திருமண உரை (நிக்காஹ் உரை) .

திருமண உரை (நிக்காஹ் உரை) 


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே மற்றும் மணமக்களே! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இன்றைய இந்த புனிதமான திருமண சபையில்,உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இதே போன்று நாம் அனைவரும் இணைந்து சொர்க்கத்தில் சந்திக்கும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக..ஆமீன்,


3.விஷயங்களை பார்க்க இருக்கின்றோம்.

 1,நிக்காஹ் என்றால் என்ன? 2,மணமக்களுக்கு 14 அறிவுரை

(மணகனுக்கு-7 

மணமகளுக்கு-7+3

3,மணமக்களின் பெற்றோருக்கு 5 அறிவுரை



 1,நிக்காஹ் என்றால் என்ன? 


இஸ்லாத்தில் திருமணம் என்பது வெறும் சடங்கல்லஅது ஆன்மீகம்அன்புவிட்டுக்கொடுத்தல் மற்றும் பொறுப்புகள் நிறைந்த ஒரு புனிதமானவாழ்வியல் அக்ரிமெண்ட்  (agreement )

உடன்படிக்கையாகும்.


1. திருமணம் ஒரு இபாதா (வணக்கம்):

இஸ்லாத்தில் திருமணம் என்பது துறவறத்திற்கு எதிரானதுஅது ஒருமகத்தான வணக்க வழிபாடாகும்.

எனவே எனது சுன்னாவை (வழியைபுறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர்அல்ல" எனக் கூறிஇல்லற வாழ்வை வணக்கமாக உயர்த்திக் காட்டினார்கள்.


2. திருமணம் ஒரு உறுதியான ஒப்பந்தம் (மிஸாகன் கலீழா):

திருமணம் என்பது அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்துச் செய்யப்படும் புனிதஒப்பந்தமாகும்.

  • நபிகளாரின் எச்சரிக்கை: இறுதி ஹஜ்ஜின் போது லட்சக்கணக்கானதோழர்கள் மத்தியில் பெருமானார் (ஸல்அவர்கள் உரையாற்றும்போது"மக்களேபெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்ஏனெனில் நீங்கள் அவர்களை அல்லாஹ்வின்பெயரால் அடைக்கலமாகப் பெற்றுக்கொண்டீர்கள்அல்லாஹ்வின்வார்த்தையைக் கொண்டே அவர்களின் கற்பை உங்களுக்குஹலாலாக்கிக் கொண்டீர்கள்" என்று பிரகடனப்படுத்தினார்கள்.


ஒரு மனிதனின் உண்மையான உயர்வு அவரது பதவி, செல்வம் அல்லது புகழால் அளவிடப்படுவதில்லை. மாறாக,


அவர் தனது குடும்பத்தினருடனும் குறிப்பாக தனது மனைவியுடனும் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதிலேயே அவரது நற்குணம் வெளிப்படுகிறது.


அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:


“உங்களில் சிறந்தவர், தனது குடும்பத்தாரிடம் (மனைவியரிடம்) சிறந்தவரே. நான் என் குடும்பத்தாரிடம் உங்களில் மிகச் சிறந்தவன்.”


இந்த ஹதீஸ், இல்லற வாழ்க்கை அன்பு, கருணை, மரியாதை மற்றும் பொறுமையின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.


ஒரு நல்ல கணவன்


• மனைவியை மதிப்பார்.

• இனிமையாகப் பேசுவார்.

• அவளுடைய குறைகளை மட்டும் பார்க்காமல், அவளுடைய நற்குணங்களையும் பாராட்டுவார்.

• குடும்பத்தில் அமைதியையும் அன்பையும் நிலைநாட்ட பாடுபடுவார்.


ஒரு நல்ல குடும்பமே நல்ல சமூகத்தின் அடித்தளம். ஆகவே, நமது இல்லங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியை நடைமுறைப்படுத்துவோம்.


“சிறந்த முஸ்லிம் ஆக விரும்பினால், முதலில் சிறந்த கணவனாக இருங்கள்.”


அல்லாஹ் நம் அனைவரின் இல்லற வாழ்விலும் அன்பு, கருணை மற்றும் பரக்கத்தை அருளட்டும்.


நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மணமக்களை வாழ்த்தும்போது பின்வரும்துஆவை ஓதுவார்கள்


بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

  • பொருள்:
    "
    அல்லாஹ் உங்களுக்கு உங்களின் நிக்காஹ்வில் அருள் புரிவானாகஉங்கள் மீது அவனது பாக்கியங்களை வழங்குவானாகஉங்கள்இருவரையும் நல்ல முறையில் இணைத்துவைப்பானாக!" 

நபிகளார் காட்டிய வழிமுறையும் பரக்கத்தும்

இறையருள் நிறைந்த திருமணம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுப்படி, குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே மிகவும் பரக்கத் (இறையருள்) நிறைந்த திருமணம் ஆகும்.


பரக்கத் என்றால் என்ன?: நம்மிடம் உள்ள குறைந்த வருமானம் அல்லது பொருளாதாரத்திலேயே நமது அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகி, யாரிடமும் கடன் வாங்காமலும், நோய்கள்/விபத்துகள் போன்ற தேவையில்லாத செலவுகள் இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதே "பரக்கத்" ஆகும்.


ஆடம்பரமும் வீண் செலவுகளும்

புகழ் கிடைக்காது: ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து பிரம்மாண்டமாகத் திருமணம் நடத்துவதால் மனிதர்களின் திருப்தியோ, உண்மையான புகழோ கிடைப்பதில்லை; மாறாக சாப்பாட்டிலும் ஏற்பாடுகளிலும் குறைகளை மட்டுமே பேசுவார்கள்.


 நபித்தோழர்களின் முன்மாதிரி: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மண்டபங்கள், சீரியல் லைட்டுகள், ஆடம்பர அழைப்பிதழ்கள் போன்றவை இருக்கவில்லை. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) போன்ற மாபெரும் செல்வந்தர்கள் கூட, நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது எனும் அளவுக்கு மிக மிக எளிமையாகவே திருமணம் முடித்துக் கொண்டனர்.


2,மணமக்களுக்கு அறிவுரை,


1️⃣ கணவனுக்கு நபிகளார் (ஸல்) காட்டிய வழிகாட்டல்கள் (மனைவியைப் பற்றிய பொறுப்புகள்)


1.ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல் (ஆசையோடு நோக்குதல்):

கணவன்-மனைவிக்கிடையே இருக்கும் அன்பும் ரொமான்ஸும்(அன்பளிப்பும்இஸ்லாத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் செயலாகும்.

  • வரலாற்றுச் சம்பவம்: அன்னை ஆயிஷா (ரழிஅவர்களோடு நபிகளார்(ஸல்அவர்கள் ஓட்டப்பந்தயம் வைத்த வரலாற்றுச் சம்பவம் அனைவரும்அறிந்ததே!  


அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களின் தோளுக்குப் பின்னால் நின்று, பள்ளிவாசலில் அபிசீனியர்கள் (ஹபஷா வாசிகள்) நடத்திய ஈட்டிப் போர்ப் பயிற்சியை / விளையாட்டைப் பார்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹதீஸ் 


அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


"ஒரு பெருநாள் தினத்தில் அபிசீனியர்கள் (ஹபஷா தேசத்தவர்கள்பள்ளிவாசலில் ஈட்டி விளையாட்டுப் பயிற்சி (போர்ப் பயிற்சிஎடுத்துக்கொண்டிருந்தார்கள்.

நபிகளார் (ஸல்அவர்கள் என்னிடம்'ஆயிஷாவே! நீ அதைப் பார்க்க ஆசைப்படுகிறாயா?' என்று கேட்டார்கள்நான் 'ஆம்என்றேன்.

உடனே அவர்கள் என்னை தமக்கு உடன்புறமாக நிற்க வைத்தார்கள்என் கன்னம் நபிகளாரின் கன்னத்தோடு பட்டுக் கொண்டிருக்க, அவர்களின் தோள்பட்டைக்கு பின்னால் மறைந்து நின்று நான் அந்த விளையாட்டைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பெருமானார் (ஸல்அவர்கள் (அபிசீனியர்களை நோக்கி), 'அர்ஃபிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்!' என்று உற்சாகப்படுத்தினார்கள்.

