடர்கதை.
இதன் காரணம் என்ன? சிந்திப்போமானால் மனிதனின் பேராசைதான் காரணம் என்பதை அறியமுடியும். . குறுகிய காலத்தில், மிக அதிகமாக சம்பாதித்து, சொத்துக்குவிக்க வேண்டும், சமுதாயத்தில் தன்னைப் பற்றி பெருமையாக பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.?
ஆனால் விதிவிலக்காக இந்த வட்டியெனும் அசுத்தத்தை வெறுத்து சிலர், சொந்த முதலீட்டில் பெட்டிக் கடைவைத்து வியாபாரம் செய்து மிகஉன்னதமான முன்னேற்றத்தைக் கண்டவர்களும் சமூதாயத்தில்இரு க்கத்தான் செய்கின்றனர்.இவர்களைப் பாராட்ட வேண்டும்.
ஆனால் இவர்களின் முன்னேற்றமே, பலருக்கு பொறாமையாக மாறி, வட்டிக்கு வாங்கியாவது நாமும் இதுபோல் வியாபாரத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய ஸ்தாபனங்களை போட்டியாக துவங்கி, தங்களின் அமைதியான வாழ்க்கையை, தாங்களாகவே நாசப்படுத்திக் கொள்ளும் கொடுமையையும் இங்கு தாரளமாக காண முடிகிறது.
அவ்வாறே மைக்ரோ லோன் பினான்ஸ் கம்பனி? எனும் பெயரில் நாட்டில் பெருகியுள்ள கொள்ளைக்காரக் கும்பல் அங்காடி வியாபாரிகளிடம் பத்தாயிரம் தருகிறோம் இருபதாயிரம் தருகிறோம் தினம் 100 ரூபாய்தான் வட்டி என்று ஆசைவார்த்தை காட்டுகின்றனர். பலவீன ஈமானுடைய இவ்வங்காடிகளும் முதலில் பணத்தைப் பெறுவோம், பின் நம்மிடம் இவர்கள் எப்படி வசூலிப்பார்கள் என்று பார்ப்போம், இவர்கள் அடுத்த வாரம் வந்து தேடும்போது நாம் இன்னொரு ஊர்ச் சந்தையில் இருப்போம் என்ற ஏமாற்றும் எண்ணத்தில் கடன்பெறுகின்றனர். ஆனால் வட்டிக்காரர்களோ பலே கில்லாடிகள்.இவரது அடையாள அட்டை இலக்கத்தை வைத்தே இவர்பற்றிய தகவல்களைப் பெறுவதோடு ஏமாற்றி பொல்லுப் போடுவோரிடம் வட்டி வசூலிக்கவென்றே ஒரு ரவுடிப் பட்டாளத்தையும் வைத்திருப்பர். அவர்கள் வீட்டைத் தேடிப்பிடித்து அங்குள்ள பெறுமதி மிகு தங்கநகை போன்ற பொருட்களை அடாவடியாக எடுத்துச் சென்று விடுகின்றனர்;. வட்டிக்கம்பனிpயை ஏமாற்ற நினைத்து தானே ஏமாந்த அவமானத்துடன் பணத்தை எடுத்துக் கொண்டு பொருளை மீட்கச் சென்றால்... அப்பப்பா.. தேடியசெலவு, பயணச்செலவு, உண்ட-குடித்த செலவு இத்யாதி என்று கணக்குக் காட்டி இறுதியில் பொருள் வட்டியில் மூழ்கிப்போய் விட்டதென்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். பத்தாயிரம் வட்டிக்கு பெற்று ஒருலட்சம் பெறுமதிமிக்க பொருளை இழந்த மடயர்கள்தான் இந்த வட்டிக்குக் கடன் பெற்றவர்கள். இன்று இந்த மைக்ரோ லோன் விவாகாரம் நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடன்பெற்றவர்கள் பெண்களாயின் அவர்களிடம் வட்டி வசூலிப்போர் பாலியல் இலஞ்சம் கோரி மிரட்டுவதும் பல பெண்கள் பயத்தினால் தம் மானத்தை விற்று ஈனப் பிழைப்பு நடத்துவதும் சிலர் பயத்தில் தற்கொலை செய்து கொள்வதும் இன்று சகோதர சமூகத்தவர்கள் மத்தியில் அன்றாடம் நிகழும் சாதாரண விடயமாகிப் போய் விட்டது.
சம்பளதாரர்கள், தொழிலாளர்கள்.
இத்தகைய சூழல் ஒருபுறம் என்றால், கம்பெனிகளில் வேலைசெய்து மாதச் சம்பளத்தில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் காக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் பாமர தொழிலாளிவர்க்த்தினரும் வியாபாரிகளைவிட மிகவும் கேவலமாக வட்டி விஷயத்தில் நடந்து கொள்கிறனர். குறிப்பாக குறைந்த ஊதியம் பெறக்கூடிய பணிகளில் இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களில், வட்டியில் சம்பந்தப்படா தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவிற்கு வட்டி வியாபித்து கிளைவிட்டு , எங்கும் நிறைந்திருக்கிறது.
