நன்றி மறப்பது நன்றன்று.
. நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்பு, மனிதர்களுக்கு பிறப்பியல்பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ள, ஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது. அத்தோடு, அவனில் வெளிப்படும் நன்றியுணர்ச்சி, அளவற்ற அருளாளன் அல்லாஹ்வையும் அவன் அள்ளி வழங்கியுள்ள அருட்கொடைகளையும் உளமாற ஏற்றுக் கொள்வதையும் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது. وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ‘உமது இரட்சகனின் அருட்கொடையை அறிவிப்பீராக!’ (93:11) என்று, அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அளவற்ற, நிறைவான ஆருள் வளங்களை அறிவிக்குமாறும், அதன் மூலம் நன்றி உணர்வை வெளிப்படுத்துமாறும் அல்குர்ஆன் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது. எனவே, நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற நற்பண்பும், சீரிய குணமும் நபிமார்களின் அடையாளமாகவும் இறை விசுவாசிகளின் சிறப்பான இயல்புகளாவும் சுவனவாசிகளின் தன்மையாகவும் வர்ணிக்கப்படுகிறது. ஏன்? அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகவும் அது உள்ளது. கல்வி...