எனக்குப் பார்த்துப் போதுமென்றாகும் வரை நபிகளார் (ஸல்அவர்கள்எனக்காக நின்று கொண்டே இருந்தார்கள்பிறகு 'போதும் அல்லவா?' என்றுகேட்டார்கள்நான் 'ஆம்என்றதும், 'அப்படியானால் போய்க்கொள்என்றார்கள்."

📚 நூல்: ஸஹீஹுல் புகாரி (ஹதீஸ் எண்: 454, 5190, 5236), ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 892).

💡 இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்தும் பாடம்:

# மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பளித்தல்: பெருமானார் (ஸல்அவர்கள்உலகிற்கே தலைவராக இருந்தபோதிலும்தன் இளம் மனைவியின்விருப்பத்தைப் புரிந்து கொண்டுஅவர் பார்க்கும் வரை பொறுமையோடுநின்று துணை நின்றார்கள்.

# அன்பின் உச்சம்: மனைவியை தன் தோளுக்குப் பின்னால் நிற்க வைத்துகன்னத்தோடு கன்னம் சாய்த்து அந்த விளையாட்டைக் காணச் செய்தநளினமும் அன்பும் பெருமானாரின் இல்லறத்திற்கு அழகான சான்றாகும்.


மேலும்அன்னை ஆயிஷா (ரழிஅவர்கள் பானம் குடித்து வைத்தபாத்திரத்தை வாங்கிஅன்னை ஆயிஷா அவர்களின் உதடுகள் பட்ட அதேஇடத்தில் பெருமானார் (ஸல்அவர்களும் தம் உதடுகளை வைத்துப்பருகுவார்கள்இந்த அளவுக்கு மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவதுநபிகளாரின் சுன்னாவாகும்.

2.மன்னித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்:

மனிதர்களிடம் குறைகள் இருப்பது இயற்கைமனைவியின் சிறுதவறுகளைப் பெரிதுபடுத்தாமல் மன்னிப்பது கணவனின் சிறந்த பண்பாகும்.

  • வரலாற்றுச் சம்பவம்: ஒருமுறை நபி (ஸல்அவர்கள் அன்னை ஆயிஷா(ரழிஅவர்களின் வீட்டில் இருந்தபோதுமற்றொரு அன்னை உணவைஒரு தட்டில் கொடுத்து அனுப்பினார்கள்பொறாமையின் காரணமாகஆயிஷா (ரழிஅவர்கள் அந்தத் தட்டைத் தட்டிவிடஅது உடைந்து உணவுசிதறியதுநபிகளார் (ஸல்அவர்கள் கோபப்படாமல்கீழே அமர்ந்துஉடைந்த தட்டின் துண்டுகளையும் உணவையும் சேகரித்துக்கொண்டேசிரித்த முகத்துடன் தோழர்களை நோக்கி"உங்கள் தாயாருக்குக்கொஞ்சம் பொறாமை வந்துவிட்டதுசாப்பிடுங்கள்" என்று கூறிச்சூழ்நிலையைச் சாந்தப்படுத்தினார்கள்.

3.குடும்பத்திற்காக தாராளமாக செலவழித்தல்:

குடும்பத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் அல்லாஹ்விடத்தில்தர்மமாக (ஸதகாஎழுதப்படுகிறது.

  • நபிகளாரின் பொன்மொழி: "ஒரு தினார் அல்லாஹ்வின் பாதையில்செலவிடப்படுகிறது;              ஒரு தினார் அடிமையை விடுவிக்கச்செலவிடப்படுகிறது;            ஒரு தினார் ஏழைக்கு தர்மமாகவழங்கப்படுகிறதுஒரு தினார் குடும்பத்திற்காகச் செலவிடப்படுகிறதுஇவற்றில் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த தினார் எதுவெனில்உனதுகுடும்பத்திற்காக நீர் செலவிட்ட தினாரே ஆகும்!" (முஸ்லிம்)

4.மனைவியின் குடும்பத்தாரை மதித்தல்:

மனைவியை நேசிப்பது என்பது அவளது பெற்றோரையும்உறவினர்களையும் நேசிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

