விருத்தசேதனம் (சுன்னத்)ஏன்

 இஸ்லாம் ஏன் விருத்தசேதனத்தை (Circumcision) வலியுறுத்துகிறது?


அன்பிற்குரிய நண்பர்களே…


இன்று…

இஸ்லாத்தை விமர்சிக்க விரும்புபவர்களில் சிலர்…


“ஏன் முஸ்லிம்கள் விருத்தசேதனம் செய்கிறார்கள்?”


“இது பழமையான ஒரு பழக்கம்தானே?”


என்று கேட்கிறார்கள்.


கேள்வி கேட்பது தவறல்ல.


ஆனால்…


பதிலைத் தேடாமல் விமர்சிப்பதுதான் தவறு.


சிந்தித்துப் பாருங்கள்…


இன்று உலகம் என்ன பேசுகிறது?


தனிப்பட்ட சுகாதாரம்.


உடல் தூய்மை.


தொற்றுநோய்களைத் தடுப்பது.


மருத்துவ விழிப்புணர்வு.


சுகாதாரக் கல்வி.


இவை அனைத்தும் நவீன உலகின் பெருமைகளாகச் சொல்லப்படுகின்றன.


ஆனால்…


பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே…


இஸ்லாம்…


ஒரு மனிதனின் உடலை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வாழ்க்கை முறையாகக் கற்றுத் தந்துவிட்டது.


நபிகளார் கூறினார்கள்:


“தூய்மை என்பது ஈமானின் பாதியாகும்.”

(ஸஹீஹ் முஸ்லிம்)


“அல்லாஹ் பாவமன்னிப்புக் கோருபவர்களையும், தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்.”

(அல்பகரா : 222)


சிந்தித்துப் பாருங்கள்…


ஒரு மதம்…


தூய்மையை…


இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அறிவிப்பது…


எவ்வளவு பெரிய சிந்தனை!


இஸ்லாம்…


வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறது.


உடலைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறது.


ஆடையைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறது.


உணவைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறது.


இயற்கைத் தேவைகளை முடித்த பிறகு…


சுத்தம் செய்வதைக் கட்டாய வாழ்க்கை ஒழுக்கமாக மாற்றுகிறது.


அந்தத் தூய்மையின் ஒரு பகுதிதான்…


விருத்தசேதனம் (Circumcision). ஆணுறுப்பின் நுனி தோலை நீக்குதல்.


இது…


ஒரு இனத்தின் கண்டுபிடிப்பு அல்ல.


ஒரு நாட்டின் கலாசாரம் அல்ல.


இஸ்லாத்தில்…


நபிமார்களின் வழிமுறையாகக் கற்பிக்கப்படுகிறது.


இன்று…

மருத்துவ உலகம் கூறுகிறது…


விருத்தசேதனம்…

சுத்தத்தைப் பேண உதவுகிறது.


சில வகையான தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.


சிறுநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய சில சுகாதாரப் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.


இல்லற வாழ்க்கையிலும் இன்பத்தையும் சௌகரியத்தையும் பேண உதவுகிறது.


இவை மருத்துவ உலகம் கூறும் நன்மைகள்.


ஆனால்…


ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை…


மருத்துவ நன்மை மட்டும் காரணமல்ல.


அது…


இறைத்தூதர்களின் வழிமுறை என்பதாலேயே அதற்கு மதிப்பு உண்டு.


நபிகளார் கூறினார்கள்:


“இயற்கை வழிமுறைகள் ஐந்து: விருத்தசேதனம், மர்மப் பகுதியின் முடியை அகற்றுதல், அக்குள் முடியை நீக்குதல், நகங்களை வெட்டுதல், மீசையை ஒழுங்குபடுத்துதல்.”

(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


அவ்வாறே இஸ்லாம்…


சிறுநீர் கழித்த பிறகு…


சுத்தம் செய்வதை…


மிகவும் வலியுறுத்துகிறது.


நபிகளார் இரண்டு அடக்கஸ்தளங்களை  கடந்து சென்றபோது கூறினார்கள்:


“இவர்கள் இருவரும் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் சிறுநீரிலிருந்து தம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ளவில்லை.”

(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


சிந்தித்துப் பாருங்கள்…


இன்று மருத்துவம்…

“சுத்தமாக இருங்கள்” என்று கூறுகிறது.


ஆனால்…


1400 ஆண்டுகளுக்கு முன்பே…


இஸ்லாம்…


அதை ஒரு இறைக் கட்டளையாக மாற்றியிருக்கிறது.


அன்பிற்குரிய நண்பர்களே…


இஸ்லாம்…


ஒரு மனிதனை…


இறைவனோடு மட்டும் இணைக்கவில்லை.


அவனது…

உடல் ஆரோக்கியத்தையும்…


உள்ளத் தூய்மையையும்…


சமூக ஒழுக்கத்தையும்…


ஒரே நேரத்தில் பாதுகாக்கும் வாழ்க்கை முறையைக் கற்றுத் தந்தது.


அதனால்தான்…


இஸ்லாத்தை…


ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து மதிப்பிடாதீர்கள்.


ஒரு கட்டளையை மட்டும் வைத்து விமர்சிக்காதீர்கள்.


அதன் முழுமையான வாழ்க்கை முறையைப் படியுங்கள்.


அப்போது புரியும்…


இஸ்லாம் ஒரு சடங்குகளின் தொகுப்பு அல்ல.


மனித வாழ்க்கையைப் பாதுகாக்கும் முழுமையான இறை வழிகாட்டல்.


—.  ஹாறூன் ஸஹ்வி  .—

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

தொப்பியில் இல்லை இஸ்லாம்!