தங்களின் தகுதிக்கு மீறிய செலவு, குடி, புகைத்தல், டீவி, டிஷ், மொபைல் லாட்டரி டிக்கட், மற்றும் அவசியமற்ற ஆடம்பர பொருள்;களின் மேலுள்ள அளப்பெரிய மோகம் போன்றவற்றுக்கு அடிமையாகிய பலர் வட்டிக்குப் பணம் வாங்கியோ அல்லது வட்டியோடு தொடர்புள்ள தவணைக் கொடுப்பனவு முறை அல்லது லீசிங் முறையிலேயே இப்பொருட்களை வாங்குகின்றனர். இன்று சாதாரண ஸ்கூட்டரிலிருந்து ஆட்டோ கார் முதல்கொண்டு அனைத்து வாகனங்களும் முஸ்லிம்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வட்டியுள்ள லீசிங் ஊடாகவே வாங்குகின்றனர்.
மாதம் 15-20- ஆயிரம் சம்பளம் வாங்குபவரின் கையில் கூட தவழ்வது 50,000-100,000 பெருமதியுள்ள ஸ்மோட்மொபைல்,ஐ போன்கள். இவரது வீட்டிள்ள எலக்ட்ரானிக் பொருள்களை மதிப்பிட்டால் இவரது ஒருவருட சம்பளத்திற்கு நிகராக இருக்கும். இவர் நமக்கு மிக நல்ல நண்பராகவே இருப்பார், இவர் திருடமாட்டார் என்பதும் நமக்குத் தெரியும், அப்படியானால் இத்தகைய லாபமற்ற முதலீட்டிற்கு இவரிடம் ஏது இவ்வளவு பணம்?. சற்று ஆழ்ந்து விசாரித்தால் தெரியும், இவர் யாரிடம் எவ்வளவு வட்டிக்கு வாங்கி யுள்ளார் என்பது. இது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.
குடும்பத்தினர்க்கு, தனது மகனோ, கணவரோ, சகோதரனோ, வெளிநாட்டில் என்ன வேலை பார்க்கிறான், அவனது வருமானம் என்ன? என்ற கவலை ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளவ னிடம் எவ்வளவு கேட்டாலும், எப்படியும் வந்து விடும் என நினைத்து, வரவறியாமல், செலவுக் கணக்கை மட்டும் காட்டி மிரட்டுகின்ற குடும்பங் களும் நம்மில் எத்தனையோ?
இத்தகைய தவறான போக்கை பெரும்பாலும் நமது முஸ்லிம் சகோதரர்களே செய்வதைக் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது.சரி, இத்த கைய கொடிய வட்டியைப்பற்றி திருக்குர்-ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
வட்டியை உண்பவர்கள், ஷைத்தான் தீண்டியதால் நினைவிழக்கச் செய்;ப்பட்ட( பைத்தியம் பிடித்தவர் கள்) எழும்புவது போலன்றி அவர்கள் எழமாட்டார்கள். அ(ந்த நிலைக்கு அவர்கள் ஆளான)து, நிச்ச யமாக “வணிகமும் கூட வட்டியைப் போன்றது தான்” என திட்டவட்டமாக அவர்கள்கூறியதால் தான். ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து, அவன் வட்டியை (ஹராமாக்கித்) தடுத்து விட்டான். (அல்பகறா 2:275)
அல்லாஹ், வட்டியை (அதில் எவ்வித அபிவிரு த்தியுமின்றி) அழித்து விடுவான், மேலும் தர்மங்களை (அபிவிருத்தியைக் கொண்டு) வளரச் செய்கிறான், மேலும், பாவியான நிராகரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்பகறா 2:276)
(யூதர்கள்)வட்டியை, அதை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டவர்களாக இருந்தும், (அதனை) வாங்கி வந்ததன் காரணமாகவும், மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டு வந்த தன் காரணமாகவும், அவர்களில் (இத்தகைய) நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.( 4-161)
இறைவேதம் வட்டியைப்பற்றி இங்ஙணம் கடுமையாக சாடுகின்ற நிலையில், அல்லாஹ்வையும், அவனது இறைவேதத்தையும் நம்பிக்கை கொண்டுள்ள நாம், நமது மனசாட்சியை சற்று கேட்போம். ஏதேனும் ஒரு வழியில் வட்டியுடன் சம்பந்தப்பட்டிருக்கும் நம்முடைய ஈமான் எனும் நம்பிக்கை போலியானதா? இல்லையா? வட்டி வாங்குபவனும், கொடுப்பவனும் என்றேனும் நிம்மதியுடன் உறங்கியதுண்டா? நிச்சய மாக இல்லை.