  • வரலாற்றுச் சம்பவம்: அன்னை கதீஜா (ரழிஅவர்கள் மரணித்து பலஆண்டுகள் ஆகியும்வீட்டில் ஓர் ஆடு அறுக்கப்பட்டால்கதீஜா (ரழிஅவர்களின் தோழிகளின் வீடுகளுக்கு நபிகளார் (ஸல்அவர்கள்அன்பளிப்பாக இறைச்சியை அனுப்பி வைப்பார்கள்


  • அன்னை கதீஜா (ரழி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரழி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வந்த நிகழ்வு 

அன்னை கதீஜா (ரழி) அவர்கள் மரணித்த பிறகும், அவர்களின் குரலை ஒத்திருந்த சகோதரியின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பும், கதீஜா (ரழி) அவர்களின் நினைவு…

  • அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:    ஒருமுறை கதீஜா அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வர அனுமதி கேட்டார். ஹாலா அனுமதி கேட்கும் குரலானது அன்னை கதீஜா (ரழி) அவர்கள் அனுமதி கேட்கும் ஸ்டைலையும் குரலையும் அச்சு அசலாக ஒத்திருந்தது. அதைக் கேட்டவுடன் நபிகளார் (ஸல்) அவர்கள் கதீஜாவின் நினைவால் சிலிர்த்துப்போய், அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த குரலில், 'யா அல்லாஹ்! இது ஹாலா!' என்று கூறினார்கள்.
  • நபிகளார் கதீஜாவின் நினைவில் மூழ்கியதைக் கண்ட) எனக்குப் பொறாமை ஏற்பட்டது. நான், 'இறைத்தூதர் அவர்களே! சிவந்த வாயையுடைய (பற்கள் விழுந்த) குரைஷி மூதாட்டிகளில் ஒருவரைப் பற்றி இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே! அல்லாஹ் அவருக்குப் பதிலாக அவரை விடச் சிறந்தவரை (அதாவது என்னை) உங்களுக்குத் தந்துவிட்டானே!' என்று கேட்டேன்."
  • அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் இப்படிக் கூறியதும், நபிகளார் (ஸல்) அவர்கள் கோபமடைந்து இவ்வாறு கூறினார்கள்: இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! 
  • அல்லாஹ் கதீஜாவை விட சிறந்த ஒருவரை எனக்குத் தரவில்லை! மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஈமான் கொண்டார் (நம்பினார்). 
  • மக்கள் என்னை பொய்ப்பித்த போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். 
  • மக்கள் எனக்கு அனைத்தையும் மறுத்த போது தன் செல்வத்தையெல்லாம் எனக்கு வாரி வழங்கி உதவினார். 
  • மற்ற மனைவிகள் மூலம் எனக்குக் கிடைக்காத குழந்தைப் பாக்கியத்தை அல்லாஹ் அவர் மூலம் மட்டுமே எனக்கு வழங்கினான்!"       
  • அன்றிலிருந்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், "இதற்குப் பிறகு நான்ஒருபோதும் கதீஜாவைப் பற்றி தவறாகவோ பொறாமையோடே பேசமாட்டேன்" என்று உறுதியேற்றார்கள்.
  • அந்த அளவுக்கு மனைவியின் தொடர்புகளைக்கண்ணியப்படுத்தினார்கள்.

5.தனிமையில் கண்டித்தல் (மென்மை பேணுதல்)

மனைவியிடம் குறையைக் கண்டால்அதை நாலு பேர் அறியஅவமானப்படுத்தக் கூடாது.

  • உதாரணம்: நபி (ஸல்அவர்கள் ஒருபோதும் தம் மனைவியரைஅடித்ததோகடுமையாகப் பேசியதோ இல்லைகுறைகள் இருந்தால்தனிமையில் அழைத்துமென்மையான முறையில் உபதேசம் செய்வதேநபிகளாரின் வழியாகும்.

6.குடும்ப விஷயங்களில் பரஸ்பரம் கலந்தாலோசித்தல்:

குடும்பத்தின் முடிவுகளில் மனைவியின் கருத்துக்கும் முக்கியத்துவம்அளிக்க வேண்டும்.

  • வரலாற்றுச் சம்பவம்: ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போதுதோழர்கள் மனவேதனையில் இருந்ததால் தலைமுடியை இறக்கிஇஹ்ராமை களைய தயங்கினார்கள்அப்போது அன்னை உம்மு ஸலமா(ரழிஅவர்களிடம் நபி (ஸல்அவர்கள் ஆலோசனை கேட்டார்கள்அன்னை அவர்கள்"இறைத்தூதர் அவர்களேநீங்கள் யாருடனும்பேசாமல் சென்று உங்கள் தலைமுடியை இறக்கி குர்பானி கொடுங்கள்தோழர்கள் உங்களைப் பின்பற்றுவார்கள்" என்றார்கள்நபிகளாரும்அந்த ஆலோசனையை ஏற்றுச் செய்தார்காரியமும் நன்மையாகமுடிந்தது.

7.வீட்டு வேலைகளில் உதவி செய்தல் & கண்ணியத்தைப் பாதுகாத்தல்:

வீட்டு வேலைகளை மனைவியின் தலையில் மட்டுமே சுமத்தக் கூடாது.

  • ஹதீஸ் ஆதாரம்: அன்னை ஆயிஷா (ரழிஅவர்களிடம்"நபிகளார்வீட்டில் என்ன செய்வார்கள்?" என்று கேட்கப்பட்டபோது"அவர்கள்குடும்பத்தாருக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்தொழுகைநேரம் வந்துவிட்டால் தொழுகைக்குச் சென்று விடுவார்கள்" என்றார்கள்(புகாரி)தம் ஆடைகளைத் தாமே தைப்பதுகாலணிகளைப்பழுதுபார்ப்பது என பெருமானார் எளிமையாக வாழ்ந்தார்கள்.

 மனைவியின் கடமைகளும் பண்புகளும்

நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழி: > "ஒரு பெண் ஐந்து வேளைதொழுதுரமலான் மாதத்தில் நோன்பு நோற்றுதன் கற்பையும் பாதுகாத்துதன் கணவனுக்கும் கீழ்ப்படிந்து நடந்தால்அவள் சொர்க்கத்தின் எந்தவாசலின் வழியாகவும் நுழையலாம்." (அஹ்மத்)


1.ஆதரவின்றி விடாமல் பக்கபலமாக இருத்தல்:

கஷ்ட காலங்களிலும் மன அழுத்தங்களின் போதும் கணவணை தனியாக விடாமல் பக்கபலமாக நிற்க வேண்டும்.


  • வரலாற்றுச் சம்பவம்: ஹிரா குகையில் முதன்முறையாக வஹி(இறைச்செய்திவந்தபோது நபிகளார் (ஸல்அவர்கள் உடல் நடுங்கிவீட்டிற்கு வந்தார்கள்அப்போது அன்னை கதீஜா (ரழிஅவர்கள்நபிகளாரைப் போர்த்தி"அல்லாஹ் உங்களை ஒருபோதும்கைவிடமாட்டான்ஏனெனில் நீங்கள் ஏழைகளுக்கு உதவுகிறீர்கள்விருந்தின உபசாரம் செய்கிறீர்கள்" என்று ஆறுதல் கூறி பக்கபலமாகநின்றார்கள்அதேபோல கணவனும் மனைவியின் கஷ்ட காலத்தில்தூணாக நிற்க வேண்டும்.


2.கணவரை மதித்தல் மற்றும் கண்ணியப்படுத்துதல்: கணவனின்உழைப்பையும் தியாகத்தையும் மதித்துகுடும்பத்தின் தலைவனாகஅவனுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

3.அவசியமின்றி ஏசாமல்/சண்டையிடாமல் இருத்தல்: குடும்பத்தில்அமைதியை சீர்குலைக்கும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்நாவடக்கம்இல்லறத்தைக் காக்கும்.

4.கணவனின் உடைமைகளையும் மானத்தையும் பாதுகாத்தல்: கணவன்இல்லாத நேரத்தில் அவனது பொருளாதாரம்வீடு மற்றும் தன் கற்பைப்பாதுகாப்பது சிறந்த மனைவியின் இலக்கணமாகும்.

5,வீண் செலவுகளைக் குறைத்தல்.