இவ்வுலகத்தில் ஒவ்வொரு மனிதனும், அறிந்தோ அறியாமலோ வட்டியுடன் சம்பந் தப்பட்டிருக்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்றைய உலகம் வட்டியின் கொடுமையை உணரத் துவங்கியுள்ளது. அதன் வெளிப்பாடாகவே, வட்டியில்லா வங்கிகள் இன்று பெரும்பாலான நாடுகளில் துவங்கப் படுகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான மாற்றமே.
இருப்பினும் அல்லாஹ்வை ஏக இறைவனாகவும், திருக்குர்-ஆனை இறைவேதமாகவும், முஹம்மது ரஸ_ல் (ஸல்)அவர்களைத் தங்களின் சத்திய வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்வதாக மார்தட்டிக்கொள்ளும் என்னருமை முஸ்லிம் சகோதரர்களே! இக்கொடிய வட்டியின் கொடூடர தாண்டவத திற்கு எதிராக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
இஸ்லாமியரல்லாத அரசுகளும், வட்டியை எதிர்த்து சட்டங்கள் நிறைவேற்றுகின்ற இன்றைய கால கட்டத்தில், இஸ்லாத்தை பற்றிப்பிடித்துள்ள நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.? நாமும் ஏதேனும் ஒரு வழியில் வட்டியின் பிடியில் சிக்கியிருக்கிறோமா? இல்லையா?
விசுவாசிகளே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசங் கொண்டவர்களாக இருப்பின், வட்டியில் (முன்னர் எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே, (அதை) நீங்கள் செய்யாவிடில் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடமும் போரிடுவதாக பிரகடனம் செய்து விடுங்கள். மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டு விட்டால் உங்கள் செல்வங்களில் அசல் தொகைகள் உங்களுக்கு ஆகுமானதே! நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநியாயம் செய்யாதீர்கள் (அவ்வாறே) நீங்களும் (மூலத் தொகையைப்) பெற்றுக் கொள்வதிலிருந்து அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். ( 2:278-79)
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டியாகவும்) இரட்டிப்பாக்கப்பட்டு, பன்மடங் காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். இதனை தவிர்த்துக் கொண்டால் வெற்றியடைவீர்கள். (ஆலு இம்ரான் 3-130)
அல்லாஹ்வின் பார்வையில் வட்டி வாங்குவோரும், கொடுப்போரும் சமமே, இதற்கான தண்டனையில் எவ்வித பாரபட்சமும் இல்லை. மேலும் வட்டி வாங்கினாலும் கொடுத்தாலும், அது அல்லாஹ்வை போருக்கு அழைப்பதற்க்குச் சமமாகும் என திருக்குர்-ஆன் பறைசாற்றுகின்றதல்லவா?
நபியவர்கள் கூறுகின்றார்கள்..
ஒரு மனிதனை அழித்து, ஒழித்துவிடும் மாபாதகச் செயல்கள் (பெரும்பாவங்கள்) என்னவென்று நான் கூறட்டுமா? என வினவிவிட்டு, அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம், கொலை, வட்டி அநாதைக ளின் சொத்தை அபகரித்தல் யுத்த நேரங்களில் புறமுதுகுகாட்டி ஓடுதல் என அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
வட்டி என்பது பெரும்பாவங்களில் ஒன்று என அல்லாஹ்வும், அவனது தூதரும் உறுதிப்படுத்தி விட்ட பின்னரும், நம்மில் பலர் வட்டிக்கு பணம் கொடுப்பது மட்டுமே பாவம் என்று தெரிகின்றது.அதனால் நம் சமுதாயத்தில் வட்டி வாங்கி உண்பவனை “வட்டிக்காரன்” என இழிவாகபேசி ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து ஏளனமாக பரிகசிப்பதைக் காண்கிறோம். ஆனால் ஏதேனும் தேவைக்காக வட்டிக்கு பணம் வாங்குபவனுக்காக பரிதாபப்படுகிறோம். பாவம்! அவன் வறுமையினால் வட்டிக்குப் பணம் வாங் கும் அளவுக்கு ஏழ்மையில் வாடுகிறான் என அவனது செயலையும் நியாயப்படுத்துகிறோம். இவ்விருவரும் செய்த வட்டிக்குக் கொடுத்தல் வாங்கல் இரண்டுமே ஒரே வகையான பெரும் பாவமே என்பது பலருக்குப் புரிவதில்லை.