 (அன்னை பாத்திமா (ரழி) அவர்களின் வாழ்க்கை): * வரலாற்றுச் சம்பவம்:அன்னை பாத்திமா (ரழிஅவர்கள் மாவாட்டும் திரிகையைச் சுற்றிச் சுற்றிஅவர்களின் கைகளில் தழும்புகள் ஏற்பட்டனதண்ணீர் சுமந்து மார்பில் வடுஉண்டானதுஇருப்பினும்கணவர் அலி (ரழிஅவர்களின் பொருளாதாரநிலை உணர்ந்துஅவர்களிடம் அளவுக்கு அதிகமான சிரமங்களைஒருபோதும் கோரியதில்லைவறுமையிலும் பொறுமை காத்து வாழ்ந்தஅன்னை பாத்திமா (ரழிஅவர்களே உலகப் பெண்களுக்குச் சிறந்தமுன்மாதிரி!

7.மார்க்க விஷயங்களில் ஊக்கப்படுத்துதல்:

 நபிகளாரின் துஆ: "இரவில் எழுந்து தொழுதுதன் கணவனையும்எழுப்பிவிடும் மனைவி மீது அல்லாஹ் அருள் புரிவானாகஅவன்எழாவிட்டால் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பும் மனைவிக்குஅல்லாஹ் அருள் புரிவானாக!" என்று நபி (ஸல்அவர்கள்பிரார்த்தித்தார்கள்கணவனை ஹலாலான வழியிலும்தொழுகையிலும்நிலைநிறுத்துவது மனைவியின் பொறுப்பாகும்.


3,மணமக்களின் பெற்றோருக்கு அறிவுரை


(பெற்றோர்கள் மற்றும் மாமனார் மாமியார் கடைப்பிடிக்க வேண்டியகடமைகளையும்அவர்களைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கானஅறிவுரைகள்

🏡 மாமியார் & குடும்பப் பெரியோர்களுக்கான விரிவான வழிகாட்டல்

திருமணம் என்பது இரு நபர்களை மட்டும் இணைப்பதில்லைஅது இரண்டுகுடும்பங்களையும் இணைக்கிறதுஒரு புதுமனைவி தன் பிறந்த வீட்டைவிட்டுவிட்டு வந்து வாழும் புதிய சூழலில்மாமியாரின் அரவணைப்பும்வழிகாட்டலும் மிக முக்கியமானவை.

1.மருமகன்- மருமகளைத் தன் சொந்த மகன் மகளாகப் போன்று பாவித்தல்

  • அன்பும் அரவணைப்பும்: ஒரு பெண் தன் பெற்றோரையும்பிறந்தவீட்டையும் பிரிந்து உங்களுடைய வீட்டிற்கு வரும்போதுஅவளுக்குஏற்படும் பயத்தையும் தயக்கத்தையும் போக்குவது மாமியாரின் முதல்கடமையாகும்.
  • அன்னை கதீஜா (ரழி) அவர்களின் முன்மாதிரி: பெருமானார் (ஸல்அவர்கள் தம் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர்களை அன்போடும்பரிவோடும் அரவணைத்துக் கொண்டார்கள்அதேபோல் மருமகளிடம்அன்பையும் பரிவையும் வெளிப்படுத்த வேண்டும்.

2.சிறு குறைகளைப் பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல்

  • இயல்பான தவறுகளை மன்னிப்பது: புதிய சூழலில் சமையல்வீட்டுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் மருமகளுக்கு ஆரம்பத்தில் தவறுகள்நேரலாம்அதை மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டிஅவமானப்படுத்தாமல்தனியாக அழைத்து தாயைப் போல்மென்மையாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • குர்ஆன் வசனம்: > "எவர்கள் கோபத்தை விழுங்கிமனிதர்களைமன்னிக்கிறார்களோ (அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்). அல்லாஹ்நன்மைகள் செய்வோரையே நேசிக்கிறான்." (சூரா ஆல் இம்ரான்: 134)

3.தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்தல் (சுதந்திரம் அளித்தல்)

  • கணவன்-மனைவி இடைவெளி: புதுத்தம்பதியர் தங்களுக்குள்புரிதலையும் அன்பையும் வளர்த்துக் கொள்ள அவர்களுக்குச்சுதந்திரமும் நேரமும் தேவைஅவர்களின் ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் அல்லது தனிப்பட்ட முடிவுகளிலும் தேவையற்ற தலையீடுசெய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • மருமகளின் உழைப்பை அங்கீகரித்தல்: மருமகள் குடும்பத்திற்காகச்செய்யும் சிறிய நற்செயல்களையும்சமையல் போன்றவற்றையும்மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டுவது அவளதுதன்னம்பிக்கையையும் அன்பையும் இரட்டிப்பாக்கும்.

4.மருமகளின் பிறந்த வீட்டைக் கண்ணியப்படுத்துதல்

  • மதிப்பளித்தல்: மருமகளின் பெற்றோரையும் அவளது குடும்பத்தாரையும்தாழ்வாகப் பேசுவதோகுறை கூறுவதோ கூடாது.
  • அன்பளிப்புகள் பரிமாறுதல்: மருமகளின் பெற்றோருடன் நல்லுறவைப்பேணுவதும்பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பரஸ்பரம்அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வதும் குடும்பத்தின் பிணைப்பைவலுப்படுத்தும்.

5.வரதட்சணை மற்றும் பொருளாசை இல்லாமல் இருத்தல்

  • நபிகளாரின் எச்சரிக்கை: மருமகளிடம் இருந்தோ அல்லது அவளதுபெற்றோரிடம் இருந்தோ நகைகள்பணம்பொருட்கள் போன்றவற்றைஎதிர்பார்ப்பதும்கட்டாயப்படுத்துவதும் மார்க்கத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட செயலாகும்.
  • அன்னை பாத்திமா (ரழிஅவர்களின் திருமணத்தை மிக எளிமையாகநடத்தி முடித்ததே நமக்குச் சிறந்த முன்மாதிரியாகும்.

🌸 மருமகள் மாமியாரை அணுக வேண்டிய முறை

இதேபோன்றுஒரு மருமகளும் தன் மாமியாரிடம் நடந்துகொள்ள வேண்டியசில முக்கியமான வழிகாட்டல்கள்:

  1. தாயைப் போல் மதித்தல்: கணவரைப் பெற்றெடுத்துஅவரை வளர்த்துஆளாக்கிய தாய் என்ற முறையில் மாமியாருக்கு உரிய மரியாதையைவழங்க வேண்டும்.
  2. அனுபவத்திற்கு மதிப்பளித்தல்: மாமியாரின் நீண்டகால வாழ்க்கைஅனுபவத்தையும் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது இல்லறத்திற்குஅமைதியைத் தரும்.
  3. பொறுமை பேணுதல்: மாமியார் சில நேரங்களில் கோபப்பட்டாலும்அல்லது கண்டித்தாலும்அதைத் தன் தாய் சொல்வது போல்எடுத்துக்கொண்டு பொறுமை காப்பது நன்மையைப் பெற்றுத் தரும்.

🤲 கூட்டுத் பிரார்த்தனை (துஆ)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا > "எங்கள் இறைவாஎங்கள் துணைவியரிடமிருந்தும்எங்கள் சந்ததியினரிடமிருந்தும்எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாகஇன்னும் இறைஅச்சமுடையோருக்கு எங்களை வழிகாட்டிகளாக ஆக்குவாயாக!" (சூராஅல்ஃபுர்கான்: 74)

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுவிட்டுக் கொடுத்து வாழும்போதுதான் அந்த இல்லம் சொர்க்கத்தின்சோலையாக மாறுகிறது.




🤲 முடிவுரை & துஆ (பிரார்த்தனை)

நபிகளார் (ஸல்அவர்கள் புதுமணத் தம்பதிகளுக்காகக் கற்றுத் தந்தபுகழ்பெற்ற துஆவுடன் இந்த உரையை நிறைவு செய்வோம்:

بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ > "பாரகல்லாஹு லக்க, வபாரக்க அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ கைர்" > (அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்செய்வானாகஉங்கள் மீது அவனது அருளைப் பொழிவானாகஉங்கள்இருவரையும் நன்மையில் ஒன்றுசேர்ப்பானாக!)

 ஆக்கிரு தஃவாஹும் அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

தொப்பியில் இல்லை இஸ்லாம்!

மண்ணறை வேதனை 001