அந்தோ! இதைவிட படுபரிதாபம் என்னவெனில், நம்மில் பலரும் வட்டிவாங்குவது ஹராம் என அறிந்திருந்தும், மிகச்சாதாரண பணத் தேவைகளுக்குக் கூட ஏதேனும் நிதி நிறுவனங்களுக்கோ, அடகுக்கடைக்கோ ஓடி, கையில், கழுத்தில் உள்ள நகைகளை அடகு வைத்து பணம் பெறுகிறான். அது மட்டுமின்றி இச்செய லை பிறரிடம் சொல்லி, தான் ஏழ்மையில் இருப்பதாக அநுதாபம் தேடுகிறான். முஸ்லிம் என சொல்லிக்கொள்ளும் நாமும், அவனிடம் கோபம் கொள்வதற்கு பதிலாக, அவனுக்காக அனுதாப ப்பட்டு, ஆறுதல் கூறுகிறோம். ஏன் அடகுவைத் த நகைகளை விற்றுவிட்டு, தனது தேவையைப் நிறைவேற்றக் கூடாதா? . கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதைப்போல் தன் நகையை விற்று இழக்கவும் விருப்பமில்லை, வட்டியை விடவும் விருப்பமில்லை என்ங நிலை.
ஆல்லாஹ்தான் நமக்கு அந்த செல்வத்தை தந்தவன். எனவே தனது தேவைக்கு அதை விற்று பயன்படுத்திவிட்டு மீண்டும் வசதி வரும்போது வாங்கிக் கொள்தே மிகப் புத்திசாலித்தனதும் அல்லாஹ்வுக்கு விருப்பமானதுமாகும். வுpற்றுவிட்டால் மீண்டும் வாங்க முடியாதல் போய்விடுமோ என்று அஞ்சி வங்கியில் அடகு வைக்க எண்ணுவொர் அல்லாஹ் ஹராத்தை செய்த உங்களுக்கு அதை மீட்பதற்கு எப்படி உதவிசெய்வான் என்று எண்ணிப்பாருங்கள்.
மிகப்பெரிய கோடீஸ்வர பிரபுக்களாக உலகில் உலாவந்தவர்கள்கூட,சுனாமி,பூகம்பம் போன்ற அல்லாஹ்வின் சோதனைகளால் ஒரு சில நிமிடங்களில் அன்னக்காவடிகளாக மாறுகின்ற உலக வாழ்க்கையில் கேவலம், அழிந்து போகக் கூடிய நகைகளுக்கு கொடுக்கும் மதிப்பை , அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு நாம் கொடு க்கிறோமா? தெரிந்தே செய்கின்ற இப்பாதகச் செயலை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்?
வட்டியை எதிர்பார்த்து வங்கி, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள், நிலையற்ற இந்நிறுவனங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, என்றும் நிலைத்திருக்கும், அல்லாஹ்வின்மீது ஏன் வைப்பதில்லை?. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதின் லட்சனம் இதுதானா? சிந்திப்பீர்.
அன்புச் சகோதரர்களே! நபியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்:
வட்டியை உண்பவன் (வட்டிக்காரன்) உண்ணக்கொடுப்பவன் (வட்டிக்கு வாங்குபவன்) வட்டிக்கணக்கு எழுதுபவன் (அடகு மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்கு எழுதுபவர்) இதற்கு சாட்சியாக இருப்பவன் இவர்கள் இவர்கள் அனைவரையும் அல்லாஹ் சபிக்கிறான். அனைவரும் குற்றத்தில் சமமானவர்களே! முஸ்லிம் 2990)
அல்லாஹ்வின் சாபத்திற்குப்பின், மனிதன் உருப் பட முடியுமா? இது உலக வாழ்க்கையில் கிடைக்கும் தண்டனை. மறுமையில் என்ன தண்டணை தெரியுமா?
இதோ, நபியவர்கள் கூறியுள்ளார்கள்:
நான் மிஃராஜுக்குச் சென்றபோது நரகத்தைப் பார்த்தேன். அங்கு இரத்த ஆறு ஒன்று ஓடிக் கொண் டிருந்தது. அதன் மத்தியில் ஒரு மனிதன் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவன் ஆற்றை விட்டு வெளியே வர முயற்சித்து, கரையை அடைந்தவுடன் அங்குள்ள ஒருவர் (மலக்கு) பெரிய பாறாங்கல் ஒன்றை அவன் மீது வீசியெறிகின்றார். அவன் மீண்டும் அதே நடு ஆற்றில் சென்று விழுகின்றான். இவ்வாறு வேதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவன் யார் என நான் கேட்டபோது “இவன் தான் வட்டி சாப்பிட்டவன்” என்றார்கள். புகாரி
வட்டியோடு தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை சமமே!. எனும்நபியவர்களில் கூற்றுப் படி,வட்டியோடு தொடர்புடையஅனைவரின் நிலையும் மேற்கூறப்பட்டதாகவே இருக்கும் என்பது உறுதி.
கருத்துகள்
கருத்துரையிடுக